மாயநதியில் கபாலி, குமுதவள்ளியுடன் நான் !!!

படத்தின் முதல் பார்வையில் தொடங்கி டீசர், ட்ரைலர், பாடல்கள் , தயாரிப்பாளரின் பிரம்மாண்ட விளம்பர யுக்திகள் என மிகப்பெரிய எதிர்பார்ப்பை கூட்டி படம் எப்போது வெளியாகும், எப்படா தலைவரை திரையில் பார்ப்போம் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களில் நானும் ஒருவன் !! படம் வெளியாகும் தேதி அறிவிப்பு வந்தது, அந்த சமயத்தில் தான் நான் புதியதாக அந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தேன், என்னுடைய முதல் பணி அது. அப்போது நான் பள்ளிக்கரணையில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். என்னுடன் தங்கியிருந்த... Continue Reading →

பஞ்சுமிட்டாய்

#பஞ்சுமிட்டாய் பள்ளிக்கூட காலத்தில் ஒரு மதிய அல்லது சாயங்கால வேளையில், திடீரென்று கேட்கும் மணி சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடி சென்று பார்த்தால் பஞ்சுமிட்டாய் விற்கும் தாத்தா தெருவிற்குள் பஞ்சுமிட்டாய் என கூவிக்கொண்டே வந்து கொண்டிருப்பார். தெருவில் நுழைந்ததும் ஒரு நிழற்பகுதியில் தன் சைக்கிளை நிப்பாட்டி அதில் தொங்கவிட்டிருக்கும் மணியை அடிப்பார். பொதுவாக எங்கள் வீட்டில் இருந்த பெரிய மாமரத்தின் நிழலிலேயே அவர் நின்று தன் வேலையை துவங்குவார். நான் வீட்டில் காசு... Continue Reading →

பேட்ட சில குறிப்புகள் !!!

பேட்ட சில குறிப்புகள் ♥♥ பாட்ஷா, படையப்பா படத்துக்கு அப்புறம் பேட்ட படம் தான் ரஜினி ரசிகனுக்கு செம்ம விருந்து. 2.0, காலா, கபாலி, எந்திரன் படங்கள்ல ஒரு முழு ரஜினிய மாஸா பார்த்திருக்க மாட்டோம்.90கள்ல பிறந்த ரஜினி ரசிகர்களுக்கு பழைய காளிய தியேட்டர்ல பார்க்க குடுத்து வைக்கல. அருணாச்சலம், முத்து, பாட்ஷா, படையப்பா மாதிரியான மாஸ் படங்கள் வந்தப்போ குழந்தைங்க, பின்னாள்ல அந்த படங்கள டிவியில போடும் போது தான் பார்த்து ரசிச்சிருக்கோம். தியேட்டர்ல கொண்டாட... Continue Reading →

முத்துநகர் தூத்துக்குடியில் ஒரு ஜாலி டிரைவ் !!!

பலவருடங்களுக்கு பிறகு முத்துநகர் தூத்துக்குடியில் ஒரு ஜாலி டிரைவ் !!! சின்ன வயசுல எக்ஸாம் லீவ் விடுறப்போலாம் தூத்துக்குடி போகுற பழக்கம் இருந்துச்சு. அப்போ அங்க பெரியப்பா இ.எஸ்.ஐ ல வேலை பார்த்துட்டு இருந்தாங்க ..அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே இருந்த ஸ்டாப் குவார்டர்ஸ்ல பெரியப்பா குடும்பத்தோட தங்கிருந்தாங்க. தூத்துக்குடிக்கு போறோம்னாலே ஜாலியா இருக்கும். காரணம் அக்காக்களோட நல்லா நேரம் போகும், பெரியம்மா கடை, சினிமா, பீச், பார்க்னு கூட்டிட்டு போவாங்க. அந்த குவார்டர்ஸ்ல உள்ள மத்த சின்ன... Continue Reading →

சூப்பர்ஸ்டார் ரஜினி !!!

சூப்பர்ஸ்டார் ரஜினி சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்து ரஜினிகாந்தாக 1975ல் வெளியான தன் முதல் படமான " அபூர்வ ராகங்களில் " கேட்டை திறந்து கொண்டு ரசிகர்களின் மனதில் உள்ளே நுழைந்தார். 1975 முதல் 1978 பல்வேறு படங்களில் தனக்குரிய நடிப்பு பாணியில் வெவ்வேறு வேடத்தில் யாரும் ஏற்கத்தயங்கும் கதாபாத்திரங்களை ஏற்று தன் தனித்த நடிப்பால் மக்களை கவர்ந்தார் ரஜினிகாந்த். பைரவி மூன்று வருடங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு முதல்முறையாக 1978 ஆம் ஆண்டு எம்.பாஸ்கர் இயக்கத்தில்... Continue Reading →

சன் குடும்பம் விருதுகள் ஒரு பார்வை !!!

"சன் குடும்பம் விருதுகள்" ஒரு பார்வை !!! சன் டிவி எப்பவும் தமிழ் தொலைகாட்சிகளில் ஒரு முன்னோடி என்றே சொல்லலாம்.பல்வேறு விதமான நிகழ்சிகளால் தமிழ் மக்களை கவர்ந்து வருகிறது. அதில் அனைத்து தரப்பட்ட வயதினரையும் கவர்ந்த தொலைக்காட்சி தொடர்களும் ஒன்று. தொலைக்காட்சி தொடர் மற்றும் அதன் நட்சத்திரங்களை பெருமைப்படுத்த விரும்பியது சன் டிவி. சன் குடும்பம் விருதுகள் 2010 அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த பட்டதுதான் "சன் குடும்பம் விருதுகள்". இதுவரை வெள்ளித்திரை... Continue Reading →

சவுரிமுடி !!!

சவுரிமுடிக்காரர்...சிறுவயதில் என்னை மிகவும் பயமுறுத்திய ஒரு நபர் !!! காரணம் என் அம்மா...சிறு வயதில் வீட்டிற்கு வெளியே வைத்து போக்கு காட்டி சாப்பாடு ஊட்டிவிடுவார்கள்.. அப்போது சாப்பிட முரண்டு பிடிக்கும்போது பூச்சாண்டியிடம் பிடிச்சு கொடுத்திருவேன் என பயமுறுத்தி சாப்பிடவைப்பார்கள்.அப்படி ஒரு பூச்சாண்டியில் ஒருவர்தான் இந்த சவுரிமுடிக்கரார். கருப்பு நிறம், திடகாத்திரமான உடல், பெரிய மீசை, தலைப்பாகை, வலது தோல் பட்டையில் ஒரு ஜோல்னாப்பை, நீலம், சிவப்பு, ரோஸ் இவற்றுள் ஏதாவது ஒரு வண்ணத்தில் சட்டை, வண்ண லுங்கி,... Continue Reading →

சன் பிக்சர்ஸின் எந்திரனும் பேட்டயும் !!!

கடந்த சனிக்கிழமை வெளியான "தினகரன்" நாளிதழுடன் ரஜினிகாந்தின் "பேட்ட" படத்தின் போஸ்டரை இலவச இணைப்பாக்கி ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு நிறுவனமான "சன் பிக்சர்ஸ்" !! இது முதல்முறையல்ல..இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மற்றொரு படமான ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணியில் உருவாகும் "சர்கார்" படத்தின் போஸ்டரை விஜய் பிறந்தநாளை ஒட்டி தினகரன் நாளிதழோடு இலவச இணைப்பாக வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷியாக்கியது. ஆனால் "ரஜினிகாந்த்" படத்திற்கு இது இரண்டாவது முறை. இதற்கு முன் சன் பிக்சர்ஸ்... Continue Reading →

புதிய தோற்றத்தில் ரஜினிகாந்த்…பேட்ட ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த் நடித்துவரும் பேட்ட படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லூக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது லக்னோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய தோற்றத்தில் ரஜினிகாந்த் இருக்கும் சில புகைப்படங்கள் கசிந்துள்ளன. இந்த படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Website Powered by WordPress.com.

Up ↑