
முதல்ல தேங்காயை துருவி எடுத்து அதை மிக்சியில் அரைத்து இரண்டு தடவையாக தேங்காய் பால் எடுத்துக்கனும். சின்ன வெங்காயம், முருங்கைக்காய், கேரட்/பீன்ஸ்/உருளை (விருப்பத்திற்கேற்ப) காய்கறிகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதை வேகவைக்கனும்.
ரெண்டு மூனு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு துண்டு தேங்காய் எடுத்து சின்ன மிக்ஸில போட்டு அரைச்சிக்கனும். அதேபோல 100 கிராம் அளவில் பாசிப் பருப்பை எடுத்து தனியாக தண்ணீர் ஊற்றி வேக வச்சிக்கனும். இப்போ காய்கறி நல்ல வெந்ததும் அதுல அரைச்சு வச்ச மிளகாய்,இஞ்சி கலவையை சேர்த்து வதக்கனும்.அதுலயே இரண்டாவதா எடுத்த தேங்காய் பாலை ஊத்தி அடுப்பை சிம்ல வச்சு கொதிக்கவிடனும். கொதிச்சதும்,பாசிப்பருப்பை மசிச்சுவிட்டு இதுல சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா கொதிக்கவிடனும்.
பிறகு முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து நல்லா கொதிக்கவிட்டு அடுப்பில இருந்து இறக்கி வச்சிட்டா சொதி குழம்பு தயார்.
சொதி குழம்பை சூடான சாதத்தில் கலந்து, சைட் டிஷ்ஷாக காரசாரமா உருளைக்கிழங்கு பொரியல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்து சாப்பிட்டால் நல்லா டேஸ்ட்டா இருக்கும்.
பொதுவாக திருநெல்வேலிக்காரர்கள் புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு விருந்துடன் சேர்த்து இதைப் பரிமாறுவார்கள். தோசை,இடியாப்பத்திற்கும் இது செம காம்பினேஷன்!
#சொதி #Sothi #Tirunelveli #TirunelveliFoods
Leave a comment