
#இந்தியன்2 🤞🤞Spoiler
முதலில் இந்த படத்தை பார்க்க விருப்பம் இல்லை என்றாலும்..ரொம்ப வருஷமா எடுத்து ஒரு வழியா இப்போ படம் ரிலீஸ் ஆகுது, சரி நம்ம ஆண்டவர் கமல் & ஷங்கருக்காக பார்த்திட்டு வருவோம்ன்னு தியேட்டர் போயாச்சு. ஒரு பெரிய ஹீரோ படம் வெளியாகிறப்போ வர ஒரு ஃபீல் தியேட்டர்ல இல்லவே இல்லை. விளம்பரம் எல்லாம் முடிஞ்சு படத்தை போட்டாங்க. சின்னவருக்கு முதல்ல ஒரு வணக்கத்தை போட்டுட்டு..அப்புறமா
உலகநாயகன் டைட்டில் கார்டு – பெஸ்ட் (உருப்படியான விஷயங்கள் ல இதுவும் ஒன்னு).
அடுத்தது “இந்தியன் 2” டைட்டில் கார்டு வரும்னு ஆவலா மொபைல் கேமரா ஆன் பண்ணி வச்சிட்டு ரெடியா இருந்தா.. டக்குனு கதைக்கு போயிட்டாங்க (பெருத்த ஏமாற்றம்).
படம் ஆரம்பிச்சது… சமூக பிரச்சினைகள் லஞ்சம், ஊழல் நடக்குது.. அதை தட்டி கேட்டு வீடியோ போடுறாங்க நம்ம யூடியூப் சமூக போராளிகளான சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன் & கோ. அதன் மூலம் எதும் மாற்றம் வரும்னு நினைச்சு இவங்க யூடியூப் சேனல்ல விடியோவா போட்டு தள்ளுறாங்க. ஆனா அதுலாம் ஒரு ம**ரும் மாறாது, தப்பு பண்ணவங்க எல்லாம் வெளிய ஜாலியா இருக்காங்க.. அப்படிங்கிற உண்மையை பொடதியில அடிச்ச மாதிரி விளக்கி சொல்லி..நீ மூடிக்கிட்டு என் கூட வா..நாம அமெரிக்கா போலாம்னு ஹீரோயின் ரகுல் பிரீத் சிங் ..ஹீரோ சித்தார்த் கிட்ட சொல்லுது.
ஆனா அதெல்லாம் முடியாது.. நாம சமூகத்தை மாத்தியே ஆகனும் , நீ கிளம்பு அப்படின்னு சித்தார்த் சொல்ல.. எப்படியோ போய் தொலைன்னு சொல்லிட்டு ரகுல் ப்ரீத் சிங் கார்ல ஜூவெயிங்’ன்னு கிளம்பி போயிறுது. இதுக்கு எல்லாம் சரியான ஆள் நம்ம இந்தியன் தாத்தா தான். அவர் தான் திரும்ப வரணும்ன்னு சொல்லி ஓவர் நைட்ல முடிவு பண்ணி #ComeBackIndian அப்படினு hastag போட்டு டிரெண்ட் பண்ண..
தைபெய் நாட்டுல கம்பு சுத்திக்கிட்டு இருந்த இந்தியன் தாத்தா.. இந்த ஒரு நேரத்துக்கு தான் நான் காத்திக்கிட்டு இருந்தேன் .. I’m Coming அப்படின்னு கிளம்பி மாறுவேஷத்துல இந்தியா வராரு..வந்தவரு ஏர்போர்ட்ல வாயை வச்சிட்டு சும்மா இல்லாம என்னமோ உளறி CBI அதிகாரி பாபி சிம்ஹா கிட்ட ஏர்போர்ட்ல வச்சே மாட்டிக்கிறாரு. அப்புறம் ஜிம்மிக்ஸ் பண்ணி அங்க இருந்து எஸ்கேப் ஆகிடுறாரு.
ஆனா இங்க வர முன்னாடியே வெளிநாட்டுல ஒரு பணக்கார வில்லனை வர்ம கலை மூலமா அவனோட கப்பல்ல வச்சே போட்டு தள்ளி சம்பவம் பண்ணுறாரு. இதுதான் கமல் சார் Intro சீன். ஆனா தியேட்டர் அமைதியா இருந்திச்சு 😭😭😭
இந்த கார்பொரேட் வில்லன் தான் முன்னாடி நடந்த ஒரு சமூக பிரச்சினைல ஒரு உயிர் போறதுக்கு காரணம். அதுனால தான் இவனை போட்டு தள்ளுறாரு.இதை முடிச்சிட்டு தாத்தா இந்தியா வாராரு.
இங்க உள்ள லஞ்சம், ஊழல் எல்லாம் ஒழிக்க நீங்க உங்க வீட்டுல இருந்தே ஆரம்பிக்கணும் அப்படின்னு சொல்லி இளைஞர்கள் பக்கம் திருப்பி விட்டுட்டு தாத்தா கிளம்பி குஜராத், பஞ்சாப் ன்னு வித விதமான கெட்டப் போட்டு போய் வர்ம கலை வச்சு விளையாடுறார்.
அவர் வடக்குல விளையாட.. சித்தார்த் & கோ அவங்க வீட்டுக்குள்ள விளையாடுறாங்க
குஜராத்ல ஒரு சம்பவம் பண்ணிட்டு.. அங்க உள்ள பிரிட்ஜ் மேல மாசா (அப்படி ஃபீல் பண்ணி) அத்வானி கெட்டப்ல நடந்து வரப்போ (ஒரு பய கை தட்டல) “Intermission” ன்னு போடுறாங்க.
இதெல்லாம் ஒரு இன்டர்வல்’லா😭
தியேட்டர் கேன்டீன்ல ஒரு முட்டை பஃப்ஸ் வாங்கி சாப்பிட்டுகிட்டே இரண்டாம் பாதி பார்க்க ஸ்டார்ட் பண்ணேன். தாத்தா வோட பேச்சை கேட்டு வீட்டுல களை புடுங்க ஆரம்பிச்ச சித்தார்த் & கோ மாஸா ஃபீல் பண்ணுறாங்க.
அப்போ சித்தார்த் வீட்டுல ஒரு அசம்பாவிதம் நடக்க.. அதுக்கு நீங்க தான் காரணம் அப்படின்னு இந்தியன் தாத்தா மேல பலி போட்டு #ComeBackIndian ன்னு டுவீட் போட்டு தாத்தாவை வர சொன்ன சித்தார்த் & கோ..இப்போ #GoBackIndian போட்டு அவரை திட்டி போக சொல்றாங்க. அவங்க மட்டும் இல்லாம போலீஸ், வில்லன் குரூப்ஸ், பொது ஜனம் எல்லாம் trigger ஆகி தாத்தாவை கொலை காண்டுல துறத்துறாங்க. இந்தியன் தாத்தா ஒரு சின்ன பையன்கிட்ட இருந்து unicycle புடுங்கிட்டு சென்னையை சுத்தி ரவுண்ட் அடிக்கிறாரு.. கடைசில ஒரு குடோன் ல சிக்ஸ் பேக் காட்டி அடியாட்கள் கூட சண்டை போட்டு மறுபடியும் unicycle ல தப்பிக்கிறாரு (அரை மணி நேரமா) ஒரு கட்டத்துல பொது ஜனம், மகளிர் அணி, வில்லன், போலீஸ்ன்னு எல்லாரும் சேர்ந்து ரவுண்டு கட்டி தாத்தாவை அடிக்கிறாங்க.
நிராயுதபாணியா நிக்கிற தாத்தாவை பாக்க பாவமா இருந்துச்சு. கல்லு, பேட், கம்புன்னு எவளோ அடி வாங்கினாலும் தாத்தாக்கு ஒரு காயம் கூட வரல. அப்போ அங்க சிபிஐ அதிகாரி பாபி சிம்ஹா வந்து தாத்தாவை அரெஸ்ட் பண்ணி கூட்டிகிட்டு போகுறாரு. அந்த நேரத்துலயும் தன்னோட வர்ம கலையால பாபியை பணையகைதியா பயன்படுத்தி “I will be back” ன்னு சொல்லி அங்க இருந்து தப்பிக்கிறார் நம்ம சேனாபதி தாத்தா.
அப்புறம் என்ன ஆகும் அப்படின்னு நினைச்சா.. “A Film by Shankar” அப்படின்னு போட்டு படத்தை முடிச்சிட்டாங்க 😭😭
நல்லவேளை End Credits அப்புறம் #Indian3 டிரெய்லர் போட்டாங்க…சற்று ஆறுதல்🥴
படத்துல எனக்கு பிடிச்ச ஒரு சில விஷயம்..
1. உலகநாயகன் டைட்டில் கார்டு
2. முதல் 20 நிமிட சமூக பிரச்சினை-பல படங்கள்ல வந்திருந்தாலும்….
இதுல பாக்குறப்போ நல்லா இருந்துச்சு.
3. அந்த கலர்புல் சாங்..😍
4. விவேக், மனோபாலா வந்த காட்சிகள்.. AI & VFX தயவால் விவேக் காட்சிகளை கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு காட்சியை தவிர மற்ற இடங்களில் அது தனித்து தெரியவில்லை.👌👌
5. சில ஒன் லைனர்கள் நல்லாருந்துச்சு
6. ஷங்கரின் முந்தைய பட வசனங்கள், காட்சிகள் – குறிப்பாக “சிவாஜி” படத்தில் வரும் “கோன் ஹே…Boss’டா கேனை” காட்சி
7. இந்தியன் முதல் பகுதியில் வந்த ரஹ்மானின் BGM இந்த படத்தில் அங்கங்கே பயன்படுத்திய விதம் 👌 (முழுப்படமும் ரஹ்மானே பண்ணிருக்கலாம் போல) அனிருத் செட்டாகல 😭😭😭😭
8. படத்துல விதவிதமான கெட்டப்ல வந்த கமலுக்கு வாழ்த்துக்கள். பாக்க கொஞ்சம் நல்லாதான் இருந்துச்சு.
சுடுகாட்டு ஸீன்ல சித்தார்த் & கோ.. தாத்தாவை Go Back Indian என்னு சொல்லி விறட்டுறப்போ பாக்க பாவமா இருக்கும். அந்த எமோஷனல் காட்சிக்கு வழு சேர்க்கும் விதமாக ரஹ்மான் BGM லைட்டா use பண்ணி அனிருத் ஒரு BGM போட்டு இருப்பான். அந்த ஸீன் நல்லா கனெக்ட் ஆச்சு.
அதே மாதிரி ஊரே சேர்ந்து அடிக்கிறப்போவும் எமோஷனல் கனெக்ட் இருந்துச்சு.
மொத்த படத்துல இந்த ரெண்டு காட்சிகள்ல கமலோட நடிப்பு எனக்கு பிடிச்சு இருந்துச்சு.
பிடிக்காத சில விஷயங்கள்..
பாடல்கள், சொதப்பலான திரைக்கதை சித்தார்த், நீண்ட நெடிய சேசிங் காட்சி…
படத்துல பிரம்மாண்டம், VFX, கலர்புல் எல்லாம் இருந்துச்சு. ஆனா விறுவிறுப்பான திரைக்கதைன்னு ஒன்னுமே இல்லை.
முதல் பாகத்தில கெட்டப் & திரைக்கதை அவ்வளவு சிறப்பா இருக்கும். ரஹ்மானின் இசையில் பாடல்கள் அவளோ சிறப்பா இனிமையா ஒரு உணர்வோட இருக்கும், எப்பா கேட்டாலும் ஒரு புல்லரிப்பு இருக்கும், புதுசா இருக்கும். ஆனா இந்தியன் 2’ல இதுல எதும் சரியா இல்லை.
மொத்தத்துல இந்தியன் 2….
நீங்களே பார்த்து முடிவு பண்ணிக்கோங்க.
ஒரு வரியில படத்தை பத்தி சொல்லி இருக்கலாம். ஆனா படம் எதிர்பார்த்த மாதிரி இல்லை, அந்த விரக்தியில் இவளோ பெருசா எழுத வேண்டியதா ஆகிடுச்சு.
நன்றி வணக்கம் 🏃
Thanks for disappointing @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @LycaProductions

Let’s wait for the best #Indian3 😎
#Indian2
Leave a comment