பஞ்சுமிட்டாய்

#பஞ்சுமிட்டாய்

ghj.jpg

பள்ளிக்கூட காலத்தில் ஒரு மதிய அல்லது சாயங்கால வேளையில், திடீரென்று கேட்கும் மணி சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடி சென்று பார்த்தால் பஞ்சுமிட்டாய் விற்கும் தாத்தா தெருவிற்குள் பஞ்சுமிட்டாய் என கூவிக்கொண்டே வந்து கொண்டிருப்பார்.

தெருவில் நுழைந்ததும் ஒரு நிழற்பகுதியில் தன் சைக்கிளை நிப்பாட்டி அதில் தொங்கவிட்டிருக்கும் மணியை அடிப்பார். பொதுவாக எங்கள் வீட்டில் இருந்த பெரிய மாமரத்தின் நிழலிலேயே அவர் நின்று தன் வேலையை துவங்குவார். நான் வீட்டில் காசு வாங்கி கொண்டு வெளியே வருவதற்குள் அந்த சைக்கிள் வண்டியை சுற்றி கூட்டம் சூழ்ந்திருக்கும்.

17THCANDY_PHOTO.jpg

மூன்று சக்கர சைக்கிளின் முன் பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு வித இயந்திரத்தை ஓடவிட்டு அதன் வேகத்தில் உள்ளிருந்து பஞ்சு பஞ்சாய் பறந்து வரும். அதில் சக்கரை, மற்றும் ரோஸ் நிற பொடி சேர்த்து, அந்த கலவையில் உருவாகி வரும் பஞ்சை கையில் வைத்திருக்கும் சிறு மரக்குச்சியை கொண்டு சுற்றி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குகள் போல் படறவிட்டு பஞ்சுமிட்டாயை நம் கையில் குடுப்பார்.அதை நம் கையில் வாங்கும்போது ஒரு அலாதிபிரியம் அந்த தாத்தா மீதும் பஞ்சுமிட்டாய் ஏற்படும்.

jhkjhk.jpg

மாதத்தில் ஒரிருமுறை இவ்வாறு அந்த பஞ்சுமிட்டாய் தாத்தா வருவார். பின்பு காலப்போக்கில் அதே பஞ்சுமிட்டாய் கண்ணாடி பெட்டியில் அடைக்கப்பட்டு சைக்கிளில் அதை சுமந்தவாறே விற்று சென்றனர். பின்பு வடமாநில இளைஞன் ஒருவன் கண்ணாடி கவருக்குள் அடைக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை ஒரு பெரிய மரக்கம்பில் தொங்கவிட்டு விற்று செல்வான்.இப்போதும் அதுதான் தொடர்கிறது, இப்படி நம் கண்முன்னே பஞ்சுமிட்டாய் செய்து கொடுத்த அந்த தாத்தா போன்றோரை இப்போது பார்க்க முடிவதில்லை.

8085705993_c41bdd74e4_b.jpg

இவர் மட்டுமில்லை வாட்ச், பொம்மை, பாம்பு என விதவிதமாக செய்து கையில் ஓட்டுவிடும் ஜவ்வுமிட்டாய் தாத்தா, குரங்கு வைத்து வித்தை காட்டும் குரங்காட்டி, பூம்பூம் மாட்டுக்காரன் போன்றோரை இப்போது பார்ப்பது அரிதாகிவிட்டது, எங்கே சென்று விட்டார்கள் ??

Capture.JPG

Captures.JPG

பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் அரசு பொருட்காட்சியில் பார்க்க முடிந்தது. ஆசையை கட்டுப்படுத்த முடியவில்லை, அவர் அருகில் நின்று எவ்வாறு செய்கிறார் என வேடிக்கை பார்த்துக்கொண்டே பஞ்சுமிட்டாய் வாங்கி சாப்பிட்டேன். சின்ன வருத்தமாக, பஞ்சுமிட்டாய் வெள்ளை நிறத்தில் இருந்தது.
அதை பற்றி அவரிடம் கேட்ட போது, வண்ணப்பொடி சேர்ப்பதில்லை என்று கூறினார், இருந்தாலும் சுவை மாறாமல் இருந்தது.

Panjumittai.jpg

பஞ்சுமிட்டாய்..பஞ்சுமிட்டாய்தான்யா..என்னா டேஸ்ட்டு..😋😋

#90sMemories #Panjumittai #CottonCandy

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑