கொரோனாவுடன் சில நாள் !!

கொரோனாவுடன் சில நாள் !!

வீட்டுக்குள்ளேயே இருக்கோம், நமக்குலாம் கொரோனா வராதுன்னு நினைச்சிட்டு இருந்தா “எனை நோக்கி பாயும் தோட்டா”ன்னு கொரோனா வந்து என்னை தாக்கிட்டு போயிருச்சு.

அந்த அனுபவம் பற்றிய ஒரு பதிவு…

Image

கடந்த ஜூலை 17ஆம் தேதி, காலையில எந்திரிக்கும்போதே உடம்புல ஒருவித அசதியும், கூடவே உடல் சூடும் இருந்துச்சு. காய்ச்சல் வந்தா உடம்பு எப்படி இருக்குமோ அதே மாதிரியான உடல்நிலை இருந்துச்சு. வீட்ல அம்மா கிட்ட காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்குன்னு சொல்ல, தெர்மாமீட்டெர் வச்சு டெம்ப்பேரச்சர் செக் பண்ணா 100° மேல காட்டுச்சு..

IMG_20200729_150311.jpg

சரி சாதாரண காய்ச்சல்ன்னு சொல்லிட்டு ரெண்டு இட்லி மட்டும் சாப்பிட்டுட்டு (அதுக்கு மேல சாப்பிட முடியல) , பாரசிட்டமால் மாத்திரையை போட்டு படுத்துட்டேன். கொஞ்ச நேரத்துல பல்லி கத்துற சத்தம்(Message Tone) கேட்க மொபைல் எடுத்து பார்த்தா எழவு,சென்னைக்கு போக 7 முறை Epassக்கு விண்ணப்பிச்சு ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்லி நிராகரிச்சிட்டு, இப்போ காய்ச்சல்ன்னு படுத்து கிடக்கிற சமயத்தில “EPass Approved” ன்னு மெசேஜ் வந்திச்சு.🤦🤦🤦

EeCUHQUUYAABk6M

அட கண்றாவியேன்னு நினைச்சிட்டு, சரி 2 நாள்க்கு பாஸ் validity இருக்கே இன்னைக்கு ஒருநாள் பார்த்துட்டு காய்ச்சல் சரி ஆயிருச்சுனா நாளைக்கு சென்னைக்கு கிளம்பிறலாம்னு மாத்திரையை நேரம் தவறாம போட்டுட்டு , கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம்லாம் குடிச்சிட்டு வெய்ட் பண்ணேன்.

நான் என்ன நினச்சேன்னா, காய்ச்சல் லேசாதான் இருக்கு..சமாளிச்சு எப்படியாச்சும் சென்னை போயிருவோம்ன்னு ரெடி ஆனேன். நம்ம நலவிரும்பிகளும் அவசரப்பட்டு கிளம்பாத, உடல்நிலையை முதல்ல பாருன்னு அட்வைஸ் பண்ணாங்க. எனக்கு சென்னை போய் வேலையில சேரனும்ங்கிற கட்டாய சூழ்நிலை.

ஆனா நாம ஒன்னு நினைச்சா, உடம்பு ஒன்னு நினைச்சது. அடுத்த நாள் சனிக்கிழமை காலையில எந்திரிச்சப்போவும் காய்ச்சல் விடலை.கூடவே உடம்பு வலியும் இருந்துச்சு. சாப்பாடும் சரியா சாப்பிட முடியல, வயிறு மந்தமா குமட்டல் வேற இருந்துச்சு. சென்னை போக முடியாதுன்னு தெரிஞ்சுபோச்சு.. மேனஜர்க்கு கால் பண்ணி தகவல் சொல்லிட்டு படுத்துட்டேன்.

EeCUIH2U8AALmdB

“திடீர் காய்ச்சல்,உடம்பு வலி,அசதி, சளி தொந்தரவு ஏதும் இல்லை, இந்த உடல்நிலை மாற்றம்” இதெல்லாம் வச்சு பார்க்கிறப்போ வசீகரன் (கொரோனா) இங்க (உனக்குள்ள) வந்து இருக்கான்னு தோணுதுன்னு வில்லன் சிட்டி ரோபோ மாதிரி என் மனசு என்கிட்ட சொன்னது, எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்திருச்சு..எனக்கு காய்ச்சல் வர ரெண்டு நாள் முன்னால அப்பாக்கு சளி தொந்தரவும், உடம்பு வலியும் இருந்துச்சு.ஆனா காய்ச்சல் ஏதும் வரல..

EeCUIiQVAAA2i-4

சரி அறிகுறி லைட்டா தெரியுதே, போய் கொரோனா டெஸ்ட் எடுத்துருவோம்ன்னு நானும் அப்பாவும் கிளம்பி எங்க ஊர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போனோம். அங்க போய் SWAB Test குடுத்தோம்.. நீட்டமான ஏர் பட்ஸ் வச்சு மூக்கு உள்ள, தொண்டைக்குள்ள விட்டு டெஸ்ட் எடுத்ததும், பிரஸ் மீட் அட்டன்ட் பண்ண நிர்மலா சீதாராமன் மூஞ்சி மாதிரி அஷ்டகோனலா மாறிடுச்சு..அது சரியாக ஒரு அஞ்சு நிமிஷம் ஆச்சு..

Capture

ரிசல்ட் பாசிட்டிவ்னா 2 நாள்ல கால் பண்ணுவோம் நெகட்டிவ்னா கால் பண்ண மாட்டோம், உங்களுக்கு ரிப்போர்ட் வேணும்னா வந்து வாங்கிக்கோங்கன்னு சொன்னாங்க.நானும் அப்பாவும் வீட்டுக்கு வந்து தனிமை படுத்திக்கிட்டோம். அப்புறம் 2 நாள் கழிச்சு எனக்கு காய்ச்சலும் சரி ஆயிடுச்சு.. ஆனா டெஸ்ட் ரிசல்ட் வரல.டெஸ்ட் குடுத்து 4 நாள் ஆச்சேன்னு புதன் அன்னைக்கு கால் பண்ணி விசாரிச்சா இன்னும் டெஸ்ட் ரிசல்ட் வரலன்னு சொன்னாங்க.

281

அடுத்த நாள் வியாழன் காலையில நகராட்சில இருந்து கால் பண்ணி வீட்டு அட்ரஸ் கேட்டு வந்துட்டாங்க. வந்தவங்க எங்க ரெண்டு பேருக்கும் கொரோனா பாசிட்டிவ்ன்னு சொல்லிட்டாங்க. இதை கேட்டதுல இருந்து வீட்டுல அம்மா சோகமாக, அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு தைரியம் சொல்லி..நான் போய் 4 நாள் ஜாலியா இருந்துட்டு வரேன், அங்க போனா முட்டை கொடுப்பாங்க..நீ வீட்லதான் செஞ்சு குடுக்கல, அங்கயாச்சும் போய் சாப்பிட்டுட்டு வரேன்னு கிண்டல் பண்ணிட்டு இருந்தேன்.

images - 2020-07-29T001922.337.jpeg

அப்பாக்கு மட்டும் ஹோம் குவாரண்டைன் கேட்டோம், ஆனா அப்பா வயசு காரணமா கண்டிப்பா ஹாஸ்பிட்டல்ல தான் குவாரண்டைன்னு சொல்லிட்டாங்க. அப்பாவை GH லயும், என்ன ஊருக்கு வெளியில இருக்க காலேஜ் ஹாஸ்டல்லயும் குவாரண்டைன் பண்ண போறதா சொல்லி, ரெடியா இருங்க.. ஆம்புலன்ஸ் வரும்ன்னு சொல்லிட்டு போனாங்க. நகராட்சி ஆட்கள் வந்து வீட்டை சுத்தி ப்ளீச்சிங் பவுடர் போட்டுட்டு போனாங்க.. ஆனா வீட்டுக்குள்ள வந்து சானிடைஸ் பண்ணல 🤦🤦

-vthueq.jpg

அப்புறம் மதியம் வரை யாரும் கூட்டிட்டு போக வரல.. 3 மணிக்கு மேல திரும்பவும் கால் பண்ணி ஆம்புலன்ஸ் வர லேட் ஆகும்.. GH பக்கம் தான, நீங்களே நடந்து வந்திருங்கன்னு சொல்லிட்டாங்க அதும் சரின்னு பட்டுச்சு, தேவை இல்லாம ஆம்புலன்ஸ் தெருக்குள்ள வந்து எங்களை கூட்டிட்டு போறத தெரு மக்கள் பார்கிறதுக்கு இது பெட்டர். அதனால எங்களுக்கு தேவையான ட்ரெஸ், தட்டு, டம்பளர், பிஸ்கட் பாக்கட், தண்ணி பாட்டில் எடுத்துட்டு GH க்கு நடந்தே போய்ட்டோம்.

-u8i7av.jpg

GH போனா அப்பாவை ஒரு வார்டுக்கு அனுப்பிட்டு,என்ன கூட்டிட்டு போக வண்டி வரும்னு சொன்னாங்க.கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணேன்.ஒரு டெம்போ ட்ராவலர் வண்டி வந்துச்சு. அதுல ஏறிக்க சொல்ல,உள்ள ஏறிபோனா உட்கார இடம் இல்லை.. ஸ்டாண்டிங் 🤦சென்னையில ஷேர் ஆட்டோல ஆட்களை அடைச்சு போட்டு கூட்டிட்டு போற மாதிரி ஆள் ஏத்திட்டு காலேஜ் ஹாஸ்டல்ல கொண்டு போய் 4.30 மணிக்கு விட்டாங்க.

puxm4w.jpg

அங்க போனதும், முதல்ல ஆக்சிஜன் பல்ஸ் செக் பண்ணாங்க..95 நார்மலா இருந்துச்சு. வேற எந்த ஒரு தகவலும் பெருசா சொல்லல, நீங்களே போய் எந்த ரூம் காலியா இருக்கோ அங்க தங்கிக்கோங்கன்னு சொல்லிட்டாங்க.

IMG_20200723_174227.jpg

அப்புறம் ப்ளக் போர்ட் இருக்குற மாதிரி தேடி போய் 2nd Floor ல ஒரு ரூம்ல போய் செட்டில் ஆனேன். ரூம்க்கு ரெண்டு பேர், ஹாஸ்டல்னால கட்டில் போட்டு வச்சிருந்தாங்க. கட்டில்ல விரிச்சிக்க பிளாஸ்டிக் டைப் பெட் கவர் கொடுத்தாங்க.

EeCUPGFUYAA5xnP

எல்லாத்தையும் அரேஞ் பண்ணிட்டு, சூற்றுப்புற சூழ்நிலையை கவனிச்சேன். அங்க இருக்கிறவங்கலாம் பிக்னிக் வந்த மனநிலையில இருக்கிறது தெரிஞ்சது.

ஹாஸ்டல் சுத்தி வந்தேன், அவளோ சுத்தமாவும் இல்லை.ரூம் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. ஆனா பாத்ரூம் டாய்லட் மோசமாதான் இருந்துச்சு. மூனு floorல கீழ் Floor லேடீஸ்க்கும், மேல 1st Floor ஜெண்ட்ஸ்க்கு பாத்ரூம் இருந்துச்சு. ஆனா 1st Floor பாத்ரூம் மோசம், சுத்தம் பண்ணவே இல்லை. முதல் நாள் போனப்போ 2nd Floor ல தண்ணி வரலன்னு 1st Floor யூஸ் பண்ணோம். அடுத்த நாள்ல இருந்து 2nd எல்லோர் யூஸ் பண்ணோம், அது ஒகேவா காற்றோட்டமா இருந்தது, நைட் மட்டும் கொசு தொல்லை தாங்கலை.

PicsArt_07-29-02.59.27.jpg

அப்புறம் கொஞ்ச நேரம் படுத்து இருந்தேன்,திடீர்னு ஒரு 8 மணி வாக்கில பெல் அடிச்சாங்க.என்னனு போய் எட்டி பார்த்தா, “சோறு போடுறாங்க,ஓடியாங்க.. ஓடியாங்க”ன்னு செந்தில் காமெடி மாதிரி நைட் சாப்பாடு பார்சல் வாங்க வரிசையில நின்னாங்க. 120 பேர் கிட்ட எப்படியும் அங்க இருந்தாங்க..நானும் வரிசையில நின்னு சாப்பாடு (தோசை) பார்சல் வாங்கிட்டு வந்தேன்.

EeCUQRFUcAAtKr7

PicsArt_07-29-03.07.58.jpg

சாப்பாடு வாங்க போறப்பவே அங்க இருந்த டாக்டர்கிட்ட நமக்கு உடல் அசவுரியம் ஏதும் இருந்தா அதை சொல்லி அதுக்கு மருந்து வாங்கிக்க சொன்னாங்க. நான் சளி பிடிக்கிற மாதிரி இருக்குனு சொல்லி மாத்திரை வாங்கிக்கிட்டேன். அப்போ எனக்கு தெரியாது, விட்டமின் மாத்திரை கொடுப்பாங்க, அதை தினமும் சாப்பிடனும்ன்னு… அதுனால நானும் அதை பத்தி கேட்டுக்கல, அவங்களும் விட்டமின் மாத்திரை எனக்கு குடுக்கல🤦🤦
நைட் சாப்பிட்டு, கோல்ட் டேப்லெட் போட்டு அசதியில படுத்து தூங்கிட்டேன்.

Day 1, இப்படி ஓடிருச்சு

Day 2 ~ காலையில 7 மணிக்கே மணி அடிச்சு எழுப்பிட்டாங்க.

7 மணிக்கு ~ கபசுர குடிநீர்

8.30 மணி வெண்பொங்கல், மசால் வடை, சாம்பார் ,சட்னி.

10 மணிக்கு கபசுரநீர்

11 மணிக்கு மிளகு பால்

12.30 மணிக்கு Full மீல்ஸ்(நோ முட்டை)

4.30 மணிக்கு நிலவேம்பு கசாயம்

5 மணிக்கு மிளகு பால்,பாசி பயிரு சுண்டல்

8 மணிக்கு சப்பாத்தி, வெஜ் குருமா

*முட்டை குடுப்பாங்கன்னு நினச்சு வந்தவ எனக்கு பெருத்த ஏமாற்றம்.

இடைப்பட்ட நேரத்துல மொபைல்ல படம், ட்விட்டர், வாட்சப், பிரண்ட்ஸ் கூட பேசுறது, கொஞ்ச நேரம் தூக்கம்ன்னு பொழுது போச்சு.

PicsArt_07-29-03.07.04.jpg

அன்னைக்கு நைட் சாப்பாடு வாங்க போனப்ப தான் விட்டமின் மாத்திரை நானே போய் கேட்டு வாங்கினேன். டாக்டர் நைட் மட்டும் தான் வராங்க நானே கேட்டது அப்புறம் தான் நீங்க விட்டமின் மாத்திரை நேத்தே ஏன் வாங்கலைன்னு திரும்ப என்ன கேட்டாங்க..

IMG_20200729_150338.jpg

“ஏன்மா எனக்கு எப்படிமா தெரியும், நீங்கதான் இங்க வந்தப்போவே குடுத்து அனுப்பிருக்கனும் நான் வடிவேலு பாணியில சொல்ல, திரும்ப என்கிட்ட , இன்னைக்கு காலையில டெஸ்ட் எடுத்துட்டு உங்க பெயர் ரெஜிஸ்டர் பண்ணிங்களான்னு கேட்டாங்க.
🤦🤦

PicsArt_07-29-03.02.42.jpg

இல்லை, எனக்கு தெரியாது.. இதெல்லாம் நீங்க முன்னாலேயே சொல்லி இருக்கனும்னு சொன்னேன்.. நீங்க தான் சார் இதெல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கனும், நாங்களா ஒவ்வொரு ரூம்மா வர முடியும்னு? கேட்டாங்க. முதல் நாள் இங்க வந்தப்போவே ரெஜிஸ்டர்ல பெயர் எழுதி வாங்கி, மாத்திரை குடுத்து அனுப்பிருக்க வேண்டியது அவங்க கடமை. ஆனா இது எதுமே அவங்க பண்ணுறது இல்லை. ஒவ்வொரு நாள் காலையில டெம்பரேச்சர் செக், பல்ஸ் செக் மட்டும் பண்ணி பெயர் எழுதி வைக்குறாங்க

ரொம்ப அழகா பண்றீங்கமா ன்னு நினைச்சுட்டு ரூம்க்கு வந்துட்டேன்.

IMG_20200724_162731.jpg

ரெண்டாவது நாள் நான் கண்ட சுவாரஸ்யமான விஷயம்.. அந்த ஹாஸ்டல் வளாகம் நடுவுல சின்ன கிரவுண்ட் இருந்துச்சு.அதுல வயசு வித்தியாசம் இல்லாம பசங்க, ஆம்பளைங்க எல்லாம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு ரூம்ல சீட் கட்டு, தாயம் விளையாடிட்டு இருந்தாங்க.

ஒரு குரூப் என்னடான்னா பாட்டு போட்டு சத்தமா வச்சு டான்ஸ் ஆடிட்டு இருந்துச்சுங்க. மத்த சில ஆம்பளைங்க செட் சேர்ந்து அரசியல், சினிமா னு பேசிக்கிட்டு சிரிச்சிட்டு இருந்தாங்க. பொம்பளைங்களாம் இன்னொரு பக்கம் ஒன்னா கூடி உக்காந்து கதை பேசிக்கிட்டு இருந்தாங்க.

EeCZXsVUYAEfPwa

இதெல்லாம் பார்த்துட்டு கொரொனா வார்டா இல்லை பிக்னிக் ஸ்பாட்டானு டவுட் வந்திருச்சு. நாம இங்க எதுக்கு வந்திருக்கோம்னு மறந்துட்டு எல்லாம் ஜாலியா இருந்தாங்க. இரண்டாவது நாள் இப்படியே போயிருச்சு.

Day 3 (சனி)~ அன்னைக்கு போய் டெம்பரேச்சர் செக் பண்ணேன், வழக்கமா கபசுர நீர், மிளகு பால், சுண்டல் கொடுத்தாங்க. சாப்பாடுன்னு பார்த்தா,

காலையில இட்லி சட்னி சாம்பார், வடை.
மதியம் கீரை கூட்டோட மீல்ஸ் வித் முட்டை 😍
நைட் பரோட்டா 😍

*மூனாவது நாள்ல இருந்து முட்டை குடுத்தாங்க 😍😍

வழக்கம்போல படம் பார்த்து பொழுது போயிருச்சு. இதுல முக்கியமான ஒன்னு குவாரண்டைன் பண்ணுறதுக்கு முந்துன நாள் இருந்து, எனக்கு சாப்பாடு டேஸ்ட் சரியா தெரியல. சுவையான சாப்பாடு போட்டாலும், என்னால அந்த சுவையை முழுசா உணர முடியல.

EeCZYlNU4AA4ssO

இங்க ஹாஸ்டல் வந்ததுக்கு அப்புறம் தான் எதேச்சையா பிரண்ட்கிட்ட போன்ல பேசும்போது உணர்ந்தேன், முகர்ர சக்தி(Smell Sense) சுத்தமா இல்லை. அதுக்கு அப்புறம் தான் முழுசா உணர்ந்தேன், உண்மையிலே நமக்கு கொரோனா இருக்குனு. அங்க இருந்த டாக்டர்கிட்ட கேட்டப்போ, கொரோனா அறிகுறிதான், விட்டமின் டேப்லெட்ஸ் எடுத்துக்கோங்க, அதுலயே சரி ஆகிடும்னு சொன்னாரு.

Day 4 (ஞாயிறு) ~ வழக்கம்போல போயிருச்சு.

ரவா கிச்சடி வடை, மீல்ஸ் வித் முட்டை,
சுண்டல், இட்லி சாம்பார்.

Day 5 (திங்கள்) ~ காலையில சாப்பாடு இட்லி சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருந்தேன். சாப்பாடு டேஸ்ட்டும் கொஞ்சம் நார்மல் ஆன மாதிரி இருந்தது, லைட்டா smell பண்ண முடிஞ்சது.

இந்த நேரத்துல வந்துதான் சொன்னாங்க.. ரெடியா இருங்க,உங்களை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணுறோம்னு. என்னடா வந்து 4 நாள் கூட முழுசா ஆகல, அதுக்குள்ள டிஸ்சார்ஜ் பண்ணுறாங்களேன்னு அதிர்ச்சி.

EeCZZGAUYAEffTI

சொன்ன மாதிரியே 12.30 மணிகிட்ட டிஸ்சார்ஜ் சம்மரி பேப்பர் கையில குடுத்து அனுப்பிட்டாங்க. நானும் வீடு வந்து சேர்ந்துட்டேன். அங்க இருந்து அனுப்புனாங்களே தவிர, மாத்திரையும் குடுக்கல, இத்தனை நாள் வீட்டுக்குள்ள குவாரண்டைன்ல இருங்க, பத்திரமா இருங்கன்னு ஒரு அட்வைஸ் கூட பண்ணல.

EeCZZkqUYAAYyJz

எல்லாம் கடமைக்கு பண்ணுறாங்கன்னு தெரிஞ்சது. எந்த டெஸ்ட் ரிப்போர்ட் அடிப்படையில நெகட்டிவ்ன்னு சொல்லி எங்களை(என்கூட சேர்ந்து 80 பேர்) டிஸ்சார்ஜ் பண்ணாங்களோ !?!

எல்லாம் அந்த கடவுள் எடப்பாடியார்க்கும், விஜயபாஸ்கர சாமிகளுக்கும் தான் வெளிச்சம் 🙄🙏

EeCZaC-UYAAL6pa

டெய்லி ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் ஆகுறது இப்படிதான்போல.

நான் டிஸ்சார்ஜ் ஆன மாதிரியே, அப்பாவும் அதே நாள்ல GH ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகிட்டாங்க. அப்பாகாச்சும் ரெண்டு முறை பிளட் டெஸ்ட் எடுத்து நார்மல் வந்து ,வீட்டுல 14 நாள் தனிமை படுத்தி இருங்கன்னு சொல்லி மாத்திரை குடுத்து அனுப்பி விட்டுருக்காங்க.

EeCZbiqU4AAv8y5

இப்போ நானும் அப்பாவும் எங்களை தனிமை படுத்திக்கிட்டு வீட்டுல இருக்கோம். இந்த கொரோனா வந்துட்டா யாரும் பயப்பட தேவையில்லை, தைரியமா ஒரு வாரம் ஹாஸ்பிட்டல் போய் நிம்மதியா அவங்க குடுக்கிற சாப்பாடு , மாத்திரை, கஷாயம் சாப்பிட்டுட்டு நல்லா தேறிட்டு வரலாம்.

Don’t Worry , Be Happy !!!

EeCZb2IUMAANfMu

நன்றி !!!

My #Corona #Experience #Covid19 #Quarantine #StayHomeStaySafe

One thought on “கொரோனாவுடன் சில நாள் !!

Add yours

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑