
கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்டு முழித்தவன்.. மொபைலில் டைம் பார்த்த போது 1.11 என்று திரையில் காட்டியது. இந்நேரத்துல யாருடா கதவை தட்டுறது என்று யோசித்தவாறே கதவை திறக்க எழுந்து சென்றான். இவன் திறக்க போகும் முன்பு கதவை தட்டும் சத்தம் நின்று போனது. இருந்தும் கதவை திறந்து வெளியே பார்த்த போது அங்கு யாரும் இல்லை.
என்னடா ஒருத்தரையும் காணும் என்று தூக்கத்தில் புலம்பி கொண்டே கதவை சாத்திக்கொண்டு வந்து மீண்டும் படுக்க போகும் முன்பு திரும்பவும் கதவை தட்டும் சத்தம் கேட்டது. யாருடா நம்மகூட இந்நேரம் விளையாடுறது என்று புலம்பிக்கொண்டே மீண்டும் கதவை திறந்து பார்த்தான்.
“சார் ரூம் சர்விஸ்” என்று அந்த ஹோட்டல் ஊழிய பெண் ஒருவள் நின்று கொண்டு இருந்தாள்.
“நான் ஏதும் கூப்பிடலேயே” என்று சொன்னான் அவன். “உங்க ரூம்’ல் இருந்து தான் அழைப்பு வந்தது, 302” என்று அந்த பெண் சொன்னாள்.
“இது ரூம் நெ.303” என்று கடுப்புடன் சொன்னான் அவன்.
“சாரி சார்” என்று சொல்லிக்கொண்டு அவள் கிளம்பினாள்.
“ச்சை… தூக்கத்தை கெடுத்துட்டாளே” என்று அவளை திட்டிக்கொண்டே வந்து கட்டிலில் படுத்தான். ஒரு நிமிட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்க… அடங்கோ** என்றவாறு கோவமாக எந்திரித்து சென்று “அதான் நான் ரூம் சர்விஸ் கேட்கலன்னு சொல்லிட்டேன்ல.. அப்புறம் ஏன் தொல்லை பண்ணுறீங்க ” என்று கதவை திறந்தவாறே கத்தினான்.
அப்போது அந்த ரூம் சர்விஸ் ஊழிய பெண் அழுதுகொண்டே இவன் முன்னால் நின்றாள்.
“எம்மா நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழுகுற” என்று அவன் கேட்க… அழுது கொண்டிருந்தவள் வேகமாக ஓடி சென்று அந்த மூன்றாம் தளத்தில் இருந்து கீழே குதித்தாள்.
“அடிப்பாவி என்னடி இப்படி பண்ணிட்டே” என்று வேகமா சென்று அவள் குதித்த இடத்தை பார்த்தான். அங்கு அவளின் தலை தரையில் மோதி ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். அவளின் உடம்பின் அருகில் இன்னொரு பெண் ஊழியர் தரையில் அமர்ந்திருந்தாள். இவன் அதிர்ச்சியில் இருவரையும் பார்த்து கொண்டு இருக்க.. அப்போது அருகில் அமர்ந்து இருந்த பெண் ஊழியர் எழுந்து நின்று மேல் நோக்கி இவனை பார்த்தாள். அவளை பார்த்ததும் இவனுக்கு பயத்தில் தூக்கிவாரிப்போட்டது. கீழே குதித்தவள் போலவே இவளின் முகமும் இருந்தது , கண்களை நன்றாக துடைத்துக்கொண்டு மீண்டும் உற்று பார்க்க அவள்தான் அது என்று உறுதிபடுத்தி கொண்டான்.
எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்க முடியும் என்று இவன் யோசிக்க..கீழே நின்று கொண்டிருந்தவள்.. பலமாக ஒரு சிரிப்பு சிரித்தவாறே இவனை ஒரு பார்வையிட.. பயத்தில் உறைந்து போனவன் கண்களை மூடி திறந்து பார்க்கும் நொடியில்.. அவள் அங்கு இருந்து மறைந்து விட… ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தவளையும் காணவில்லை.
இதையெல்லாம் பார்த்து இவனுக்கு பயத்தில் நெஞ்சு படபடத்து தலை சுற்ற.. மூச்சை பிடித்து கொண்டு எப்படியோ தன் அறைக்குள் வந்து கதவை சாத்திக்கொண்டு கட்டிலில் வந்து அமர்ந்தான். டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தான். சிறிது நேரம் மூச்சை இழுத்துவிட்டு ஆசுவாசப்படுத்தி கொண்டான். கண்களை மூடி படுத்தான்… தூக்கம் வரவில்லை.. காதில் அந்த சிரிப்பு சத்தம் மட்டும் அலறிக்கொண்டு இருக்க.. இவன் மனதில் ஒரு கேள்வியும் ஓடிக்கொண்டு இருந்தது..
“யார் அவள் ????”…
~ ராக்ஸ் 🖋️
ornate! Famous Poet’s Lost Work Discovered After Century 2025 beauteous
LikeLike