ஓர் நீண்ட பயணம் !!! இந்த உலகம் எழுத்துக்களால், புத்தகங்களால், கதைகளால் இயங்கிக்கொண்டே இருக்கிறது. கதைகள் கேட்காத, கதைகள் சொல்லாத, கதைகள் இல்லாத எந்த ஊரும், நாடும், உலகமும் இல்லை. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். "What is history? His story is History." — இது சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் பேசிய வரிகள்.உண்மைதான். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அந்த வரிசையில் நானும்... Continue Reading →
அடுத்த கதை ✌️
வணக்கம் மக்களே !!! "சஞ்சனா, ராசுக்குட்டியின் சிவராத்திரி, ஜன்னல் வந்த காற்றே, இருட்சரன்,ஸ்பெஷல் தோசை, சித்தி" போன்ற சிறுகதைகளின் வரிசையில் அடுத்ததா புது கதை ஒன்னு தயாராகி இருக்கு. இந்தமுறை கொஞ்சம் பெரிய கதையா உருவாகி இருக்கு. சிறுகதையாக எழுத ஆரம்பிச்சு அப்புறம் என்னோட எண்ணத்தில் ஓடிய கற்பனை குதிரை எங்கும் நிற்காமல் தறிகெட்டு ஓடி தற்போது சற்று பெருங்கதைகாக மாறிவிட்டது மொத்த கதையையும் ஒரே பதிவா போட்டு உங்களை நோகடிக்க விரும்பலை. அதுனால முழுக்கதையையும் சில... Continue Reading →
Birthday Tribute Posters 🌟
The Special CDP for Thalaivar Rajinikanth 's 74th Birthday I love designing posters, especially for my Superstar Rajinikanth. Every year, for Rajinikanth's birthday and Rajinism Day, I create a poster. This year too, I’ve designed one, and I would like to share it here. This post includes all my birthday poster edits since 2017. I... Continue Reading →
சொர்ணமலை கதிர்வேல் முருகன் ❤️
சொர்ணமலை கதிர்வேல் முருகன் ❤️ பெரும்பாலான கோவில்களில் முருகனை சிலை வடிவில் தான் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள். வெகு சில கோவில்களில் மட்டும் வேல் வடிவில் முருகன் காட்சியளிக்கிறார். சிலைக்கு பதிலாக முருக வேலையே மூலவராக பிரதிஷ்டை செய்து முருகன் சிலைப்போல் அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டு தலம் தான் எங்கள் ஊர் கோவில்பட்டியில் அமைந்துள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில்.இங்கு ஆறடி உயரத்தில் ஐம்பொன்னில் செய்யப்பட்ட வேல் வடிவத்தில் மூலவராக முருகன் அருள்பாலிக்கிறார். முருகன்... Continue Reading →
சித்திரை திருவிழாவில் சின்னாபின்னமான தருணம்
கடந்த மாதம் மதுரைக்கு சித்திரை திருவிழா காண சென்றபோது கூட்டத்தில் சிக்கி சின்னாப்பின்னாமான திக் திக் நிமிடங்கள் 😭😭😭 கள்ளழகர் ஆற்றில் இறங்கும் மதுரை சித்திரை திருவிழா வைபோகத்தை பார்க்க முடிவுசெய்து விழாவின் முந்தைய நாள் இரவு மதுரை வந்து தம்பி கமலுடன் மதுரையை சுற்றிவிட்டு, சாமி உலா பார்த்துவிட்டு, இரவு 2 மணிக்கு யாஷின் #KGF2 படத்தை கோபுரம் சினிமாஸ்ல பார்த்துவிட்டு அது முடிச்ச கையோட ஆத்துல இறங்குற விழாவை பார்க்க அதிகாலை கிளம்பி போனோம்.... Continue Reading →
செந்திலாண்டவன் தரிசனம் !
சிலருக்கு சிவாலய திருத்தலம், சிலருக்கு திருப்பதி, சிலருக்கு மதுரை என ஒவ்வொருவருக்கும் இறைவனின் சில திருத்தலங்கள் சென்று வந்தால் மனதுக்கு நிம்மதியும், புத்துணர்ச்சியையும், நேர்மறை எண்ணங்களையும் , ஏற்படுத்தும். அதுபோல எனக்கு மிகவும் பிடித்த ஸ்தலம், என் செந்திலாண்டவன் வீற்றிருக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில். கொரோனா ஊரடங்குக்கு பிறகு செந்திலாண்டவனை கடந்த முறை தரிசித்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன், அவற்றை இங்கே ஒரு முழு பதிவாக மீண்டும் பதிவிட்டிருக்கிறேன். சிறுவயதில் படையப்பா படம் பார்த்ததில் இருந்து... Continue Reading →
வெள்ளியங்கிரி பயணம்
வெள்ளியங்கிரி பயணம், ஒரு புது அனுபவம் ❤️ வணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த வாரம் வெள்ளியங்கிரி சென்று வந்தது பற்றிய ஒரு பயண அனுபவமே இந்த பதிவு. வாருங்கள் வெள்ளியங்கிரிக்கு செல்லலாம். தலைவர் ரஜினிகாந்த் மூலம் ட்விட்டரில் கிடைத்த நண்பர்கள் ஏராளம். அதில் சில நண்பர்களுடன் வெள்ளியங்கிரி செல்ல ஒரு மாத காலம் முன்னவே திட்டமிட்டு, அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை 22.04.22 இரவு அன்று சென்னையில் இருந்து... Continue Reading →
திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு !
முதல்ல தேங்காயை துருவி எடுத்து அதை மிக்சியில் அரைத்து இரண்டு தடவையாக தேங்காய் பால் எடுத்துக்கனும். சின்ன வெங்காயம், முருங்கைக்காய், கேரட்/பீன்ஸ்/உருளை (விருப்பத்திற்கேற்ப) காய்கறிகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதை வேகவைக்கனும். ரெண்டு மூனு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு துண்டு தேங்காய் எடுத்து சின்ன மிக்ஸில போட்டு அரைச்சிக்கனும். அதேபோல 100 கிராம் அளவில் பாசிப் பருப்பை எடுத்து தனியாக தண்ணீர் ஊற்றி வேக வச்சிக்கனும். இப்போ காய்கறி நல்ல வெந்ததும் அதுல... Continue Reading →
கோவிட் தடுப்பூசி : ஓர் அனுபவம்
கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமா இருக்குற தற்போதைய சூழல்ல போன மாசம் வர 45 வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாரும் போய் தடுப்பூசி போடுங்கனு சொல்லிட்டு இருந்த அரசாங்கம் , மே 1ல இருந்து 18 வயசுக்கு மேல உள்ளவங்களும் https://selfregistration.cowin.gov.in இந்த தளத்துல பதிவு பண்ணிட்டு தடுப்பூசி போட்டுக்கலாம்னு அறிவிச்சது. எல்லாரும் முட்டி மோதி பதிவு பண்ணி வச்சா சில இடங்கள்ல தடுப்பூசி இல்லைனு சொல்லி அனுப்பிட்டு இருக்காங்க. ஆனா நான் ஒரு வங்கி அதிகாரி... Continue Reading →
மர்மதேசமும் ரகசியமும் !
மர்மதேசம் சின்ன வயசுல பயந்து பயந்து கண்ணை கையால பொத்திக்கிட்டு விரல் இடுக்கு வழியா பார்த்து ரசித்த எத்தனையோ 90ஸ் கிட்ஸில் நானும் ஒருத்தன். விடாது கருப்புல வர அந்த குதிரை, கருப்பசாமி இதெல்லாம் பார்த்து பயந்த நியாபகம் இருக்கு, ஆனா முழுக்கதையும் சரியா நினைவில இல்லை. சரின்னு சன் டிவியில இப்போ போடுறான்னு பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். முதல் எபிசோடே பயமாதான் இருந்துச்சு. ஒவ்வொரு எபிசோடும் விளம்பரத்தோட பார்க்க கடுப்பா இருக்கேன்னு யூட்டுப்ல பார்க்கலாம்னு போனப்போ தான்... Continue Reading →