#MookuthiAmman
நயன்தாரா, RJ பாலாஜி ,ஊர்வசி நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியான பொழுதுபோக்கு திரைப்படம்.

ராமசாமியாக RJ பாலாஜியின் அறிமுக காட்சியும் அதனை தொடர்ந்து அம்மா பால்தங்கமாக ஊர்வசியின் வெகுளித்தனமா நடிப்புடன் கூடிய பெண் பார்க்கும் காட்சி, குலதெய்வம் மூக்குத்தி அம்மனாக வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் அவருடன் தொடர்ந்து பயணிக்கும் பாலாஜியின் காட்சிகள் என விறுவிறுப்பான முதல் பகுதி அசத்தல். 👌👌

ஆனால் இரண்டாம் பாதி திரைக்கதையில் சற்று தொய்வு ஏற்பட்டு சுமாராகி போனது.☹️☹️
கடவுள் வழிபாடு, மதநம்பிக்கை, கடவுள் மறுப்பு, மதத்தை வைத்து வியாபாரம் பார்க்கும் போலி சாமியார்கள் போன்ற நடப்பு நிகழ்வுகள்.. “நான் நோன்பு கஞ்சியை குடிப்பேன், புனித அப்பத்தை புசிப்பேன், ஆனால் ஒரு போதும் ஆடிமாத கூழை குடிக்கமாட்டேன்”, “கடவுள் இல்லைனு சொல்றான் பாரு..அவன் ஓகே, ஆனா ஒரு கடவுளை உசத்தி, இன்னொரு கடவுளை திட்டுறான் பாரு.. அவன் டேஞ்சர்” போன்ற நடப்பு திராவிட கட்சிகளின் சித்தாந்தங்களை தோலுரித்து காட்டும் வசனங்களை காட்சியப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி, ட்ரைலர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோவில் வந்த கிறிஸ்துவ போலி பாஸ்டர்களின் காட்சியை மட்டும் ஏனோ படத்திலிருந்து நீக்கிவிட்டார் !?!🙄🙄🤷🤷

படத்தின் பலம் நயன்தாரா..மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்துக்கு சிறப்பான தேர்வு 👌👌👌

இரண்டாவதாக சூரரை போற்றுவில் பாசமிகு சென்டிமென்ட் அம்மாவாக சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்த ஊர்வசி, இந்த படத்தில் பால் தங்கமாக கலகலப்பான வெகுளியான அம்மாவாக வாழ்ந்திருக்கிறார்.

பல இடங்களில் சிரிக்க வைத்து , ஒரு காட்சியில் சென்டிமெண்டலாக ஃபீல் பண்ணவும் வைத்து சபாஷ் போட வைக்கிறார். ஒரு காட்சியில் , தலைவரின் “பாட்ஷா” பட பாடல் மாண்டேஜ் காட்சியில் ரசிக்க வைத்திருப்பார்.

RJ பாலாஜி வழக்கம்போல தன் வாயால் உடுக்கை அடித்து விளையாடி இருக்கிறார்.

லாஜிக் எல்லாம் தள்ளிவைத்து விட்டு குடும்பத்துடன் மூக்குத்தி அம்மனை தரிசிக்கலாம். அம்மனின் அருளால் இரண்டாம் பகுதி திரைக்கதையில் ஏதாவது மேஜிக் செய்திருந்தால் “மூக்குத்தி அம்மன்” இன்னும் நன்றாகவே ஜொலித்திருப்பாள்.

#LadySuperstar #Nayanthara #RJBalaji #Oorvasi #MookuthiAmman
Leave a comment