திராவிட கட்சிகளால் பந்தாடப்பட்ட விஜய் அண்ணாவும் அவரது படங்களும் !

திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த சமயம். சன் பிக்சர்ஸ் விஜய் நடித்த வேட்டைக்காரனை தொடர்ந்து , சுறா படத்தையும் வாங்கி விநியோகித்தது. எதிர்பார்த்தபடி படம் ஓடாததால் திரையரங்க உரிமையாளர்கள் நஷ்ட ஈடு கேட்டு விஜய்யை அணுக, அவர் தரப்பிலிருந்து பதில் ஏதும் வரவில்லை.

இதன் விளைவு காவலன் பட வெளியீட்டு நேரத்தில் எதிரொலித்தது. சுறா பட நஷ்டத்தை ஈடுகட்டினால் தான் காவலன் படத்தை வெளியிடுவோம் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இன்னொரு பக்கம் சன் பிக்சர்ஸ் ஆடுகளம்

படத்திற்காக ஆட்சி பலத்தை பயன்படுத்தி அதிகளவில்
திரையரங்கை ப்ளாக் செய்து காவலன் படம் வெளியாகாமல் இருக்க முயற்சித்தது.பின்னர் ஒருவழியாக காவலன் குறைவான திரையரங்கில் வெளியாகின.காவலன் படத்தை சன் டிவி வாங்கி இருந்தாலும் படத்தை ப்ரோமோட் செய்யவில்லை. அவர்களின் ஆடுகளம் படத்தை

அதிகளவில் ப்ரோமோட் செய்தார்கள். இதில் விஜய்யும் ஆளும்தரப்பு மீது கடுப்பாகி போயிருந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி ஜெயா டிவியும், வழக்கம்போல விஜய் டிவியும் விஜய்யை கூப்பிட்டு வைத்து காவலன் படத்தை சிறப்பு நிகழ்ச்சி மூலம் ப்ரோமோட் செய்தார்கள்.

ஆளும் தரப்பு மீதான விஜய்க்கு

ஏற்பட்ட அதிருப்தி ஜெயா டிவி ப்ரோக்ராமில் தென்பட்டது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய்யிடம் “ஆளும்தரப்பு சேனல்(சன் டிவி) உங்களை ப்ரோமோட் பண்றாங்க.. அவங்களுக்கு நீங்க வேணும்…மற்ற சேனல்ஸ்க்கும் நீங்க வேணும் ” உங்களுக்கு யார் வேணும்னு கேட்க ?

அதற்கு விஜய் சிரித்துக்கொண்டே

“ஒரு தரப்பு எனக்கு சப்போர்ட் பண்ற மாதிரி தெரிலேயே” என மறைமுகமாக சன் டிவி மற்றும் திமுக பற்றி கூறி இருப்பார்.

திமுக ஆட்சியால் கடுப்பான விஜய், 2011 தேர்தல் நேரத்தில் தனது ஆதரவை அதிமுகவிற்கு தெரிவித்தார்.

அதன்பின்பு மக்கள் எதிர்பார்த்தது போல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

திரைத்துறையும் குடும்ப அரசியலில் இருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் நிம்மதி அடைந்தது.

அதன்பின்பு வேலாயுதம் படம் வெளியானது. வழக்கத்திற்கு மாறாக ஜெயா டிவி படத்தின் உரிமையை வாங்கியது. இதே சமயத்தில் சன் பிக்சர்ஸ் நண்பன் பட உரிமையை கைப்பற்ற முனைந்து அது நிறைவேறாமல் போனது.

பின்பு நண்பன் வெளியான சமயத்தில், அவ்வளவு குடைச்சல் முந்தைய ஆட்சியில் திமுக மற்றும் சன் டிவி குடுத்து இருந்தாலும்.. சன் டிவி சார்பில் நடந்த நண்பன் பட ப்ரோமஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். நண்பன் படமும் சரி, துப்பாக்கி படமும் சரி சன் டிவியால் வாங்க முடியாமல் போக விஜய் டிவி

வாங்கியது.

இதே நேரத்தில் SAC பெரியப்பா சில அரசியல் கருத்துக்களை தெரிவிக்க, அது ஆளும்தரப்பான ஜெயா அம்மையாருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.

மேலும் கோபத்தை ஏற்படுத்தியது, தலைவா பட டைட்டில் டேகில் இடம்பெற்ற “டைம் டூ லீட்” வார்த்தைகள். இதன் எதிரொலியாக படத்தை தடை செய்தது ஜெயா அரசு.

படத்தை வெளியிடும் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்க கோரி விஜய், தயாரிப்பாளர், இயக்குனர் ஜெயாவை சந்திக்க கொடநாடு சென்றபோதும் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. பின்னர் தயாரிப்பாளர் பிரஸ் மீட்டில் அழ, படத்தை வெளியிட கோரி அம்மையாருக்கு விஜய் கைகட்டி வீடியோ வெளியிட…என பல போராட்டத்திற்கு

பிறகு தலைவா படம் வெளியானது.

படத்தை முடக்க இன்னொரு காரணம், படத்தின் டிவி உரிமை சன் டிவிக்கு சென்றதும் அம்மையாருக்கு கோவத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டது.

ஆளும்தரப்பால் பிரச்சனை மீண்டும் ஏற்பட்டது. மறுபடியும் சன் டிவி பக்கம் வந்தார் விஜய். அதாவது சன் டிவி ஏற்பாடு

செய்திருந்த “விஜய் 20” நிகழ்ச்சிக்கு பெரியப்பாவுடன் வந்திருந்தார் விஜய்.

பழைய பிரச்சனைகளை எல்லாம் மறந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சன் டிவிக்கு நன்றி தெரிவித்து சென்றார் பெரியப்பா.

பின்னர் தலைவா சிறப்பு நிகழ்ச்சியிலும் விஜய் கலந்து கொண்டார். அதன் பின்பு சன் டிவிக்கும்

விஜய்க்கும் இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டு வலுப்பெற தொடங்கியது. அதன் பின் ஜில்லா படம் எப்படியோ சுமூகமாக வெளியானது.

அடுத்தது “கத்தி”.. என்ன பிரச்சனை செய்யலாம் என காத்திருந்தவர்களுக்கு ஏதுவாக தயாரிப்பு நிறுவனமான லைகா அமைந்தது.

லைகா வைத்து கத்தி படத்துக்கு பிரச்சனை செய்த

அந்த லெட்டர் பேட் அமைப்புகள் அதன்பின் அந்த நிறுவனம் தயாரித்த எந்த படத்துக்கும் பிரச்சனை செய்யவில்லை.

பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்சனையில் படத்தை முதலில் வாங்கியிருந்த சன் டிவி விலகியது. அதனை ஜெயா டிவி வாங்கி ஒளிபரப்பியது.

படத்தில் 2G பற்றியெல்லாம் விஜய்

வசனம் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்க கட் பண்ணா…அடுத்தது கொஞ்சம் இடைவேளை

திமுக குடும்ப அங்கமான சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்கார் படத்தில் விஜய் நடித்தார். அதிலும் ஆளும்தரப்புக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுக பிரச்சனை செய்து சம்பந்தப்பட்ட காட்சிகள்

நீக்கப்பட்டு, வசனம் கத்தரிக்கப்பட்டு படம் வெளியானது.

சன் பிக்சர்ஸ்ன் சுறாவில் தொடங்கிய பிரச்சனை சன் பிக்சர்ஸ் சர்கார் வரை நீண்டது. ஆக ரெண்டு திராவிட கட்சிகளாலும் பந்தாடபட்டார் அண்ணா.

நடுவில் தேசிய கட்சி வேறு மெர்சல் படத்தை ப்ரோமோட் செய்து ஓடவைத்தது தனி கதை.

அடுத்தது மீண்டும் சன் பிக்சர்ஸ், விஜய் கூட்டணியில் இயக்குனர் நெல்சனின் “பீஸ்ட்”. இதற்கு என்னென்ன பிரச்சனைகள் கிளப்பிவிட போகிறார்கள் என்று பார்க்கலாம். 👍

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑