எனக்கு பிடித்த விஜய் !

எனக்கு பிடித்த விஜய் !!

குஷி படத்தின் மூலம் முதல் முறையாக எனக்கு அறிமுகம் ஆகிறார் விஜய். படம் வெளியாகி இருந்த சமயம், டிவியில் அவ்வப்போது குஷி பட பாடலான”ஒரு பொண்ணு ஒன்னு தான் பார்த்தேன்” ஒளிபரப்பாகிறது. அதில் வரும் பாப்பு.. பாப்பு.. எனும் வார்த்தைகள் பிடித்து போக பாடல் கேட்கும்போதெல்லாம் பாப்பு பாப்பு என கூட சேர்ந்து முணுமுணுக்க ஆரம்பித்தேன். இப்பாடலின் வழியாக விஜயும் பிடித்து போனது.

vijay_singing

குஷி படத்துக்கு கூட்டுப்போவதாக சொல்லி என்னை விட்டுட்டு என் இரு அக்காக்கள் மட்டும் தியேட்டர்க்கு போய்ட்டு வர, நான் அவர்களிடம் அழாத குறையாக சண்டை போட இன்னொரு நாள் போலாம்னு சொல்லி சமாதானம் செய்தார்களே தவிர கடைசிவரை கூட்டிட்டு போல. ரொம்ப வருடங்களுக்கு பிறகு டிவியில தான் பார்த்து ரசித்தேன். குஷி விஜய், ஜோதிகா காம்பினேஷனில் பிடித்த படம். படமும் சரி இப்படத்தில் விஜயும் சரி பார்த்துக்கொண்டே இருக்கலாம் எத்தனை முறை வேண்டுமானாலும்.

அதன்பின்பு டிவியில் காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பூவே உனக்காக போன்ற படங்களை பார்க்க பார்க்க தலைவருக்கு அடுத்து விஜய் படங்களும் மிகவும் பிடித்து போனது. இந்த படங்களில் நினைத்தேன் வந்தாய் மிகவும் பிடித்த ஒன்று. பாடல்கள், காமெடி என இயல்பாக அதில் வந்த விஜயை மிகவும் பிடித்து போனது. போஸ்ட் கார்ட் அளவிலான நினைத்தேன் வந்தாய் விஜய் படத்தை கடைக்கு சென்றபோது அக்காவிடம் கேட்டு வாங்கிக்கொண்டேன். அந்த போட்டோவில் டீ சர்ட், ஜீன்ஸ், கண்ணாடி என விஜயை அந்த படத்தில் பார்க்கவே அழகாக இருக்கும்.

பின்னர் பார்த்த துள்ளாத மனமும் துள்ளும் ஆல் டைம் favourite விஜய் படங்களில் ஒன்று. குட்டி கதாபாத்திரத்தில் வரும் விஜய், ருக்குவாக சிம்ரன் என இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள். கிளைமாக்ஸ் “இன்னிசை பாடி வரும் ” பாடலில் குட்டி, ருக்குவின் நடிப்பு 👌👌👌

“பிரியமானவளே” படத்தின் சற்று குறும்புத்தனமான விஜயாக முதல் பாதியிலும், பொறுப்பான விஜய்யாக இரண்டாம் பகுதியிலும் நடித்திருப்பார். திரையில் விஜய் – சிம்ரன் ஜோடி எனக்கு பிடித்த ஒன்று. இந்த படத்திலும் இருவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள், முக்கியமாக இறுதிகாட்சி 👌👌👌

பிரண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான்,யூத் என எல்லாமே டிவியில் தான் அதிகமாக ரசித்த படங்கள். யூத் பட “ஆழ்த்தோட்ட பூபதி”பாடலுக்கு கால்களை அசைக்காமல் யாரும் இருந்திருக்க முடியாது. வீட்டில் இருந்த டேப் கேசட்டில் இந்த பாடலை போட்டு ஆடியிருக்கிறேன். சர்க்கரை நிலவே பாடல் ,அதில் விஜய் அணிந்திருக்கும் ஆரேஞ் நிற சட்டையும் அதற்கு மேட்ச்சாக ப்ளூ ஜீன்ஸ் ❤️❤️❤️❤️

“தமிழன்” முதன் முதலில் தியேட்டரில் பார்த்த விஜய் படம். இதில் போலீஸ் ஸ்டேஷனில் விஜய் அடிவாங்கும் காட்சியை பார்த்து அழுதுட்டேன் 🤦.

இரண்டாவதாக தியேட்டரில் பார்த்தது விஜய் படங்களிலேயே மிகவும் பிடித்த “கில்லி”. அதுவரை ரொமான்ஸ் மோடில் இருந்த விஜய்க்கு ஆக்சன் ப்ளாக்பஸ்டர்ராக அமைந்தது கில்லி. விஜய்,திரிஷா, பிரகாஷ்ராஜ் காட்சிகள், பாடல்கள், சண்டை காட்சிகள், கபடி போட்டி என எல்ல இடங்களிலும் அய்யா கில்லிடா என்று படத்தில் கூறுவது போல் அடித்து விளையாடி இருப்பார் விஜய். இந்த பட கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் அடிவாங்கும்போது மீண்டும் அழுதுட்டேன்🤦

அதன்பிறகு வந்த மற்ற படங்கள் எல்லாம் மீண்டும் டிவியில் பார்த்தது தான், அதில் போக்கிரி மட்டும் மிகவும் ரசித்து பார்த்தது.

நண்பன் ~ 3 இடியட்ஸ் படம் ஹிந்தியில் பார்த்து இருந்தாலும் தமிழில் விஜய் ஷங்கர் கூட்டணியில் பார்க்கும் ஆவலில் கில்லி படத்திற்கு பிறகு தியேட்டர்ல பார்த்த படம். நண்பன் விஜய் செம்ம கூல் ❤️

துப்பாக்கி ~ M4 இன்ஜினீயரிங் செமஸ்டர் எக்ஸாம் முடிச்சுட்டு மதிய ஷோ நண்பர்களோடு பார்த்த படம். கேப்டன் ஜெகதீஷ் கதாபாத்திரம் , ஸ்லீப்பர் செல் கான்சப்ட், ஒரே நேரத்தில் ஷூட் என்றவுடன் 12 இடத்தில் 12 பேர் சுடுவது, விஜய் வில்லனுக்குமான ஆட்டம் என துப்பாக்கி பிடித்த படம்.

கத்தி ஜீவானந்தம், மெர்சல் வெற்றி மாறன் ரசித்த கதாபாத்திரங்கள். சர்க்கார் , பிகில் பெரிதாக எதிர்பார்த்து அந்த எதிர்பார்ப்பை எனக்கு பூர்த்தி செய்யவில்லை. ஆனால் பிகிலில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் மட்டும் பிடித்திருந்தது. கூடுதலான காட்சிகள் வைத்து இருந்திருக்கலாம்.

BeFunky_Collage1

விஜய்யிடம் பிடித்தது அவரின் நடனம், அந்த ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.
அதுமட்டுமில்லாம விஜய் பாடிய பாடல்களும் ரசிக்கும் விதத்திலும் ஆட்டம் போடும் விதத்திலும் இருக்கும்.

தலைவர் ரஜினியின் ரசிகராய் தலைவரின் அண்ணாமலை பட வசனத்தை பேசி, என்னால் நடிக்க முடியும் என நிருபித்து திரைக்கு வந்தவர் பல அவமானங்கள், தடைகளை தாண்டி இன்று தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக உயர்ந்திருக்கிறார். நம் தலைவரை போல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் தன் நடிப்பால், ஸ்க்ரீன் பிரசன்ஸ் மூலம் ஈர்க்கும் தன்மை விஜய்க்கு உண்டு. அதை சரியாக உணர்ந்து தன் ஒவ்வொரு படத்தின் மூலம் அவர் நெஞ்சில் குடியிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்ளின் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தை பாய்ச்சி கொண்டிருக்கிறார்.

அடுத்தாக மாஸ்டர் பட வெளியீட்டை நோக்கி ரசிகர்கள் வாத்தி கம்மிங் என அறைகூவல் விடுத்து, இன்று அந்த மாஸ்டரின் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

சீக்கிரம் வாங்க மாஸ்டர் ❤️❤️❤️

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய் ❤️❤️❤️

#HBDTHALAPATHYVijay

#Thalapathy #Vijay

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑