சன் டிவிக்கு முன்பாக கலைஞர் டிவியில் விஜய்யின் கில்லி படத்தை ஒளிபரப்பிய வரலாறு தெரியுமா ??
அதை பற்றிய சிறு கட்டுரை.

சன் டிவி தமிழகத்தின் நம்பர் 1 சேனல். மக்கள் ஆதரவும் திமுக ஆதரவும் நிறைந்த சேனல். அதேபோல் திமுகவுக்கும் ஆதரவளிக்கும் சேனலாக இருந்தது.சன் குழுமத்தை சேர்ந்த தினகரன் நாளிதழில் தினமும் ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகும். அவ்வாறு திமுகவில் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு மக்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் என வெளியிட்ட கருத்து கணிப்பால் நடந்த மோதலில் மதுரை தினகரன் அலுவலகம் தீயிடப்பட்டு மூன்று ஊழியர்கள் இறந்து போனார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு சன் டிவி திமுக கலைஞர் குடும்பம் இடையே விரிசல் ஏற்பட தொடங்கியது.


அதன் எதிரொலியாக செப்டம்பர்15, 2007 அன்று கலைஞர் டிவி துவங்கப்பட்டது. சன் டிவியில் பணியாற்றிய முக்கிய நபர்கள், தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் என கொஞ்சம் கொஞ்சமாக கலைஞர் டிவிக்கு மாறினார்கள், மாற்றப்பட்டார்கள் என்று கூட சொல்லலாம்.முக்கியமாக ராஜ் கமல் பிலிம்ஸ் படங்கள், ஏவிஎம் நிகழ்ச்சிகள், படங்கள் கலைஞர் டிவிக்கு கைமாறின. சன் டிவிக்கு போட்டியாக நாடகங்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டன. பாரதிராஜா, பாலச்சந்தர், குஷ்பூ போன்றோரின் நாடகங்கள் ஒளிபரப்பாகின.
.
மானாட மயிலாட, நாளைய இயக்குனர் , படவரிசை பத்து போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. முக்கியமாக முன்னணி நடிகர்களின் படங்களை அதிகமாக கைப்பற்றினர். தலைவரின் சிவாஜி, தசாவதாரம், குருவி, பில்லா அதுமட்டுமின்றி லோ பட்ஜட் படங்களையும் வாங்கி குவித்து பண்டிகை விடுமுறை காலம் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெள்ளிபரிசு என்ற பெயரில் புதுபடங்கள் ஒளிபரப்பாகின. இவை அனைத்தையும் தாண்டி சன் டிவி அளவிற்கு இல்லாவிட்டாலும் விஜய் டிவி, ராஜ் டிவி தரத்தை விட கலைஞர் டிவியில் பிக்சர் குவாலிட்டி நன்றாக இருந்தது.
புதியதாக இசையருவி, சிரிப்பொலி, செய்திகள்,முரசு ஆகிய சேனல்களை துவங்கினார்கள். இதனால் சிறிது காலம் சன் டிவி மற்றும் பிற சேனல்களுக்கு போட்டியாக இருந்தது கலைஞர் டிவி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை டிவியில் முதல் முறை போட்ட போது சன் டிவியை விட அதிக TRP பெற்று முதலிடம் வந்தது. அப்போதைய ஆட்சி காலத்தில் முடிந்த அளவுக்கு தன்னை மேம்படுத்தி கொண்டது கலைஞர் டிவி.
அதன் பின் அதிமுக ஆட்சி வந்தது,ஆட்சி மாற்றத்திற்கு பின் ஓரளவுக்கு தாக்கு பிடித்த கலைஞர் டிவி, அதன்பின் சிறிது சிறிதாக வீழ்ச்சியை அப்போது ஆரம்பித்து தற்போது வரை சந்தித்து கொண்டிருக்கிறது.இப்போது வரை எப்படி திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் தவித்து கொண்டிருக்கிறதோ, அதேபோல் கலைஞர் டிவியும் மேலே எழும்ப முயற்சித்து வருகிறது. முன்பு போல நிகழ்ச்சிகள் இல்லை, பார்வையாளர்கள் குறைவின் காரணமாக ஆரம்பத்தில் சன் டிவியையே பின்னுக்கு தள்ளி TRP யில் முதலில் வந்த கலைஞர் டிவி, தற்போது தர வரிசையில் 6, 7 இடங்களில் இருக்கிறது.
இதற்கு மற்றோரு காரணம் இந்த இடைப்பட்ட காலத்தில் ஜீ தமிழ், விஜய் டிவி சேனல்களின் வளர்ச்சி.சன் டிவிக்கு எதிராக ஆரம்பித்து தற்போது இந்த நிலைமையை எட்டியுள்ளது கலைஞர் டிவி. சரி விஷயத்துக்கு வரேன், சன் டிவிக்கு கலைஞர் டிவி பலவிதங்களில் போட்டியாக ஆரம்பத்தில் இருந்திருந்தாலும், அதில் முக்கியமான இரண்டு சுவாரசிய நிகழ்வுகள் உண்டு. அவை
1. கலைஞர் டிவியில் கில்லி ஒளிபரப்பானதும்..
2.சன் டிவி வாங்க இருந்த ரஜினிகாந்தின் சிவாஜி படத்தை வாங்கியதும்..
கலைஞர் டிவியில் கில்லி !!

நவ.4, 2007, சண்டே
காலை வேளையில் சன் டிவி பார்த்து கொண்டிருந்தபோது “தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கும் விழா” காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என ஸ்க்ரோலில் அறிவிப்பு வருகிறது. அதுவரை ஒரு ப்ரோமோவும் வரவில்லை, திடீரென ஒரு அறிவிப்பு மட்டும் வருகிறது.இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,அதே விருது வழங்கும் நிகழ்ச்சி நவம்பர் 8 அன்று தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் என கலைஞர் டிவி ப்ரோமோ வெளியிட்டு இருந்த நிலையில் சன் டிவியில் இப்படி ஒரு ஸ்க்ரோல் அறிவிப்பு எதிர்ப்பாரத ஒன்று.
சொன்னதைப்போல் 11.30 மணிக்கு சன்டிவியில் விருது நிகழ்ச்சி துவங்கியது அதில் தலைவர்,கமல்,கலைஞர் அவர்கள் பேசிய காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை அறிந்த கலைஞர் டிவி, அதற்கு பழிவாங்கும் விதமாக சன் டிவி உரிமம் பெற்று தீபாவளிக்கு போட இருந்த விஜயின் சூப்பர் ஹிட் படமான #கில்லி திரைப்படத்தை எந்தவொரு முன்னறிவிப்பின்றி தங்கள் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.இதை அறிந்து, அரைமணிநேரத்தில் சன் டிவி விருது நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, சூர்யாவின் நந்தா திரைப்படத்தை போட்டார்கள். கலைஞர் டிவியும் சில நிமிடங்களில் கில்லி படத்தை நிறுத்திவிட்டு,தலைவர் நடித்த பைரவி படத்தை போட்டார்கள். இதை பார்த்த நேயர்களுக்கு என்ன நடந்தது என் அப்போது புரியவில்லை.
சிவாஜியை வாங்கிய கலைஞர் டிவி !!

இரண்டாவது நடந்த நிகழ்வு. தலைவர், ஷங்கர் கூட்டணியில் முதன் முதலாக பிரம்மாண்டமாக தயாரான சிவாஜி படத்தை , தயாரிப்பாளர் ஏவிஎம் இடமிருந்து படத்தின் டிவி உரிமையை சன் டிவி வாங்கி இருக்கும் என எண்ணி கொண்டிருந்த வேலையில், அதிக விலை மற்றும் ஆட்சி பலத்தை வைத்து கலைஞர் டிவி கைப்பற்றியது.சன் டிவி வாங்கியிருக்கும் என்ற எண்ணிய காரணம், சிவாஜி வெளியான சமயத்தில் படத்தின் பிரத்தியேக காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் சன் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகின.
படத்தின் 175 வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியும், நீக்கப்பட்ட காட்சியும் கலைஞர் டிவியில் போட்டார்கள். அப்போது சந்தேகம் எழுந்தது, ஒருவேளை படத்தை கலைஞர் டிவி வாங்கிவிட்டார்களா என்று. அதை உறுதி செய்யும் வண்ணம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது, சிவாஜி படத்தை கலைஞர் டிவி வாங்கிவிட்டார்கள் என்று.

சிவாஜி 175வது நாள் கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சி கலைஞர் டிவியில் போட்டபோது, சன் டிவி சந்திரமுகி படத்தின் 750 நாள் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியை போட்டதாக நியாபகம். இப்போது கலைஞர் டிவி இடமிருந்த பழைய ஏவிஎம் படங்கள் அனைத்தையும் மீண்டும் சன் டிவி கைப்பற்றி விட்டது. சிவாஜி படத்தை அதேபோல் சன்டிவி எப்போது கைப்பற்றி ஒளிபரப்புவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கலைஞர் டிவி உயிர் பெரும். இல்லைனா ராஜ், ஜெயா டிவி போன்று ஆகிவிடும்.
ஆனால் யார் வந்தாலும் சன் என்றும் பிரகாசிக்கும் !!!
#SunTv #KalaignarTv #Kalaignar #Karunanithi #Thalaivar #Superstar #Rajinikanth #Sivaji #Shankar #AVM #Thalapathy #Vijay #Ghilli
Leave a comment