விக்ரமனின் நான் பேச நினைப்பதெல்லாம் !!

நேத்து கேடிவியில நான் பேச நினைப்பதெல்லாம் ன்னு ஒரு படம் பார்த்தேன். ஆனந்த் பாபு, விவேக், மோகினி நடிச்ச படம்.

images (12).jpeg

வாழ்க்கையில் வெவ்வேறு காரணங்களால் தனித்தனியே காதல் தோல்வியை சந்தித்த இருவரும் ஒருகட்டத்தில் சந்திக்க, அவர்களுக்கு துணையாக விவேக் இருப்பார். ஆனந்த்பாபு மியூசிக் சான்ஸ் தேடி அலைய, மோகினி வேலை தேடி அலைவார். பின்னர், மோகினி படித்து தேர்ச்சிபெற்று IAS ஆகி இவர்களை விட்டு டெல்லிக்கு சென்று விட, ஆனந்த்பாபு மீண்டும் முன்னேற முடியாமல் தவிப்பார்.

பணி மாறுதல் காரணமாக மீண்டும் சென்னைக்கு வரும் மோகினி, இவர்களை கண்டுகொள்ளாமல் தன்னை காதலித்து ஏமாற்றிய முன்னால் காதலனுடன் சேர்ந்து சுற்றுவார்.படத்தின் இறுதிக்காட்சியில், இருவருக்கும் கல்யாணம் நடைபெறவிருக்கும் வேலையில் ஆனந்த்பாபு வந்து பாட்டுபாட, அந்த மேளதாள சத்தத்தையும் மீறி அந்த பாடல் மோகினிக்கு கேட்டு கல்யாணத்தை நிறுத்தி, தன் முன்னால் காதலனை அவுமானப்படுத்தவே இந்த கல்யாண ஏற்பாடு என கூறி ஆனந்த்பாபுவுடன் கரம் பிடித்து சென்றுவிடுவார்.

அந்த கல்யாண மண்டபத்தில் பாடிய பாடலில் மனம் கவர்ந்து, ஆனந்தபாபுவுக்கு பட தயாரிப்பாளர் வினுசக்ரவர்த்தி வாய்ப்பு குடுக்க ஹீரோவும் முன்னேறிவிட..எல்லாம் சுபமாக முடியும்.

படம் பார்க்கிறப்போ புது வசந்தம் படம் பார்த்த மாதிரியே இருந்துச்சு. ஒரே பாடலில் IAS ஆகும் சூரியவம்சம் படமும், கூடவே IAS ஆனபின்பு ஹீரோவை யாரென தெரியாமல் உதாசீனப்படுத்தி, ஹீரோ ரத்தகாயம் ஏற்பட்டு பாடல் ஒன்றை பாடியபின்பு அவர் யாரென அடையாளம் கண்டுகொண்டு கலெக்டரும் அந்த பாடலை ரோட்டில் பாடிக்கொண்டே இறுதியில் கண்ணீர்மல்க ஹீரோவுடன் சேரும் துள்ளாத மனமும் துள்ளும் படமும் நியாபகத்துக்கு வந்தது.

எல்லாம் ஒரே மாதிரி சிங்க் ஆகுதேன்னு இயக்குனர் யாருன்னு பார்த்தா துள்ளாத மனமும் துள்ளும் படம் தவிர்த்து மற்ற மூணு படத்துக்கும் விக்ரமன் தான் இயக்குனர். இந்த மூணு படமும் வெற்றி படம். புது வசந்தம் தான் விக்ரமனோட முதல் படம், 1990ல வெளிவந்து ஹிட் அடிச்ச படம். இந்த படத்தோட சாயல்ல 1993ல வந்தது நான் பேச நினைப்பதெல்லாம். 1997ல சூரியவம்சமும், 1999ல இயக்குனர் எழிலோட துள்ளாத மனமும் துள்ளும் படமும் வெளியானது என்பது உபரித்தகவல்.

“ஏலேலங்கிளியே
என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே”

“இது முதல் முதலா, பாட்டு ஒன்னு பாடட்டுமா, போடு தாளம் போடு”

என இரண்டு படங்களிலும் பாடல் பிரமாதமாக இருக்கும். விக்ரமன் படங்களில் படத்தை போன்று பாடல்களும் இனிமையாக சிற்பி, SA ராஜ்குமார் இசையில் இசைக்கும் ❤️❤️

இன்னொரு விஷயம், நான் பேச நினைப்பதெல்லாம் கேடிவியில 4 மணிக்கு போட,அதை பார்த்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சு சன் டிவி பக்கம் வந்தா புது வசந்தம் படம் ஓடிட்டிருக்கு..😍

#Vikraman #Movies #TamilCinema #PuthuVasantham #NaanPesaNinaipadhellam #SARajkumar #Sirpi

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑