பேட்ட சில குறிப்புகள் !!!

பேட்ட சில குறிப்புகள்

பாட்ஷா, படையப்பா படத்துக்கு அப்புறம் பேட்ட படம் தான் ரஜினி ரசிகனுக்கு செம்ம விருந்து. 2.0, காலா, கபாலி, எந்திரன் படங்கள்ல ஒரு முழு ரஜினிய மாஸா பார்த்திருக்க மாட்டோம்.90கள்ல பிறந்த ரஜினி ரசிகர்களுக்கு பழைய காளிய தியேட்டர்ல பார்க்க குடுத்து வைக்கல. அருணாச்சலம், முத்து, பாட்ஷா, படையப்பா மாதிரியான மாஸ் படங்கள் வந்தப்போ குழந்தைங்க, பின்னாள்ல அந்த படங்கள டிவியில போடும் போது தான் பார்த்து ரசிச்சிருக்கோம். தியேட்டர்ல கொண்டாட முடியலேன்னு நிறைய ரசிகர்களுக்கு இருந்த வருத்தம் இப்போ பேட்ட மூலம் நிறைவேறி இருக்கு !!!

இந்த பேட்ட படத்தோட இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், மற்ற நடிகர்கள்னு எல்லாருமே ரஜினி ரசிகர்களா இருந்து ஒரு ரஜினி படத்த குடுத்திருக்காங்க. சமீபத்திய தலைவர் படங்களை விட இந்த பேட்ட படத்துல தலைவர் அழகா , துள்ளல்லா , இளமை துடிப்போட செம்ம க்யூட். ஹுமர், ரொமன்ஸ் , செண்டிமெண்ட், ஆக்சன் காட்சிகள்னு எல்லா இடத்துலையும் தலைவர் மாஸ்.

பழைய ரஜினிய அதாவது ஒரு காளிய , ஒரு பாட்ஷாவ, ஒரு படையப்பன திரும்ப பேட்டல காட்டிருக்கார் கார்த்திக் சுப்பராஜ். படத்தோட டைட்டில் கார்ட்லயே அது ஆரம்பிச்சது. அண்ணாமலை படத்துல வர சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட அதே பழைய தீம் மியூசிக் ஓட இங்க கொண்டு வந்திருக்கார். கடைசியா படையப்பா படத்துல வரும் அதுக்கு அப்புறம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித டைட்டில் கார்ட் வந்துச்சு.

50943415_380952539338728_2630409830891782144_n.jpg

பேட்ட படத்துல தலைவரோட மேனரிஸங்கள் காட்சிகள் இதுக்கு முன்ன வந்த தலைவர் பட காட்சிகளை நியாபகம் படுத்துற விதத்துல இருக்கும். அதுலாம் என்னன்னா…

தளபதி படத்துல மழை சண்டைகாட்சியில தலைவர் இன்ட்ரோ பாதி முகம் தெரிஞ்சாப்ல வரும்..பேட்ட படத்துலயும் தலைவர் அதே மாதிரி அறிமுகமாகிறது..

தலைவரோட இன்ட்ரோ சந்திரமுகி படத்துல மாட்டுவண்டில படுத்துட்டு வருவார், அதேமாதிரி பேட்டல ஒரு காய்கறி வண்டியில படுத்துட்டே வரார்.

“முள்ளும் மலரும்” படத்துல மாதிரி பேட்டலயும் தலைவரோட பெயர் காளி..

அடுத்த காட்சில முத்து படத்துல ” லல்லல் லல்லல் லல்லலா “னு பாடிட்டே ஆடிட்டு வரமாதிரி இதுல இன்டெர்வியூ ரூமவிட்டு வெளில வந்து வேலை கிடைச்சிருச்சினு சொல்லுறது..

அதற்கடுத்து அபூர்வ ராகங்கள் படத்துல கதவை திறந்துட்டு வரமாதிரி இதுல ஒரு காட்சி.

“முள்ளும் மலரும்” படத்துல வர “பார்க்கத்தான போற, இந்த காளியோட ஆட்டத்தை ” வசனம்

” அருணாச்சலம்” படத்துல அடுப்பை பத்தவைக்கிற மாதிரி இங்க விடுதியில அடுப்பை பத்தவைக்கிறது…

“ராஜா சின்ன ரோஜா“ படத்துல ரஜினி கவுதமிகிட்ட பேசும் போது சைடுல இருந்துட்டு சின்னி ஜெயந்த் “ஹான்ன்ன்”னு சொல்லுறத இதனை வருஷதுக்கு அப்புறம் பேட்டல சிம்ரன்கிட்ட தலைவர் பேசும்போதும் அடே சின்னி ஜெயந்த் மறுபடியும் “ஹான்ன்ன்”னு சொல்லுறது..

மார்க்கெட்ல ஒரு சண்டைகாட்சி வரும்..தலைவர் அப்போ சொல்லுவார் “நீங்க மாறவே மாட்டிங்களாடா..அதே ரெண்டு மொட்டை, ஒரு மீசை, நாலு ஸ்கூல் பசங்க மாறி சுத்தி சுத்தி வந்துகிட்டு அடச்சை ,,” இது ராஜாதிராஜா படத்துல வர ஒரு சண்டைகாட்சில இடம்பெற்ற வசனம்

உல்லாலா பாட்டுல படையப்பா பட மவுத் ஆர்கன்

ஹாஸ்டல் டார்ச்லைட் சண்டைல “உள்ள போங்கடா”னு பாட்ஷா ஸ்டைல்ல சொல்லுறது.., அதே கெத்தோட நடந்து வரப்போ சுவருல பிரதிபலிக்கிற தலைவரோட டார்க் ஷேடோ ..

பேட்ட தலைவரோட 165வது படம் ..அதை குறிக்கிற விதத்துல ஒரு காட்சி..ஜெயில்ல ஒவ்வொரு கைதிக்கும் ஒரு நம்பர் குடுத்துருப்பாங்க. தலைவர் ” 165 ” னு குறிக்கப்பட்ட கைதி உடையோட வருவார்.

கடைசி காட்சியில “முள்ளும் மலரும் “ படத்துல வர “ ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் “ பாட்டு

இதுலாம் போக சில நிகழ்கால அரசியல்ல குறிக்கிற காட்சி குறிப்பீடுகளும் அங்கங்க இருக்கு.

தெர்மாகோல் மினிஸ்டர் , அடிமைகள்னு குறிக்கப்பட்ட போஸ்டர் ,
“புதுசா வரவன ஏற்கனவே இருக்குறவன் மெரட்டுறது, துரத்துறது “,
“செய்வீர்களானு கேக்கல..செய்யனும்னு சொல்லுறேன்”.
“இத்தனை நாள் ஒதுங்கி இல்லை..பாயுரதுக்கு நேரம் பார்த்து பதுங்கி இருந்தோம்..இதான் நேரம் “, “ ஆர்.எஸ்.எஸ் இந்துத்வ அமைப்புகள் “,
“ போர் தொழிலுக்கு பழகனும் கொழந்தை”, “ ஆண்டி இந்தியன் “,

இப்படி நிறைய சொல்லிட்டே போலாம். பேட்ட “ஒரு சிறப்பான தரமான ரஜினிகாந்த் படம் ”

இந்த ஆட்டம் போதுமா கொழந்தை ♥️♥️
#பேட்ட

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑