நெடுஞ்சாலை இரவு: புத்தகம் !!!

ஓர் நீண்ட பயணம் !!!

இந்த உலகம் எழுத்துக்களால், புத்தகங்களால், கதைகளால் இயங்கிக்கொண்டே இருக்கிறது. கதைகள் கேட்காத, கதைகள் சொல்லாத, கதைகள் இல்லாத எந்த ஊரும், நாடும், உலகமும் இல்லை. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும்.  “What is history? His story is History.” — இது சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் பேசிய வரிகள்.
உண்மைதான்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அந்த வரிசையில் நானும் ஒருவன். சிறுவயதில் சிறுவர் மலர், சுட்டி விகடன் போன்ற இதழ்களில் கதைகளைப் படித்து வளர்ந்தேன். அந்த கதைகள் மனதைக் கவர்ந்த சமயங்களில், கற்பனை ஓட்டங்கள் தோன்றும். இது கதைகள் படிக்கும்போது தோன்றக்கூடிய சாதாரண விஷயம் தான். அப்படி தோன்றிய கற்பனைகளை வைத்து சிறு சிறு கதைகளை நோட்டு புத்தகங்களில் எழுதியிருக்கிறேன்.

பிறகு பள்ளி, கல்லூரி, வேலை என்று வாழ்க்கை வேறு ஒரு பாதையில் பயணித்தாலும், புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் மட்டும் தொடர்ந்தது. வாசிப்பு பழக்கம் மீண்டும் எழுதும் எண்ணத்தை மனதில் விதைத்தது. அதன் தொடர்ச்சியாக முதன்முறையாக சமூக வலைதளங்களில் கட்டுரைகள் எழுதத்  கிடைத்த ஊக்கமும், பாராட்டுக்களும் மீண்டும் எழுதும் உணர்வை தூண்டின.


அதன் பின்னர், இந்த வலைதளத்தில் என் முதல் சிறுகதையை எழுதி பதிவிட்டேன். நண்பர்களின் உற்சாகமான பின்னூட்டங்கள் என் எழுதும் பயணத்தை தொடர வைத்தன. அந்த சிறுகதை முயற்சிகள் இன்று ஒரு முழு நாவல் உருவாகும் கட்டத்தை எட்டியிருக்கின்றன.

ஒரு கதையின் தொடக்கம் சில நொடிகளில் தோன்றும் ஒரு வரி அல்லது காட்சி. ஆனால் அந்த ஒரு வரியை முழுமையான கதையாக்க, சில சமயங்களில் மாதங்களும் வருடங்களும் தேவைப்படும். அப்படி ஒரு பயணத்தின் போது எதேச்சையாக தோன்றிய ஒரு வரி கற்பனையான சிந்தனை தான் இந்தக் கதை.

அந்த சிந்தனை என் தலையில் நாற்காலி போட்டு அமர்ந்துக்கொள்ள.. மெல்ல மெல்ல  பயணம் ஆரம்பமானது இந்த நெடுஞ்சாலை இரவின் பயணம்.

நெடுஞ்சாலை இரவு எனும் தலைப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் எழுத தொடங்கிய வாராந்திர கதை ஒவ்வொரு அத்தியாயமாக ஒவ்வொரு வாரமும் இத்தளத்தில் பதிவிடப்பட்டு வந்தது.

முதலில் சிறுகதையாக எழுத தொடங்கிய கதை நாளடைவில் அத்தியாயங்கள் அதிகமாக அதிகமாக 12வது அத்தியாத்துடன் இங்கே பதிவிடுவதை நிறுத்திவிட்டு முழு நீள கதையாக எழுத ஆரம்பித்தேன்.

2023 டிசம்பர் மாதம் எதேர்ச்சையாக தோன்றிய ஒரு வரிக்கதை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேரி கிட்டதட்ட 20 மாதங்களுக்கு பிறகு ஒரு முழு நீள நாவலாக மாறியது.

நெடுஞ்சாலை இரவுபற்றி..

ஒவ்வொரு பயணமும், ஒவ்வொரு விதமான உணர்வுகளை தந்து மறக்க முடியாத நினைவுகளாக மனதில் பதியும். அந்த பயணங்களில் நாம் சந்திக்கும் இடங்களும், மனிதர்களும், கதைகளும்… எல்லாமே காலப்போக்கில் நம் நெஞ்சில் ஆழமாக ஒட்டிக்கொள்கின்றன. அந்த வகையில், இந்த நெடுஞ்சாலை பயணம் ஒரு மறக்கமுடியாத பயணம்.

ஓர் இரவு… இரண்டு இடங்கள்… வெவ்வேறு கதாபாத்திரங்கள்… எதிர்பாராத சம்பவங்கள். இவை எல்லாம் ஒரு நேர்கோட்டில் சந்திக்கும் அந்த தருணத்தில், நிகழும் திருப்பங்கள் என இந்த பயணம் உங்கள் கைப்பிடித்து நெடுஞ்சாலையில் பயணிக்க வைக்கும்.

வழக்கமான ஒரு பயணமாகத் தொடங்கிய இரு பாதைகளும், அந்த இரவின் மையத்தில் மர்மமும், உணர்வும் கலந்த ஒரு பயணமாக மாறுகிறது. வாருங்கள், இந்த சாலை வழி பயணக்கதையில் ராஜப்பாண்டியின் லாரியில் டெல்லி முதல் கொடைக்கானல் வரை நெடுஞ்சாலையில் பயணம் செய்யலாம்.


இந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலான நீண்ட எழுத்துப் பயணத்தில், தொடக்கம் முதல் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ‘நெடுஞ்சாலை இரவு’ எனும் இந்த நாவல் என் எழுத்துப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாகும். இது வெறும் ஒரு நாவல் மட்டுமல்ல… இது என் வாழ்க்கையின் ஒரு பக்கம்! இந்த புத்தகம் உங்கள் மனதைத் தொட்டால், ஒரு பாத்திரம், ஒரு வசனம், ஒரு வரி கூட உங்கள் நினைவில் நிலைத்தால் — அதுவே எனக்கான பெரிய வெற்றி.
இந்த ‘நெடுஞ்சாலை இரவு’ உங்களையும் ஓர் பயணியாக மாற்றட்டும்.

என்னுடைய புத்தகமான “நெடுஞ்சாலை இரவு” ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி வெளியானது.

இப்புத்தகத்தை அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

Amazon amzn.in/d/9qi7qvJ

Flipkart
http://dl.flipkart.com/s/U55JK1uuuN

என்னுடைய கதைகளுக்கு ஆதரவு அளித்தது போல் என் முதல் முயற்சியான இந்த நெடுஞ்சாலை இரவு புத்தகத்திற்கும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

நன்றி ✌️

உங்கள்

ராக்ஸ் ❤️

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑