
சிவாஜி படம் வெளியாகி 13 வருடம் கடந்த நிலையில் , படம் பார்த்தது பற்றிய என் அனுபவம் !!
தலைவர், இயக்குனர் ஷங்கரின் முதல் கூட்டணி. இதைப்பற்றிய அறிவிப்பு நாளிதழ்களில் வந்ததும், படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியது.படம் தொடங்கிய நாள் முதல் படத்தை பற்றிய செய்திகள் வராதா என பேப்பரை புரட்டிய நாட்கள் அவை. நாட்கள் செல்ல செல்ல படத்துக்கான எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே சென்றது. எப்போது படம் வெளியாகும் என ஆர்வமாக காத்திருந்த நாட்கள். அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயம், முழுபரிச்சை வேறு நெருங்கி கொண்டிருந்தது. சிவாஜி பட ரிலீஸ் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தன.

முதலில் ஏப்ரல் 14 வெளியாவதாக தகவல் வந்தது.பரீட்சை விடுமுறையில் பார்த்துவிடலாம் என்று எண்ணியபோது, பட வெளியீடு மே இறுதிக்கு தள்ளப்பட்டது. சரி, பத்தாம் வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு பார்த்துவிடலாம் என எண்ணியபோது மீண்டும் பட வெளியீடு தள்ளிப்போனது. ஸ்கூல் ஆரம்பித்து விட்டால் 10th எக்ஸாம்,ஸ்பெஷல் கிளாஸ், டியூசன், படிப்புன்னு போட்டு சாவடிப்பாங்க. படத்துக்கு கூட்டிட்டு போக மாட்டாங்கன்னு பயந்தேன். நான் நினைச்ச மாதிரி படமும், ஸ்கூல் திறந்து இரண்டாம் வாரத்தில் வெளியானது. வீட்டில் படத்துக்கு கூட்டிட்டு போக சொல்லி கேட்டபோது மறுத்துவிட்டார்கள்.
ஸ்கூலுக்கு போனா பிரண்ட்ஸ் படம் பார்த்துட்டு வந்து வெறுப்பேத்திட்டு இருந்தாங்க. படத்தை பத்தி கேட்டா, தியேட்டர்ல போய் பாருடா, கதை கேக்காத அப்புறம் சுவாரசியம் போயிரும்ன்னு பிரண்ட் சொல்ல..பரவாயில்லை படம் எப்படி இருக்குன்னு மட்டும் சொல்லுன்னு கேட்க..தாறுமாறா இருக்குன்னு அவன் சொன்னதும் வெறி ஆயிடுச்சு. படத்தை எப்ப பார்க்க போறோம்னு ஆர்வம் அதிகமா ஆகிட்டே போகுது. ஸ்கூல், டியூசன், சலூன் கடைன்னு எங்க போனாலும் படம் பத்தி பேசிட்டு இருந்தாங்க. வீட்டுல திரும்ப படத்துக்கு கூட்டிட்டு போக கேட்டா திட்டுவாங்கன்னு பயந்து கேட்கவே இல்லை. இது பத்தாதுன்னு சன் டிவியில வேற சிவாஜி பட ட்ரைலர் போட்டுட்டே இருக்கான். அந்த வாரம் டாப் 10 மூவிஸ்ல பட காட்சிகள் வேற போடுறான்.
இதெல்லாம் பார்த்து படம் பார்க்கிற ஆர்வம் பீறிட்டு போக வீட்டுலயும் கூட்டிட்டு போகாம இருக்க..என்ன செய்யலாம்னு யோசிச்சு திருநெல்வேலில இருக்குற எங்க சித்திக்கு போன் பண்ணேன். ஊருக்கு வாங்க, வந்து என்னை சிவாஜி படத்துக்கு கூட்டிட்டு போங்கன்னு கேட்க, அடுத்த வாரம் வரெண்டா, படத்துக்கு போவோம்னு சொன்னாங்க. அவங்களுக்கு போன் பண்ண காரணம், என்ன படத்துக்கு கூட்டிட்டு போகிறதே அவங்கதான். எங்க அப்பா, அம்மா யாரும் தியேட்டர்ல போய் படம் பார்க்கிறத விரும்பமாட்டாங்க, குடும்ப சூழலும் அப்படிஇருந்துச்சு. எப்போ இந்த வாரம் முடியும், சித்தி எப்போ வருவாங்க, சிவாஜில தலைவர எப்ப பார்க்கப்போறோம்னு காத்திருந்து, டிவியில சிவாஜி ப்ரோமோ போடுறப்போலாம் சத்தம் கேட்டு எங்க இருந்தாலும் ஓடி வந்து பார்த்திருவேன். அதுலாம் இன்டர்நெட் இல்லா ஒரு அழகிய காலம்.
ஸ்கூல்ல பிரண்ட்ஸ் யாராச்சும் சிவாஜி படம் பத்தி பேச ஆரம்பிச்சா ஆர்வமா உக்காந்து கேட்க ஆரம்பிச்சுருவேன். ஒவ்வொருதடவையும் அதை பத்தி கேட்க கேட்க ஆர்வம் அதிகமாகி படம் பார்க்க போற நாளை எதிர்நோக்கி காத்திருந்தேன். ஒருவழியா அந்த நாள் வந்துச்சு, சித்தி ஊர்ல இருந்து வந்திருந்தாங்க. வந்த அன்னைக்கே போகலாம்னு கிளம்பி தியேட்டர் போனேன் சித்தி கூட, என் நேரம் அன்னைக்கு செம்ம கூட்டம்.டிக்கட் கிடைக்கல, பெருத்த ஏமாற்றமா போய் அழுகை லைட்டா வந்திருச்சு. அடுத்தநாள் சண்டே மதிய ஷோக்கு தான் டிக்கெட் கிடைச்சது, சித்தி சமாதானம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. கிட்டத்தட்ட 10 வது நாள் சிவாஜி தியேட்டர்ல பார்த்தேன். படம் பார்க்க தியேட்டர்ல போய் சீட்ல உக்காந்தாச்சு. வழக்கத்துக்கு மாறா வித்தியாசமானசூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு , அதுக்கேற்ற BGM, மிரண்டுட்டேன். சிவாஜின்னு படத்தோட டைட்டில் B&W ல வந்து திரும்ப கலர்ல #SivajiTheBoss ன்னு BGM ஓட வரும்போது Goosebumps.



தலைவர் இன்ட்ரோ ~ நல்லது பண்ணேன்னு சொல்லி சிரிச்சிட்டே நம்ம திரும்பி பார்ப்பார் பாருங்க, அங்க ஆரம்பிச்சு படம் இறுதிவரை தலைவர் அதகளம் பண்ணி இருப்பாரு. பிரம்மாண்டமான பல்லேலக்கா பாடல்,ஸ்ரேயா குடும்பத்தோட பழகுற காட்சிகள் ஒரு பக்கம், ஆதிசேஷன் சந்திப்பு, சிவாஜி பவுண்டேஷன் ஆரம்பிக்க ஒப்புதல், பின் ஆதியின் அரசியல் விளையாட்டால் அதில் முதலீடு செய்த அனைத்தையும் இழந்து நிற்கும்போது “நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி” என விவேக் சொல்லும் காட்சியில் என்னை அறியாமல் கண்கள் கலங்கி கண்ணீர் வெளியே சிந்தும்முன் ஒரு ரூபாய் காயினை டாஸ் போட்டு தல விழ இனி நான் போற பாதை சிங்கப்பாதை என திரையில் தலைவர் கர்ஜிக்கும் போது என்னையும் அறியாமல் ஆனந்த மிகுதியில் கைதட்ட, சுத்தி உள்ள ரசிகர்களும் ஆர்ப்பரிக்க இன்டர்வெல் வந்தது. அதன் பின்பு இரண்டாம் பகுதி, செம்ம ஸ்பீடு அண்ட் மாஸ். அதுலாம் அல்டிமேட் ஆக்சன் பிளாக், அதற்கேத்தாப்புல ரஹ்மான் ஓட அதிரடியான பின்னணி இசை கூடுதல் பலம். போலீஸ் ஸ்டேஷனில் தலைவர் அடிவாங்கும் காட்சி வந்தபோது அழுகை தொண்டையை கவ்விக்கொண்டு வர எவளோ அடக்க முயன்றும் முடியாமல் அழுதுவிட்டேன். பின்னர் MGR ஆக வந்து ரீவீட் அடிக்கும்போது மொட்டை பாஸ் செம்ம மாஸ். ஒரு முழு நீள கமர்சியல் மாஸ் படம்.
படத்தில் தலைவரை தவிர்த்து அதிகம் ரசித்த கேரக்டர் ஆதிசேஷன் சுமன், மனுஷன் வில்லனா மிரட்டி இருப்பார். இளம் மனதை கவரும் விதத்தில் ஆம்பல் மலராய் ஸ்ரேயா, முக்கிய கேரக்டரில் நடிகர் ரகுவரன் மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். படத்தில் வியந்தது பாடல்கள் தான். பல்லேலக்கா , சஹானா கண்ணாடி மாளிகை, வெள்ளை மனிதராக ஒரு கூடை சன்லைட் பாடலிலும், அதிரடியாக ரஹ்மான் குரலில் ஒலித்த அதிரடிக்காரன் பாடலிலும் தலைவர் அதகளம்.
சிங்கம் சிங்கிளா தான் வரும் வசனம் அதை தொடர்ந்து வரும் சண்டை காட்சிகள், கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் என ஒரு மாஸ் கமர்சியல் படம் எப்படி இருக்கும் என ஷங்கர் காட்டி இருப்பார். தலைவரும் சிவாஜி, எம்ஜிஆர் என இரு கதாப்பாத்திரத்திலும் வெளுத்து வாங்கி இருப்பார். மொத்தத்தில் சிவாஜி Complete Commercial Mass Action Entertainer,
படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வந்த பிறகு அந்த வாரம் முழுவதும் பார்ப்பவர்களிடம் சிவாஜி படம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இரண்டாம் முறை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் பத்தாம் வகுப்பு விடுமுறையில் அக்கா வீட்டிற்கு சென்றிருந்த போது அங்கு சிவாஜி DVD இருக்க பொழுதுபோகாம இருந்தபோதெல்லாம் சிவாஜி பார்த்தேன்..
படத்துல தலைவர் சொல்லுற வசனம் உண்மை..இங்க எம்ஜிஆரும் அவர்தான், சிவாஜியும் அவர்தான்.
சிவாஜி தி மாஸ் 🔥🔥🔥
#SivajiTheBoss #Superstar #Rajinikanth #Shankar #Shreya #ARRahman #AVM
Leave a comment