கொரோனாவுடன் சில நாள் !! வீட்டுக்குள்ளேயே இருக்கோம், நமக்குலாம் கொரோனா வராதுன்னு நினைச்சிட்டு இருந்தா "எனை நோக்கி பாயும் தோட்டா"ன்னு கொரோனா வந்து என்னை தாக்கிட்டு போயிருச்சு. அந்த அனுபவம் பற்றிய ஒரு பதிவு... கடந்த ஜூலை 17ஆம் தேதி, காலையில எந்திரிக்கும்போதே உடம்புல ஒருவித அசதியும், கூடவே உடல் சூடும் இருந்துச்சு. காய்ச்சல் வந்தா உடம்பு எப்படி இருக்குமோ அதே மாதிரியான உடல்நிலை இருந்துச்சு. வீட்ல அம்மா கிட்ட காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்குன்னு சொல்ல,... Continue Reading →
ராஜ்ஜியம் இழந்த ராஜ் டிவி
ராஜ் டிவி ~ 1994 ,அக்டோபர் 24ல் ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்களால் தொடங்கபட்டது . தமிழின் இரண்டாவது தனியார் தொலைக்காட்சியாக தொடங்கப்பட்ட ராஜ் டிவி , சன் டிவிக்கு போட்டியாக செயல்பட்டது. ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்கள் ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் உருதுணையுடன், 1983 ஆம் ஆண்டு ராஜ் வீடியோ விஷன் எனும் வீடியோ கேசட் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார். பல தயாரிப்பாளர்களிடமிருந்து தமிழ் படங்களின் உரிமைகளை கைப்பற்றினர். பின்னர் படங்களுக்கான தொலைக்காட்சி, கேபிள்... Continue Reading →
சின்னத்திரையில் முத்து !!
முத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் 1995ல் வெளியாகி பல சாதனைகள் கண்ட வெற்றி திரைப்படம். முத்து படத்தின் வெள்ளித்திரை சாதனைகள் பற்றி அனைவரும் அறிந்ததே. சின்னத்திரையில் முத்து திரைப்படம் படைத்த சாதனைகளை பற்றி பார்க்கலாம். 1995ல் தீபாவளி வெளியீடாக வந்த முத்து திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிடமிருந்து வாங்கிய சன் டிவி, 1998/99 ஆம் ஆண்டு தீபாவளி தினம் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒளிபரப்பினார்கள். அதன் பின்பு 2-3 வருடங்களுக்கு ஒரு முறை... Continue Reading →
தூத்துக்குடி மக்ரூன் !!!
கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு !! தூத்துக்குடி மக்ரூன் ❤️❤️ பொதுவாக தூத்துக்குடி என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது உப்புதான். ஆனால் அதையும் தாண்டி இனிப்புக்கும் பெயர் போனதுதான் தூத்துக்குடி. ஆம் தூத்துக்குடியில் தயாராகும் இனிப்பு பண்டமான மக்ரூன் மிகப்பிரபலம். இதன் சுவையே தனி. இந்த பதிவை படிப்போர் எத்தனை பேர், மக்ரூன் சாப்பிட்டு இருப்பீர்கள் என தெரியவில்லை. ஆனால் ஒருமுறை சாப்பிட்டு விட்டால் இந்த மக்ரூன் சுவைக்கு அடிமையாகி விடுவீர்கள். தூத்துக்குடியில் பிரபலமான மக்ரூன், உண்மையில்... Continue Reading →
தமிழ் செய்தி தொலைக்காட்சிகள்
தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் பற்றிய ஒரு பார்வை !! செய்தித்தாள், வானொலியில் தினமும் செய்திகளை படித்தும், கேட்டும் வந்த தமிழக மக்கள், தொலைக்காட்சி வருகைக்கு பின்பு தூர்தர்ஷனில் செய்திகளை பார்த்து வந்தனர். 90'களில் தமிழகத்தில் தொலைக்காட்சியின் வளர்ச்சி பரவலாக இருந்தது. அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த சமயம். அரசுக்கு எதிரான செய்திகள் ஏதும் அரசு தொலைக்காட்சியில் வராதபடி பார்த்துக்கொண்டார் அம்மையார். இந்த நேரத்தில் தான் தமிழின் முதல் தனியார் தொலைக்காட்சி சன் டிவி... Continue Reading →
விக்ரமனின் நான் பேச நினைப்பதெல்லாம் !!
நேத்து கேடிவியில நான் பேச நினைப்பதெல்லாம் ன்னு ஒரு படம் பார்த்தேன். ஆனந்த் பாபு, விவேக், மோகினி நடிச்ச படம். வாழ்க்கையில் வெவ்வேறு காரணங்களால் தனித்தனியே காதல் தோல்வியை சந்தித்த இருவரும் ஒருகட்டத்தில் சந்திக்க, அவர்களுக்கு துணையாக விவேக் இருப்பார். ஆனந்த்பாபு மியூசிக் சான்ஸ் தேடி அலைய, மோகினி வேலை தேடி அலைவார். பின்னர், மோகினி படித்து தேர்ச்சிபெற்று IAS ஆகி இவர்களை விட்டு டெல்லிக்கு சென்று விட, ஆனந்த்பாபு மீண்டும் முன்னேற முடியாமல் தவிப்பார். பணி... Continue Reading →
இருட்டு கடை அல்வா
இருட்டுகடை அல்வா ❤️❤️❤️ திருநெல்வேலி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அல்வாதான். அதிலும் இருட்டுகடை அல்வா என்றால் நாவில் எச்சில் ஊறும். "நினைத்தாலே இனிக்கும்" என்பதற்கு ஏற்றார் போல் அல்வாவை பற்றி நினைத்தாலே அந்த தித்திப்பான சுவை நாவில் ஒட்டிக்கொள்ளும். சிறுவயதில் தேர்வு விடுமுறை நாட்களில் திருநெல்வேலியில் உள்ள சித்தி வீட்டிற்கு செல்வது வழக்கம். எப்போது சென்றாலும் நெல்லையப்பரை தரிசிக்கிறேனோ இல்லையோ தவறாமல் இருட்டு கடை அல்வா அல்லது சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா சாப்பிட்டுவிடுவேன். அதன் சுவை... Continue Reading →
எனக்கு பிடித்த விஜய் !
எனக்கு பிடித்த விஜய் !! குஷி படத்தின் மூலம் முதல் முறையாக எனக்கு அறிமுகம் ஆகிறார் விஜய். படம் வெளியாகி இருந்த சமயம், டிவியில் அவ்வப்போது குஷி பட பாடலான"ஒரு பொண்ணு ஒன்னு தான் பார்த்தேன்" ஒளிபரப்பாகிறது. அதில் வரும் பாப்பு.. பாப்பு.. எனும் வார்த்தைகள் பிடித்து போக பாடல் கேட்கும்போதெல்லாம் பாப்பு பாப்பு என கூட சேர்ந்து முணுமுணுக்க ஆரம்பித்தேன். இப்பாடலின் வழியாக விஜயும் பிடித்து போனது. குஷி படத்துக்கு கூட்டுப்போவதாக சொல்லி என்னை விட்டுட்டு... Continue Reading →
நானும் சன் டிவியும்
நானும் சன் டிவியும் !! 90களில் பிறந்த எல்லாருக்குமே மறக்க முடியாத பல அனுபவங்கள் இருக்கும், அதுல ஒண்ணுதான் சன் டிவி. எல்லாருமே சன் டிவிய பார்த்து வளர்ந்தவங்க, அதுல நானும் ஒருத்தன். விவரம் தெரிஞ்சு டிவி பார்க்க ஆரம்பிச்சு இப்போ வர நான் சன் டிவியோட ரசிகன். அந்த காலகட்டத்துல பொதிகை சேனல் தான் முதலில் இருந்துச்சு. ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சு ஆன்டெனால தூர்தர்ஷன் டிவில சண்டேஸ்ல சக்திமான் பாத்திட்டு இருந்தேன், இதுதான் என்னோட முதல் தொலைக்காட்சி... Continue Reading →
90’களில் சன் டிவி !!!
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியை பார்த்து போரடித்து போன தமிழக மக்களுக்கு சன் டிவியின் வருகை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தன. சன் டிவி நிகழ்ச்சிகள் புதுவித பொழுதுபோக்கை அமைத்து குடுத்தது. ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி தொடர்கள் , விளையாட்டு நிகழ்ச்சிகள் , செய்திகள் போன்றவை ஒளிபரப்பாகின. திரையரங்கில் மக்கள் கண்டுகளித்து ரசித்த திரைப்படங்களும் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கின. பண்டிகை திருவிழா கால நாட்களில் புதுப்படங்கள் , சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்ற நாட்களில் நாடகங்கள் என... Continue Reading →