13 Years of Vaaranam Aayiram ❤️
என்னோட வானர கூட்ட நண்பர்களோடு சேர்ந்து வாரணம் ஆயிரம் படம் பார்த்த அனுபவம். பதினொன்னாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம், பள்ளி ஆண்டு விழா. பொதுவாக பதினொன்னாம் வகுப்பு மாணவர்கள் தான் இந்த விழாவை ஆசிரியர்களுடன் இணைந்து நடத்துவார்கள். அவ்வகையில் எங்களிடம் அந்த ஆண்டின் பள்ளிகூட ஆண்டுவிழா நடத்தும் பொறுப்பு குடுக்கப்பட்டிருந்தது. காலையில் விளையாட்டு போட்டிகளும், மாலையில் பல்வேறு வகுப்பு மாணவர்களின் நாடகங்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும்,போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதலும் நடைபெறும்.
அன்றைய தினம் சீக்கிரமே பள்ளிக்கு சென்று விட்டோம். கேமரா மொபைல் பொதுஜன மக்கள் பயன்பாட்டுக்கு வராத காலம். அதனால் நண்பனின் டிஜிட்டல் கேமரா மூலம் ஆங்காங்கே சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். பின்னர் காலையில் விளையாட்டு தினம் முடிந்த பின்பு , அடுத்து என்ன செய்யலாம் என்று பேசிகொண்டிருந்த போது எல்லாரும் சேர்ந்து படத்துக்கு போவோம்னு முடிவு பண்ணோம். சரி என்ன படத்துக்கு போலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்ப, அப்போ வெளிவந்த வாரணம் ஆயிரம் போலாம், படம் நல்லாருக்குன்னு ஒருசில நண்பர்கள் சொன்னாங்க, கண்டிப்பா சூர்யா ரசிகனா தான் இருக்கனும், யாருன்னு சரியாய் நியாபகம் இல்லை!!

வாரணம் ஆயிரம் படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணியாச்சு. முதல்ல வரேன் வரேன்னு சொல்லிட்டு கொஞ்ச பேர் நழுவிட்டாங்க , அப்புறமா பத்துபேர்கிட்ட சேர்ந்து எங்க ஊர் கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டர்ல மதியம் ஷோக்கு டிக்கெட் எடுத்தோம் , நானும் வீட்டுல ஏதேதோ காரணம் சொல்லி தியேட்டருக்கு போனேன் , இதுதான் முதன் முதலாக வீட்டிற்கு தெரியாமல் பள்ளிகூட நண்பர்களுடன் பார்த்த முதல் படம். பள்ளிக்கூட நாட்கள்ல வீட்டுல யாரும் தியேட்டர் கூட்டு போகமாட்டாங்க, எப்போவாச்சு எங்க சித்தி ஊர்ல இருந்து வந்தாங்கன்னா படம் கூட்டினு போவாங்க. இதுனாலேயே ஒரு பயம், அதுனால படத்துக்கு போறேன்னு வீட்டுல சொல்லாம தியேட்டர் போய்ட்டேன்.

தியேட்டர் போய் ஒரே வரிசையில டிக்கெட் வாங்கிட்டு நண்பர்களோட படம் பாக்க ஆரம்பிச்சோம். சூர்யா, கிருஷ்ணன்னு அப்பா,மகன் ரெண்டு கதாபாத்திரத்திலயும் சூர்யா சிறப்பா நடிச்சு இருப்பார். படத்தோட ஆரம்பத்துல தன்னோட அப்பா இறந்த செய்தி கேட்டு “டாடினு கண் கலங்க சொல்லுறப்போ , அந்த இடத்துலயே படத்தோட நம்மள ஒன்ற வச்சு கடைசிவரை கொண்டு போயிருப்பார் கௌதம் மேனன். ” “அமெரிக்கா இங்கதான் இருக்குனு” சொல்லி தன் பையன் அவளோட காதலியை பார்க்க அமெரிக்கா அனுப்புற புதுவித மாடர்ன் அப்பாவை நமக்கு காட்டி இருப்பாரு கௌதம் . இப்போ அது மீம் டெம்ப்லேட்ட்டா நகைப்புக்குரியதா இருக்கலாம், அப்போ தியேட்டர்ல பார்க்கிறப்போ இப்படி ஒரு அப்பாவானு தோணுச்சு.

படம் பார்க்க போன இன்னொரு காரணம் எனக்கு ரொம்ப பிடிச்ச தலைவி இடுப்பழகி சிம்ரன், இந்த படத்துல வேற லெவல்ல நடிச்சு இருப்பாங்க. மாலினியாக இளமை,முதுமைனு இருதோற்றத்துல சூர்யாகூட சேர்ந்து நம் மனச இதமாக்கி இருப்பாங்க.

அப்போதான் பதின்ம வயசுல ஏதோ கொஞ்சம் விவரம் தெரிஞ்சு மனசுல இளமை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த நேரம் அது. முதற்பகுதியில யாரா இவ “அடியே கொல்லுதே”னு சமீரா ரெட்டி மனச கூத்தாட வைக்கும். முதல்முறையா ட்ரெயின்ல சூர்யா சமீராவ பாத்துட்டு கிட்டார் வச்சுட்டு தவியா தவிச்சுட்டு இருந்த மாதிரி நானும் இருந்தேன் ❤️.


அப்புறம் பிற்பகுதியில “அனல் மேலே பனித்துளியா” ரம்யா என் நெஞ்சத்தை சிலிர்க்க வைக்க, அடடா 😍 நான் ரம்யாவை அந்த பாட்டுல மெய்மறந்து பாக்க..பக்கத்துல இருந்த நட்புகள் என்னை கலாய்க்க🙈
இதுக்கு எல்லாம் முக்கியமான காரணம் துள்ளலான இசையை குடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்.
ஹாய் மாலினி ஐ ஆம் கிருஷ்ணன் ,
நான் இத உன்கிட்ட சொல்லியே ஆகணும்,
நீ அவளோ அழகு ,
இவளோ அழகா இங்க யாரும் பார்த்திருக்க மாட்டாங்க ,
ஐ அம் இன் லவ் வித் யூ …

இப்படி கிருஷ்ணன் மாலினிகிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணிட்டு பாடுற “முன்தினம் பார்த்தேனே” பாடலா இருக்கட்டும், கிட்டார் வச்சிட்டு “அடியே கொல்லுதேனு” மேகனா கிட்ட ப்ரோபோஸ் பண்றதா இருக்கட்டும் ,

பின்னாளில் மேகனா இறந்தபிறகு வருகிற “என்ன என்ன தேடி வந்த அஞ்சலை” பாட்டா இருக்கட்டும் ( இந்த பாட்டையும் நண்பன் ஒருத்தன் அவனை சூர்யாவா நினைச்சுட்டு ஒன் சைட் லவ்ல கிளாஸ்ல படிக்கிற அந்த சக பொண்ணை நினச்சு அஞ்சலை அஞ்சலை னு பொலம்பிட்டு இருந்தான்.. இப்போ நினச்சா சிரிப்பா வருது..அப்பவும் சிரிப்பாதான் இருந்துச்சு, அது வேற விஷயம் 😂 ) …இப்படி படத்துல இடம்பெற்ற எல்லா பாடலும் செம்ம ஹிட் !! சன் மியூசிக் , இசையருவி ரெண்டு சேனலும் போட்டிபோட்டு மாத்தி மாத்தி இந்த பாட்டுகளை போட்டு தெறிக்க விட்ட காலம் !!!
படத்தின் இறுதி காட்சியில சிம்ரன் சூர்யா கிட்ட சொல்லுற வசனம் “Whatever Happens…Life has to Move On” .
என்னோட பாலிசியும் அதுதான் “வாழ்க்கைல என்ன நடந்தாலும் கடந்து போயிட்டே இருக்கனும்” இல்லனா அதையே நினைச்சு வாழ்க்கை அங்கேயே தேங்கி நிற்கும் . சிம்ரன் வாரணம் ஆயிரம்ல சொன்ன அதே வார்த்தையை “பேட்ட ” படத்துல தலைவர் ரஜினி சிம்ரன்கிட்ட சொல்லுவார் ” கடந்த போறதுதான் வாழ்க்கை” ❤️
நினைவுகளுடன் கூடிய மறக்கமுடியாத சில படங்களில் இதுவும் ஒன்னு. One of My Favorite Film, #GVM & #Harris Magical Tale ❤️❤️
#Suriya #Simran #Sameera #HarrisJayaraj #VaaranamAayiram #SchoolDays #NostalgicMemories
Leave a comment