முத்துநகர் தூத்துக்குடியில் ஒரு ஜாலி டிரைவ் !!!

பலவருடங்களுக்கு பிறகு முத்துநகர் தூத்துக்குடியில் ஒரு ஜாலி டிரைவ் !!!

சின்ன வயசுல எக்ஸாம் லீவ் விடுறப்போலாம் தூத்துக்குடி போகுற பழக்கம் இருந்துச்சு. அப்போ அங்க பெரியப்பா இ.எஸ்.ஐ ல வேலை பார்த்துட்டு இருந்தாங்க ..அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே இருந்த ஸ்டாப் குவார்டர்ஸ்ல பெரியப்பா குடும்பத்தோட தங்கிருந்தாங்க. தூத்துக்குடிக்கு போறோம்னாலே ஜாலியா இருக்கும். காரணம் அக்காக்களோட நல்லா நேரம் போகும், பெரியம்மா கடை, சினிமா, பீச், பார்க்னு கூட்டிட்டு போவாங்க. அந்த குவார்டர்ஸ்ல உள்ள மத்த சின்ன பசங்களோட விளையாடுறது, இப்படி ஜாலியா இருக்கும்.

தூத்துக்குடி பனிமயமாதா கோவில் திருவிழா , ரோச் பார்க், பீச், ஹார்பர், சினிராஜ் தியேட்டர்ல (?) “பொட்டு அம்மன்” படம், ஜெமினி சர்கஸ்னு நிறைய நினைவுகள்.கடைசியாக ஐந்தாம் வகுப்பு தேர்வு விடுமுறையில தூத்துக்குடிய சுத்திபார்த்தது.அதுக்கு அப்புறம் பெரியப்பா ரிட்டயர்ட் ஆகி கோவில்பட்டி வந்துட்டாங்க.அதன்பிறகு ஒரு சிலமுறை தூத்துக்குடி போயிருந்தாலும் நேத்துதான் திரும்ப ஒருமுறை தூத்துக்குடிய சுத்திபார்க்க வாய்ப்பு அமைஞ்சது.

நேத்து தம்பியோட சேர்ந்து பீச் ரோடுல சின்னதா ஒரு டிரைவ் போனோம்.ரொம்ப நாள் அப்புறம் பனிமயமாதா கோவில், ரோச் பார்க் லாம் பார்த்தேன்.
முதல்முறையா புலிமுட்டு வாக்வே , முயல் தீவுனு இதுவர தூத்துக்குடியில பார்க்காத இடத்துக்கு போயிருந்தேன்.

IMG_20181215_111941.jpg

IMG_20181215_111954IMG_20181215_133037 (1)

#புலிமுட்டு ரோச் பார்க் பக்கத்துல கடலுக்குள்ள நடந்து போகுற மாதிரி கற்கள் பாறைகள் கொண்டு சில மீட்டர் தூரத்துக்கு ஒரு நடை பாதை அமைஞ்சிருக்கு.

IMG_20181215_112600.jpg

IMG_20181215_114259.jpg

#முயல்தீவு ஆலைகள் சூழ அதன் பின்பகுதியில் ஆள் ஆரவாரமற்று அமைதியாக இருக்கிறது. அதுவரை இருந்த வெப்பம் முயல் தீவை அடைந்ததும் சற்று குறைந்து காணப்பட்டது. எங்களை தவிர வேறு யாரும் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது. முயல் தீவில் காண முடிந்தது ஒரு புதிய களங்கரை விளக்கம், ஒரு பழைய களங்கரை விளக்கம், சிதிலமடைந்த வீடு , மீண்டும் மீண்டும் பாறைகளுடன் முட்டி மோதி செல்லும் அலைகள். ஒரு வித்தியாச அனுபவத்தை உணர முடிந்தது.

IMG_20181215_130157

IMG_20181215_124022.jpg

IMG_20181215_122919.jpg

IMG_20181215_122351.jpg

IMG_20181215_130846

இம்முறை தூத்துக்குடியில் உள்ள மற்ற இடங்களை பார்க்க முடியவில்லை. மற்றொருமுறை மீண்டும் முத்துநகருக்கு செல்லவேண்டும்…

#TravelDiaries #Thoothukudi #ChildhoodDays #Pulimuttu #SeaWalkway #MuyalTheevu #HareIsland

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑