சித்திரை திருவிழாவில் சின்னாபின்னமான தருணம்

கடந்த மாதம் மதுரைக்கு சித்திரை திருவிழா காண சென்றபோது கூட்டத்தில் சிக்கி சின்னாப்பின்னாமான திக் திக் நிமிடங்கள் 😭😭😭

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் மதுரை சித்திரை திருவிழா வைபோகத்தை பார்க்க முடிவுசெய்து விழாவின் முந்தைய நாள் இரவு மதுரை வந்து தம்பி கமலுடன் மதுரையை சுற்றிவிட்டு, சாமி உலா பார்த்துவிட்டு, இரவு 2 மணிக்கு யாஷின் #KGF2 படத்தை கோபுரம் சினிமாஸ்ல பார்த்துவிட்டு அது முடிச்ச கையோட ஆத்துல இறங்குற விழாவை பார்க்க அதிகாலை கிளம்பி போனோம்.

தேவர் சிலை பக்கம் கள்ளழகர் வந்து போனதும் திடீர்னு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சு கூட விடமுடியாத அளவுக்கு எல்லா பக்கமும் இருந்து நசுக்கி தள்ளிட்டாங்க. இன்னைக்கு நாம செத்தோம்ங்குற நிலைமைக்கு போய்ட்டேன் 🥺

எல்லா பக்கத்துல இருந்தும் தள்ளிட்டே வந்ததுல நகரவே முடியாம ஒரே இடத்துல சிக்கி கால்ல மிதிப்பட்டு, மூச்சுவிட சிரமம் ஆகிருச்சு. கூடவே வந்த கமலும் என் பிரெண்டும் ஒரு கட்டத்துல பிரிஞ்சு போய் எங்க போனாங்கனே தெரியல. நேரம் ஆக ஆக யாரும் நகர்ந்து போகாம முன்னோக்கி தள்ள ஆரம்பிச்சுட்டாங்க.

தேவர் சிலைக்கு பக்கத்துல இருக்க பெட்ரோல் பங்க் பக்கம் கூட்டம் தள்ளிட்டு போக.. கூட்டத்துல இருந்த பொம்பளைங்க, சின்ன பொண்ணுங்க, பசங்க, வயசான பாட்டினு எல்லாரும் நெரிசல்ல மூச்சுவிட முடியாம உயிர் பயத்துல கத்தி அழ “சாவு பயத்தை காட்டிட்டாங்களே ராக்கி”னு தோணிருச்சு.

ஒரு கட்டத்தில எல்லாரும் கடுப்பாகி கத்தி திட்டி நாம எப்படியாச்சும் தப்பிச்சா போதும்னு முன்னேறி தள்ள ஆரம்பிக்க.. அதுல ஒரு அக்கா, வயசான பாட்டி மயக்கம் போட்டு விழாத குறைக்கு போய்ட்டாங்க. பின்னாடி இருந்து ஓவரா தள்ளுனதுல கீழ சரிஞ்சு கிடந்த பைக் மேல நான் விழுந்து என் கால் மேல வேற ஒருத்தர் விழுந்ததுல என் கால் பைக்ல மாட்டிக்கிச்சு. நான் கூடத்துல சிக்கி கீழ விழுந்த காப்பாத்த சொல்லி கத்துனதுல தொண்டை கவ்விடுச்சு.

அங்க நின்னுட்டு இருந்த ஒரு பச்சை சட்டை போட்ட பையனை காப்பாத்துடானு கையை குடுத்து கேட்டு அவன்தான் பைக்கைல இருந்து மாட்டி இருந்த காலை எடுத்துவிட்டு தூக்கிவிட்டான். ஒன்னு உசுரு போயிருக்கும், இல்லை கால் உடஞ்சிருக்கும் இன்னைக்கு.. எப்படியோ அதுல இருந்து தப்பிச்சி பக்கத்துல இருந்த சுவர் வழியா கஷ்டபட்டு மேல ஏறி அந்த பெட்ரோல் பங்க் rooftop ceilingல போய் உக்காந்துட்டேன்.

கொஞ்ச நேரத்துக்கு ஒன்னும் மைண்ட்ல ஓடல… நல்லா மூச்சு விட்டு ஆசுவாசப்படுத்தவே நேரம் ஆச்சு..தப்பிச்சிட்டோம் இனி என்ன ஆனாலும் கூட்டம் போனதுக்கு அப்புறம் கீழ இறங்கி போலாம்னு அங்கேயே உக்காந்துட்டேன்.

பிரெண்ட்ஸ்க்கு கால் பண்ணா யாருக்கும் நெட்ஒர்க் பிரச்சனைல கால் போகல. கொஞ்ச நேரம் கழிச்சு அவனுங்களை கால் கணெக்ட் பண்ணி அவங்க இருக்க இடம் கண்டுபிடுச்சு அங்க போய் பாத்து ஒன்னு சேர்ந்துட்டோம். மூனு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தர் உயிரோட இருக்கோமானு கூட தெரியாத நிலமை 🥺

எப்படியோ ஒரு வழியா அந்த கூட்ட நெரிசல் இருந்து சிக்கி உயிரோட வந்ததே பெருசுன்னு ஆகிப்போச்சு. கொஞ்சம் விட்டு இருந்தா மதுரைக்கு கள்ளழகர பாக்கலாம்னு வந்த என்னை அவர் வைகுண்டதுக்கே கூப்பிட்டு போயிருப்பாரு போல

That “ஆண்டிய கரெக்ட் பண்ணலாம்னு வந்தா அவ ஆண்டனாவை கரெக்ட் பண்ணவிட்டு அந்தரத்துல தொங்கவிட்டாலே மொமெண்ட்” 🥺😂


அண்ணாத்த கள்ளழகர பார்த்தாச்சு… அப்படியே தங்கச்சி மீனாட்சியையும் பார்த்திடலாம்னு கிளம்பி மீனாட்சி அம்மன் கோவில் போய் அம்பாள், சுவாமி தரிசனம் முடிச்சுட்டு பிரசாதமா குடுத்த லட்டு வாங்கி சாப்பிட்டு அப்படியே அங்க இருந்து வெளிய வந்து காலை சாப்பாட்டை முடிச்சோம். பிறகு கொஞ்சம் நேரம் பேசிட்டு தம்பி கமலிடமிருந்து விடைபெற்று கொண்டு அப்படியே கிளம்பி 2.30 மணி ட்ரெயின்க்கு 12.30க்கே போய் ரெயில்வே ஸ்டேஷன்ல கொஞ்ச நேரம் படுத்து எந்திரிச்சு ட்ரெயின பிடிச்சு கோவில்பட்டி போய் சேர்ந்தேன்.

உடம்புலாம் அக்கக்கா அங்க அங்க வலிக்குது..ஷப்பா முடியல 🥺😭கூட்டத்துல தொலைச்ச செருப்பை திரும்ப எப்படியோ வரும்போது கண்டுபிடிச்சு போட்டு வந்துட்டேன். கண்ணாடி தான் துலஞ்சு போச்சு 😭😭

மீனாட்சி அம்மன் கோவில்ல இருந்து வெளிய வந்த பிறகுதான் தெரியும்… கூட்ட நெரிசல்ல ரெண்டு பேர் இறந்துட்டாங்கன்னு, விட்டா எங்க பேரும் லிஸ்ட்ல வந்திருக்கும் 😐

இது ஒரு மறக்கமுடியாத மதுரை சம்பவமா ஆகிப்போச்சு 😎😎😎

நன்றி வணக்கம் 🙏

~ ராக்ஸ் 🖋️

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑