நெடுஞ்சாலை இரவு Chapter 3

Chapter 3 லாரியிலிருந்து கீழே இறங்கி சென்று பார்த்தார் டிரைவர் ராஜபாண்டி. லாரி முன்பாக ஒரு ஆள் சாலையில் இடப்பக்கமாக முகத்தை பதித்தவாரு குப்புற விழுந்து கிடந்தான். வெள்ளை நிற சட்டையும், அடர் நிற பேண்ட்டும் உடுத்தி இருந்த அவன் ஆடையில். சேறும், சகதியுமாக இருந்தது. “அண்ணே என்னாச்சு அண்ணே” என்று வேலு கேட்க… "எவனோ குறுக்க வந்து விழுந்து கிடாக்கான் ..இதை பார்த்தா நம்ம வண்டியில இடிச்ச மாதிரி தெரியல, ஆனா இவன் இருக்கானா செத்துட்டானா... Continue Reading →

நெடுஞ்சாலை இரவு Chapter 2

Chapter 2 அதே இரவு நேரம்… கொடைக்கானல்… "நீ சொன்ன மாதிரியே படம் சூப்பரா இருந்துச்சுடா.. செம வொர்த்" என்று ராகுலை பார்த்து சொல்லி கொண்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்தான் சஞ்சய். "ஆமாடா ராகுல், படம் தியேட்டர்ல பார்க்க வொர்த் தான்... நல்லவேளை லேப்டாப்ல படத்தை பார்க்கலாம்ன்னு இருந்தேன், இது தியேட்டர்ல பார்த்தா தான் நல்லாருக்கும்" என்றான் செல்வா. அந்த ஒரு பாட்டு மட்டும் இல்லேனா இந்த அளவுக்கு படத்துக்கு பப்ளிசிட்டி இருந்திருக்காது என்றான் விக்கி.... Continue Reading →

நெடுஞ்சாலை இரவு Chapter 1

நெடுஞ்சாலை இரவு   Chapter 1   வடஇந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை... நள்ளிரவு நேரத்தில் கனமழை பெய்து கொண்டு இருந்தது... இருபுறமும் அதீத ஒளி, ஒலியுடன் மழையையும் பொருட்படுத்தாமல் எண்ணற்ற வாகனங்கள் சீறி பறந்து கொண்டிருந்தன, அதில் கனரக வாகனங்களும் அடங்கும். சரக்குகளை ஏற்றி கொண்டு அந்த தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்களான  லாரிகள் சென்று கொண்டிருந்தன. சாலையில் அந்த லாரிகள் வரும்போது, ஒரு கம்பீர தோற்றத்துடன் காட்சியளிக்கும். அந்த இருள் சூழ்ந்த... Continue Reading →

A Tale of Robin & Sanjana ❤️

“Neruppuda…Nerungudaa..” The mobile rings continuously for a while unanswered. On the 5th call, Robin wakes up startled from his sleep, looks at his phone and smiles looking at the display name on the call. At the same time his face reaction suddenly changed & he got little fear inside when the phone reads that there... Continue Reading →

ஸ்பெஷல் தோசை 😋

டேய் ஜெய்..ஓடாத...இங்க வீட்டுக்குள்ள வாடா.. சொல்ல சொல்ல கேட்காமல் வீட்டின் பார்க்கிங் ஏரியாவில் ஓடிக்கொண்டிருந்தான் ஜெய். இப்போ நீ வரலன்னா.. உன்ன இங்கயே விட்டுட்டு போயிடுவோம் என்று ராகுல் சொன்னதும் வேகமாக வீட்டுக்குள்ளே வந்த ஜெய்…நாம இப்போ எங்கப்பா போறோம் என்று கேட்டான். கோவிலுக்கு போறோம் என்று கூறி கொண்டே ஜெய்யை தூக்கி மடியில் வைத்து கொண்டாள் பாட்டி சிவகாமி. அங்க போய் என்ன பண்ண போறோம் என்று ஜெய் மீண்டும் கேட்க.. சாமி கும்பிடதான்டா போறோம்,... Continue Reading →

சித்தி

குரு…அந்த ஆபிஸ் ஃபைல் எடுத்துட்டு வாங்க என்று ஆபிஸ் பியூனை கேட்டேன்.. அவரும் நான் கேட்ட அந்த ஃபைல்லை குடுத்துவிட்டு சென்றார். அது ஒரு பரபரப்பான திங்கள்கிழமை நண்பகல் வேளை…வங்கிக்கு பணம் செலுத்த, பணம் எடுக்க நிறைய வாடிக்கையாளர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள். நானும் அன்றைய தினம் முடிக்க வேண்டிய முக்கிய அலுவல் வேலைகளை செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு நடுத்தர வயது பெண் வாடிக்கையாளர் பணம் எடுக்க வந்துவிட்டு ..காசோலையை எப்படி நிரப்புவது என்று தெரியாமல்... Continue Reading →

இருட்சரன்

இருள் சூழ்ந்து கிடக்கும் ஆள் அரவமற்ற அந்த தெருவின் சாலையில் நடந்து செல்வது பயத்தை ஏற்படுத்தியது. தூரத்தில் சிணுங்கி எரிந்து கொண்டிருந்த போஸ்ட் லேம்ப் வெளிச்சம் சற்று ஆறுதலாக இருக்க தைரியத்தை வரவழைத்து நடந்து கொண்டிருந்தான் அர்ஜுன். திடீரென எங்கிருந்தோ நாய் ஊளையிடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான், நாய் ஏதும் தென்படவில்லை. தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் சாலை தான், இருந்தாலும் அன்று என்னவோ அவனுக்கு எல்லாமே வித்தியாசமாகவும், சற்று... Continue Reading →

ஜன்னல் வந்த காற்றே 🎼❤️

கிறிஸ்துமஸ்க்கு முந்தைய இரவு பொழுது.. தொலைதூரத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் ஹார்ன் சத்தம் மிக அருகில் செல்வது போல் கேட்டு கொண்டிருந்தது. மொட்டை மாடியில் விட்டத்தை பார்த்து படுத்து கொண்டு நட்சத்திரங்களோடு லயித்து போய் இருந்தான் ரோஷன். ரயிலின் ஹார்ன் சத்தம் அவன் செவியில் விழ சுயநினைவுக்கு வந்தவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனை தவிர அங்கு யாரும் இல்லை. அந்த ரம்மியமான இரவு பொழுதில் தென்னை மரமும், மாமரமும் காற்றுடன் சேர்ந்து தங்களுக்குள் ரகசியம் பேசிக்... Continue Reading →

சஞ்சனா ❤️

"Neruppudaa... Nerungudaa.." மொபைலில் ரிங்க்டோன் சத்தம் நீண்ட நேரமாய் கணீரென ஒலித்து கொண்டிருந்தது. ஐந்தாவது முறையாக ஒலித்து அணைய, திடுக்கிட்டு தூக்கம் கலைந்து எழுந்து மொபைலை பார்த்தபோது திரையில் தோன்றிய பெயரை கண்டு புன்னகைத்த அடுத்த நொடியே பயம் வந்து ஒட்டிக்கொண்டது. சஞ்சனாவிடம் இருந்து ஐந்து மிஸ்ட் கால்கள்... நேரத்தை பார்த்தான்.. 6.48 PM என மொபைல் திரையில் காட்டிக்கொண்டு இருந்தது. மொபைலில் 6 மணிக்கு அடித்த அலாரம் சத்தத்தையும் மீறி தூங்கி போயிருந்தான். சஞ்சனாவுக்கு திரும்ப... Continue Reading →

ராசுக்குட்டியின் சிவராத்திரி

சூரியன் மெல்ல உதித்து தன் கதிர்களால் வெளிச்சத்தை பரப்பி கொண்டிருந்தது. பறவை கூட்டங்கள் வானத்தில் சுற்றி கொண்டு இருந்தன. சேவல் கூவும் சத்தமும், வீட்டின் கதவை திறக்கும் சத்தமும் ஒரு சேர அமைய வெளிக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் விசாலம். வீட்டினுள் இருந்து சுப்ரபாதம் ஒலித்து கொண்டு இருந்தது. வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிட்டு சாணி பிள்ளையார் பிடித்து கோலத்தின் நடுவே வைத்து அதன் மேல் செம்பருத்தி பூவை சொருகி வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑