கொடைக்கானலில்… வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று ஏட்டு பெருமாளிடம் சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பிய இன்ஸ்பெக்டர் வரதன் தன் மொபைல் போனை ஸ்டேஷனில் விட்டுவிட்டு சென்றது நியாபகம் வந்து மீண்டும் ஸ்டேஷன் வந்தார். அப்போது ஸ்டேஷனில் உள்ள ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் யாரிடமோ ஃபோனில் ஏட்டும், இன்ஸ்பெக்டரும் பேசிய விஷயத்தை கூறிக்கொண்டு இருந்ததையும், இதற்கு மேல் அவருக்கு ஃபோன் செய்ய வேண்டாம் என்று சொன்னதையும் இன்ஸ்பெக்டர் வரதன் கேட்டுவிட்டு.. “ஹலோ மிஸ்டர்.. யார்கிட்ட இவளோ ரகசியமா... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 11
“நம்ம ஊரு லாரிகளை பார்த்தா இப்படித்தான்.. இஷ்டத்துக்கு காசு புடுங்குவாங்க” என்று புலம்பி கொண்டே லாரியை அங்கு இருந்து கிளப்பினார் ராஜபாண்டி. ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்திங்க..அதிகமா வசூல் பண்ணிட்டாங்களா ? காசு குறைச்சு பேச முடியாதா ? என்று கேட்டான் ரோஹித். இந்த ரசீதை பாருங்க தம்பி…அந்த ரசீதுல போட்டு இருக்க காசுக்கும், நம்மகிட்ட புடுங்குன காசுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இவனுங்க கிட்ட பேரம் பேச முடியாது, கேக்குற காசை குடுக்காம இருந்தா நம்ம... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 10
Chapter 10 கடற்கரை பகுதி, கோவா 🏖️ அந்த கடற்கரை பகுதியில் அமைந்து இருந்த தேவாலய மணி ஓங்கி ஒலித்தது. அந்த சத்தம் கேட்டு மரங்களில் கூடி இருந்த பறவைகள் எல்லாம் சிறகடித்து பறந்தன. அலையோசை, மணியோசை, பறவைகளின் கூக்குரல்கள் என அந்த ரம்மியமான காலை பொழுது அழகாக இருந்தது. அன்றைய செய்தித்தாளை படித்தவாறு வீட்டின் வெளியே அமைந்திருந்த திண்ணையில் அமர்ந்து இருந்தார் ஃபெர்னாண்டஸ். "குட் மார்னிங் டாடி" என்று சொல்லியவாறே டீ கப்புடன் வந்து அமர்ந்தாள்... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 9
Chapter 9 “குட் மார்னிங் சார்.. ஐ’எம் ரோஹித் ஃப்ரம் சென்னை’” நான் இங்க அசிஸ்டென்ட் மேனேஜரா ஜாயின் பண்ண வந்திருக்கேன். திஸ் இஸ் மை அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் சார் என்று சொல்லி மீரஜ்பூரில் உள்ள அரசு கூட்டுறவு வங்கி மேனேஜர் சுக்லாவிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான் ரோஹித். “ஹலோ ரோஹித்.. ஐ’எம் சுக்லா..நைஸ் டூ மீட் யூ.. பிளீஸ் சிட் டவுன்” என்று கூறி பதிலுக்கு தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வாங்கி கொண்டார்... Continue Reading →
அறை எண் 303 🚪
கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்டு முழித்தவன்.. மொபைலில் டைம் பார்த்த போது 1.11 என்று திரையில் காட்டியது. இந்நேரத்துல யாருடா கதவை தட்டுறது என்று யோசித்தவாறே கதவை திறக்க எழுந்து சென்றான். இவன் திறக்க போகும் முன்பு கதவை தட்டும் சத்தம் நின்று போனது. இருந்தும் கதவை திறந்து வெளியே பார்த்த போது அங்கு யாரும் இல்லை. என்னடா ஒருத்தரையும் காணும் என்று தூக்கத்தில் புலம்பி கொண்டே கதவை சாத்திக்கொண்டு வந்து மீண்டும் படுக்க... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 8
Chapter 8 போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிள் மாதவனின் விசாரணை ஆரம்பமானது. "டேய் முதல்ல நீ வா.. வந்து உன் பேர், விலாசம், இங்க கொடைக்கானலுக்கு என்ன திட்டத்தோட வந்திங்க எல்லாத்தையும் ஒழுங்கு மரியாதையா ஒன்னு விடாம உண்மையை சொல்லு" என்று சஞ்சய்யை பார்த்து கூப்பிட்டார் மாதவன். “சார் என்னோட பேர் சஞ்சய் என்று தன்னை பற்றி கூற ஆரம்பித்தான்.. எனக்கு சொந்த ஊரு தூத்துக்குடி, நான் சென்னையில ஐடி கம்பெனியில வேலை பாக்குறேன். இவனுங்க செல்வா, விக்னேஷ்... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 7
Chapter 7 “இங்க பாரு ரோஹித்.. இதுக்கு மேல இது சரியாவரும்ன்னு எனக்கு தோணல.. ஆறு வருஷம் மேல ஆகிடுச்சு , நாம படிச்சு முடிச்சு. ஆனா நீ இப்போ வரை எந்த வேலைக்கும் போகாம இருக்க. இன்னும் எவளோ நாள்தான் இப்படியே உட்க்காந்து கவர்மென்ட் வேலைக்கு படிச்சு எக்ஸாம் எழுதிட்டு இருக்க போற? நாம கல்யாணம் பண்ணி ஒன்னு சேரனும் அப்படிங்கிற எண்ணமே இல்லையா? நாம ரெண்டு பேரும் ஒரே கோர்ஸ் தான் காலேஜ்ல படிச்சோம்,... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 6
Chapter 6 அங்கு நடந்த சம்பவம் அனைத்தையும் முதலில் இருந்தே பார்த்து கொண்டிருந்தான் ராகுல். சம்பவத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பாக.… முக்கிய கடமைக்காக காரை விட்டு இறங்கிய ராகுல், கடமையை முடிக்க இடம் பார்த்து கொண்டு இருக்க.. அப்போது பார்த்து அவனது மொபைல் ஒலித்தது. இந்நேரத்தில யாருடா தொந்தரவு பண்ணுறது என்று முணங்கி கொண்டே மொபைலை பார்த்தான். அவனது பள்ளிகூட நண்பன் அலெக்ஸ் பெயர் திரையில் வந்தது. ஏன்டா என்ன உச்சா கூட போக விடமாட்டியா என்று... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 5
Chapter 5 எதிரே சென்ற லாரியின் ஹார்ன் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்தான் அவன். தம்பி பதறாதப்பா.. உனக்கும் எதும் ஆகல.. இந்தா முதல்ல தண்ணியை குடி என்று தண்ணி பாட்டிலை குடுத்தார் ராஜபாண்டி. பதட்டத்தில் இருந்த அவன் ராஜபாண்டி, வேலு இருவரையும் மாறி மாறி பார்த்தான். தான் எங்கு இருக்கிறோம், யார் இவர்கள் என்று யோசிக்க.. தம்பி பயப்படாத.. முதல்ல தண்ணியை குடி என்று மீண்டும் பாட்டிலை நீட்டினார் ராஜபாண்டி. தயக்கத்துடன் தண்ணி பாட்டிலை வாங்கியவன் பின்னர்... Continue Reading →
நெடுஞ்சாலை இரவு Chapter 4
Chapter 4 காரின் பின்புறத்தில் இருந்து கார் கவரை இழுக்க முயற்சித்த போது அந்த கவரின் கணம் தாளாமல் சஞ்சய்யும், செல்வாவும் கால் தடுமாறி கீழே விழ .. அப்போது கார் கவர் வெளியே வந்து விழுந்தது. அந்த காரின் கவர் திறக்கப்பட்ட நிலையில் இருக்க அதிலிருந்து வெளிப்பட்டதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். சார் ஒரு பொண்ணு சார் என்று ஏட்டு பெருமாள் அலறினார். என்னது நம்ம கார்ல பொண்ணா என்று விக்கி வேகமாக காரில்... Continue Reading →