சூரியன் FM 93.5 ❤️

2008’ல் சன் குழுமம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கி படங்களை விநியோகம் செய்ய ஆரம்பித்தது. அதில் முதல் படமாக 2008 ல் வெளிவந்தது காதலில் விழுந்தேன். அந்த படத்தில் விஜய் ஆண்டனியின் இசையில் ” நாக்க முக்க, தோழியா என் காதலியா..” போன்ற பாடல்கள் சன் மியூசிக், சூரியன் எப்எம் போன்ற சன் ஊடகங்களில் மணிக்கு ஒருமுறை அன்றைய தினம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. அது மட்டுமின்றி அந்த படத்தின் டிரைலரும் சன் டிவி சேனல்களில் அனைத்திலும் ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் வந்து கொண்டே இருந்தன. இவ்வாறாக அந்த படத்தினை தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டே இருந்தது சன் டிவி.

காதலில் விழுந்தேன் படத்தை தொடர்ந்து இரண்டாவதாக சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படம் ஜீவா நடிப்பில் வந்த தெனாவட்டு. இந்த படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார் இதிலும் குறிப்பிடும்படியாக 2 பாடல்கள் “உசிலம்பட்டி சந்தையிலே, எங்கே இருந்தாய்..” இந்த இரண்டு பாடல்களும் மாற்றி மாற்றி ஒளிபரப்பாகின.

அப்போது நான் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் 9ஆம் வகுப்பு படிக்க தொடங்க ஆரம்பிக்கப்பட்ட போதே எங்கள் வீட்டில் கேபிள் கனெக்சனை எடுத்து விட்டார்கள். அதற்குப் பின்பாக உறுதுணையாக இருந்தது சூரியன் FM மட்டுமே. 2008 ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தொடங்கியபோது சூரியன் எஃப் எம் இல் அந்தப் படத்தின் பாடல்கள் பிரத்தியேகமாக மாறி மாறி ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டே இருக்கும். நான் காலை 8 மணிக்கு எந்திரிச்சு கிளம்பும்போது “கிட்டு மாமாவும் சூசி மாமியும்” சூரியன் FMல் பேசிக் கொண்டிருப்பார்கள்.

நெல்லையின் நம்பர் 1 எப்எம் சூரியன் FM 93.5 ல இப்போ நீங்க கேட்கபோற பாட்டு.. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் தெனாவட்டு திரைப்படத்திலிருந்து ….” என்று இந்த டோன் ல ஒவ்வொரு முறையும் எப்எம்ல பாட்டு வந்துட்டே இருக்கும், படங்கள் மற்றும் பாடலின் பெயர்கள் மட்டும் அவ்வபோது மாறும்.

அப்போது முதல் பாடலாகவே “உசிலம்பட்டி சந்தையிலே” பாடல் தொடங்கும், பின்னர் சிறிது நேரம் கழித்து “எங்கே இருந்தாய்” பாடல் ஒளிபரப்பாகும். அதன் பிறகாக அந்த சமயத்தில் வெளியான மற்ற புது படங்களின் பாடல்கள் ஒவ்வொன்றாக ஒளிபரப்பாகும். ஆனால் சன் பிக்சர்ஸ் பாடல்கள் மட்டும் மணிக்கு ஒரு முறை ஒளிபரப்பு ஆகும். காலையில் இந்த பாடலை கேட்டுவிட்டு பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் சாயங்காலம் படிப்பு தொடங்குவதற்கு முன்பாக சூரியன் FM போட்டால் அப்போதும் “கிசு கிசு கீதா” நிகழ்ச்சியில் அந்த பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும்.

அதில் என்னவோ இந்த “எங்கே இருந்தாய்” பாடல்கள் மட்டும் மனதிற்கு மிக நெருக்கமான பாடல்களில் ஒன்று ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் மெல்லிதான, மனதை இலகுவாக்க கூடிய ஒரு பாடல். ஒரு சில பாடல்கள் மட்டும் என்ன காரணம் என்று தெரியாது ஆனால் மனதிற்கு சட்டென்று பிடித்துவிடும், அதில் ஒன்றுதான் இந்த பாடலும்.

சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்கள் அனைத்தும் அந்த சமயத்தில் சுமாரான படங்கள் தான், அதில் வரும் பாடல்கள் மற்றும் படத்தின் டீசர்களை கொண்டு ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் அதை தொடர்ந்து மக்கள் முன்பு பிரமோட் செய்து கொண்டே இருப்பார்கள். படங்களில் பெரிதாக எதுவும் இல்லை என்றாலும் இந்த பாடல்களை கேட்கவாவது சென்று பார்த்த கூட்டமும் உண்டு.

காதலில் விழுந்தேன் தொடங்கி குட்டிப்புலி வரை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படங்கள் அதிகம். காதலில் விழுந்தேன், திண்டுக்கல் சாரதி, தெனாவட்டு, படிக்காதவன், தீ , அயன், தீராத விளையாட்டுப் பிள்ளை, நினைத்தாலே இனிக்கும் , வேட்டைக்காரன், சுறா, தில்லாலங்கடி , சிங்கம், மாப்பிளை என்று லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கும். அது ஒரு காலம், வெள்ளிக்கிழமை ஆனால் போதும்.. சன் பிக்சர்ஸ் படம் ஒன்று வெளியாகி கொண்டே இருக்கும்.

என்னுடைய 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி நாட்களில் காதலில் விழுந்தேன் , தெனாவட்டு படத்தில் தொடங்கி சிங்கம் வரை சூரியன் FMல் பாட்டு கேட்டது தான் அதிகம். பின்னர் 12 ஆம் வகுப்பு முடித்த போது என் வீட்டில் மீண்டும் சன் மியூசிக் தன் ஆதிக்கத்தை செலுத்தியது, சூரியன் FM பரண்மேல் ஓரமாக முடங்கி போனது. அதன் பிறகு அவ்வப்போது வெளியூர் பயணத்தின் போது சூரியன் FM கேட்டதுண்டு.

மேலே குறிப்பிட்ட சன் பிக்சர்ஸ் படங்களில் சில Underrated பாடல்களும், எனக்கு பிடித்த பாடல்களை பற்றிய பதிவுதான் இது. அது ஒரு நாஸ்டலாஜிக் நாட்கள், ஒவ்வொரு பாட்டுக்கு பின்பும் ஒரு கதை அல்லது நிகழ்வு இருக்கிறது, இந்த பாடல்களை கேட்கும் பொழுது அதை சார்ந்த நினைவுகள் வந்து செல்லும். ❤️

எனக்கு பிடித்த பாடல்கள்

  • தோழியாய் என் காதலியாய் – காதலில் விழுந்தேன்
  • எங்கே இருந்தாய் – தெனாவட்டு
  • பருத்திக்காடு பத்திக்கிச்சு – திண்டுக்கல் சாரதி
  • காலை நேர தென்றல் – தீ
  • நீ இல்லாமல் நான் இங்கேது – தீ
  • நெஞ்சே நெஞ்சே நீ எங்கே – அயன்
  • விழி மூடி – அயன்
  • டோரா டோரா அன்பே டோரா – மாசிலாமணி
  • ஓஹ் திவ்யா – மாசிலாமணி
  • அழகாய் பூக்குதே – நினைத்தாலே இனிக்கும்
  • வெண்பஞ்சு, காற்று புதிதாய் – கண்டேன் காதலை
  • சின்ன தாமரை – வேட்டைக்காரன்
  • கரிகாலன் கால போல – வேட்டைக்காரன்
  • ஒரு புன்னகை தானே – தீராத விளையாட்டு பிள்ளை
  • என் இதயம் – சிங்கம்

இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன, மேலே குறிப்பிட்ட பாடல்கள் எனக்கு பிடித்தவை.

உங்களுக்கும் இதே போல FM அல்லது ரேடியோ பற்றிய நினைவுகள் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க…

நன்றி வணக்கம் ❤️

#SuriyanFM #SunPictures

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑