அடுத்த கதை ✌️

வணக்கம் மக்களே !!!

“சஞ்சனா, ராசுக்குட்டியின் சிவராத்திரி, ஜன்னல் வந்த காற்றே, இருட்சரன்,ஸ்பெஷல் தோசை, சித்தி” போன்ற சிறுகதைகளின் வரிசையில் அடுத்ததா புது கதை ஒன்னு தயாராகி இருக்கு.

இந்தமுறை கொஞ்சம் பெரிய கதையா உருவாகி இருக்கு. சிறுகதையாக எழுத ஆரம்பிச்சு அப்புறம் என்னோட எண்ணத்தில் ஓடிய கற்பனை குதிரை எங்கும் நிற்காமல் தறிகெட்டு ஓடி தற்போது சற்று பெருங்கதைகாக மாறிவிட்டது

மொத்த கதையையும் ஒரே பதிவா போட்டு உங்களை நோகடிக்க விரும்பலை. அதுனால முழுக்கதையையும் சில அத்தியாயங்களா பிரிச்சு இருக்கேன், அது கதைக்கும் தேவைப்பட்டுச்சு.

வாரா வாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு அத்தியாயத்தை இங்க பதிவிட போறேன். உங்களுக்கும் படிச்சு பாக்க நேரமிருக்கும், எனக்கும் அடுத்தடுத்த அத்தியாயங்களை பதிவிட வசதியா இருக்கும்.

நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இன்னைக்கு முதல் அத்தியாயத்தை மதியம் 12.12க்கு வெளியிடலாம்ன்னு இருக்கேன். முந்தைய கதைகளுக்கு உங்க ஆதரவுகளை தந்தது போல இந்த தொடர் கதைக்கும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கிறேன்.

இந்த கதைக்கு வைத்துள்ள தலைப்பு “நெடுஞ்சாலை இரவு“.

அடுத்த பதிவில் இருந்து ஒரு பயணத்தை மேற்கொள்ள தயாராக இருங்கள் 🚛

இப்படிக்கு,

உங்கள் நான் ❤️

நன்றி வணக்கம்

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑