சன் குடும்பம் விருதுகள் ஒரு பார்வை !!!

“சன் குடும்பம் விருதுகள்” ஒரு பார்வை !!!

சன் டிவி எப்பவும் தமிழ் தொலைகாட்சிகளில் ஒரு முன்னோடி என்றே சொல்லலாம்.பல்வேறு விதமான நிகழ்சிகளால் தமிழ் மக்களை கவர்ந்து வருகிறது. அதில் அனைத்து தரப்பட்ட வயதினரையும் கவர்ந்த தொலைக்காட்சி தொடர்களும் ஒன்று. தொலைக்காட்சி தொடர் மற்றும் அதன் நட்சத்திரங்களை பெருமைப்படுத்த விரும்பியது சன் டிவி.

சன் குடும்பம் விருதுகள் 2010

அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த பட்டதுதான் “சன் குடும்பம் விருதுகள்”.
இதுவரை வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு வந்த வேலையில்,
தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சின்னத்திரை தொடர் நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வை அறிமுகப்படுத்தியது சன் டிவி.

அந்த சமயத்தில் ஒளிபரப்பான தொடர்களின் நட்சத்திரங்களை வைத்து சன் குடும்பம் விருதுகள் பிரத்தியேக பாடலோடு ஆரம்பமானது.

Sun Kudumbam Awards Theme Song https://youtu.be/zqSP2p1IL_4

தமிழகம் முழுவதும் சன் குடும்பம் விருது குழு சென்று சிறந்த நட்சத்திரங்களை தேர்வு செய்ய மக்களிடம் நேரடி வாக்கெடுப்பு நடத்தினர்.இவ்வாக்கெடுப்பில் சிற‌ந்த நடிக‌ர், நடிகை, ‌வி‌ல்ல‌ன் என பல்வேறு ‌பி‌ரிவுக‌ளி‌ல் ‌விருது‌க்கு‌ரியவ‌ர்களை, ச‌ன் டி‌வி பா‌ர்வையாள‌ர்க‌ள் தே‌ர்‌ந்தெடு‌ப்பார்கள்.அதன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும்.

முதல் பதிப்பான “சன் குடும்பம் விருதுகள்” வழங்கும் விழா, சென்னையில் பிரமாண்டமான முறையில் நடந்தது. சன் டி.வியில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் தொடர்கள், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளன. இத்தொடர்களில் நடித்த சிறந்த கலைஞர்கள் மற்றும் பணியாற்றிய சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து, அவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், சன் டி.வியுடன் நீண்ட நாட்களாகப் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சியை ‌நடிகை க‌ஸ்தூ‌ரி மற்றும் நடிகர் ரிஷி தொகு‌த்து வழங்கினார்.

திருமதி செல்வம் தொடர் அதிகபடியான விருதுகளை கைப்பற்றியது.

“சன் குடும்பம் விருதுகள் 2012”

சன் குடும்பம் விருதுகளின் இரண்டாம் பதிப்பு 2012 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த தொடரின் விருதை திருமதி செல்வம் தொடர் மீண்டும் வென்றது. நீண்ட நாட்களாக டி.வி தொடரின் நேரத்தை தக்கவைத்துக் கொண்டதற்கான விருது ராதிகா சரத்குமார்க்கும், சிறந்த நடிகை சிறப்பு விருது தங்கம் தொடருக்காக ரம்யா கிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டன.
சிறந்த நடிகர் திருமுருகன் (நாதஸ்வரம்),
சிறந்த நடிகை அபிதா (திருமதி செல்வம்),
சிறந்த இயக்குனர் எஸ்.குமரன் (தென்றல்) ஆகியோர் விருதை வென்றனர்.நிகழ்ச்சிகளை தீபக், ஐஸ்வர்யா, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

“சன் குடும்பம் விருதுகள் 2014”

2014 ஆண்டுக்கான விழா, மாமல்லபுரத்தில் உள்ள கான்புளூயன்ஸ் கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. இந்த முறை சிறந்த தொடராக தெய்வமகள் தொடர் தேர்ந்தெடுக்க பட்டது. சிறந்த நடிகராக தென்றல் தொடருக்காக தீபக், சிறந்த நடிகையாக “வாணி ராணி ” தொடருக்காக ராதிகா , ஆகியோர் விருதை வென்றனர்.

“சன் குடும்பம் விருதுகள் 2018”

தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, 2018 ஆம் ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.

கடந்த மூன்று விருது நிகழ்வை காட்டிலும் , இந்த நான்காம் பதிப்பானது தனிச்சிறப்பு வாய்ந்தது. காரணம் சன் டிவிக்கு இது வெள்ளிவிழா ஆண்டு. ஆம் 25 ஆண்டுகளை கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது சன் டிவி.
இதை கொண்டாடும் விதமாக சன் குடும்ப விருதுகள் துவங்கியது.
இவ்விழாவில் சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி 25 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சன் குழும ஊழியர்களையும் கௌரவ படுத்தும் விதமாக நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SunKudumbamVirudhugal2018 #SunTv #SunKudumbamAwards

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑