முத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் 1995ல் வெளியாகி பல சாதனைகள் கண்ட வெற்றி திரைப்படம்.

முத்து படத்தின் வெள்ளித்திரை சாதனைகள் பற்றி அனைவரும் அறிந்ததே. சின்னத்திரையில் முத்து திரைப்படம் படைத்த சாதனைகளை பற்றி பார்க்கலாம்.
1995ல் தீபாவளி வெளியீடாக வந்த முத்து திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிடமிருந்து வாங்கிய சன் டிவி, 1998/99 ஆம் ஆண்டு தீபாவளி தினம் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒளிபரப்பினார்கள்.

அதன் பின்பு 2-3 வருடங்களுக்கு ஒரு முறை விழா காலங்களில் சன் டிவியில் முத்து ஒளிபரப்பானது. எப்போது முத்து படம் போட்டாலும் மக்களும் தவறாமல் கண்டு களித்தனர்.காரணம், அத்தனை பொழுதுபோக்கு அம்சமும் கொண்ட ரஜினி படம்.
2009 – 2010 சமயத்தில், படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது. சன் டிவியும் அப்போது ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை.
ஜீ தமிழில் முத்து
இதனால், ஜீ தமிழ் தொலைக்காட்சி முத்து படத்தின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது. இப்போது விஜய் , ஜீ சேனல்களில் எப்படி ஒரே படத்தை திரும்ப திரும்ப போட்டு உசுர வாங்குறாங்களோ, அதே போல் அப்போது ஜீ தமிழும் முத்து படத்தை நேரம் காலம் பார்க்காமல் அடிக்கடி போடுவார்கள். பாலிமர் டிவியும் முத்து படத்தை சிலமுறை ஒளிபரப்பி இருக்கிறார்கள். இப்போது போல் ஜீ தமிழ் சேனல்க்கு அப்போது வரவேற்பு இல்லை.சொல்லப்போனால் சேனல் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது.
ராஜ் , ஜெயா டிவிகளில் ஒளிபரப்பாகும் தலைவர் படங்களை எவ்வாறு கண்டுகொள்வது இல்லையோ அதேபோன்றே ஜீ தமிழ் நிலையும். கிட்டதட்ட 7 முதல் 8 வருடங்கள், ஜீ தமிழில் முத்து படம் பல முறை ஒளிபரப்பானது.

பத்து வருட காலத்துக்கு பிறகு முத்து படத்தின் உரிமையை மீண்டும் சன் டிவி கைப்பற்றி, கடந்த ஆண்டு 2019, ஜனவரி 19 அன்று ப்ரைம் ஸ்லாட் ஆன ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பினார்கள்.

“நான் எப்போ வருவேன், எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்”னு முத்து பட வசன பாணியில் , பேட்ட திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க அதை கொண்டாடும் வகையில் முத்து படத்தை சன் டிவியில் போட்டார்கள். முத்து படத்தை யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில், சன் டிவியில் போட தலைவர் ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் செம்ம ரெஸ்பான்ஸ்🔥🔥
அதன் வெளிப்பாடு, TRPல் தெறித்தது. BARC வெளியிட்ட தரவின்படி 1,02,00,000 TRP புள்ளிகள் பெற்றது.
ஜீ தமிழில் முதல் முறையாக ஒளிபரப்பான 2.0 TRP யை விட முத்து படத்தின் TRP அதிகம். 24 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படம், ப்ரைம் ஸ்லாட்ல் ஒளிபரப்பானது சாதனை என்றால், 1.02 கோடி TRP புள்ளிகள் பெற்றது மற்றொரு சாதனை.
பழைய படமாக இருந்தாலும் அடிக்கடி ஒளிபரப்பாமல், இதுவரை சன் டிவியில் மூன்று முறையும், கே டிவியில் ஒரு முறையும் ஒளிபரப்பாகி உள்ளது, முத்து திரைப்படம்.

25 வருடத்துக்கு முன்பு வந்த தலைவரின் முத்து படம், கடந்த ஞாயிறுக்கிழமை மீண்டும் சன் டிவியில் ப்ரைம் ஸ்லாட்டில் 6.30 மணிக்கு ஒளிபரப்பானது. கடந்த ஆண்டு போல மீண்டும் ஒரு TRP சாதனையை முத்து படைக்குமா என்று பார்க்கலாம்…
#Thalaivar #Superstar #Rajinikanth #KSRavikumar #MuthuOnSunTv #Muthu #SunTv #ZeeTamil
Leave a comment