டேய் ஜெய்..ஓடாத...இங்க வீட்டுக்குள்ள வாடா.. சொல்ல சொல்ல கேட்காமல் வீட்டின் பார்க்கிங் ஏரியாவில் ஓடிக்கொண்டிருந்தான் ஜெய். இப்போ நீ வரலன்னா.. உன்ன இங்கயே விட்டுட்டு போயிடுவோம் என்று ராகுல் சொன்னதும் வேகமாக வீட்டுக்குள்ளே வந்த ஜெய்…நாம இப்போ எங்கப்பா போறோம் என்று கேட்டான். கோவிலுக்கு போறோம் என்று கூறி கொண்டே ஜெய்யை தூக்கி மடியில் வைத்து கொண்டாள் பாட்டி சிவகாமி. அங்க போய் என்ன பண்ண போறோம் என்று ஜெய் மீண்டும் கேட்க.. சாமி கும்பிடதான்டா போறோம்,... Continue Reading →
சித்தி
குரு…அந்த ஆபிஸ் ஃபைல் எடுத்துட்டு வாங்க என்று ஆபிஸ் பியூனை கேட்டேன்.. அவரும் நான் கேட்ட அந்த ஃபைல்லை குடுத்துவிட்டு சென்றார். அது ஒரு பரபரப்பான திங்கள்கிழமை நண்பகல் வேளை…வங்கிக்கு பணம் செலுத்த, பணம் எடுக்க நிறைய வாடிக்கையாளர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள். நானும் அன்றைய தினம் முடிக்க வேண்டிய முக்கிய அலுவல் வேலைகளை செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு நடுத்தர வயது பெண் வாடிக்கையாளர் பணம் எடுக்க வந்துவிட்டு ..காசோலையை எப்படி நிரப்புவது என்று தெரியாமல்... Continue Reading →
இருட்சரன்
இருள் சூழ்ந்து கிடக்கும் ஆள் அரவமற்ற அந்த தெருவின் சாலையில் நடந்து செல்வது பயத்தை ஏற்படுத்தியது. தூரத்தில் சிணுங்கி எரிந்து கொண்டிருந்த போஸ்ட் லேம்ப் வெளிச்சம் சற்று ஆறுதலாக இருக்க தைரியத்தை வரவழைத்து நடந்து கொண்டிருந்தான் அர்ஜுன். திடீரென எங்கிருந்தோ நாய் ஊளையிடும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான், நாய் ஏதும் தென்படவில்லை. தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் சாலை தான், இருந்தாலும் அன்று என்னவோ அவனுக்கு எல்லாமே வித்தியாசமாகவும், சற்று... Continue Reading →
கோடை கொண்டாட்டம் டூ விசில் போடு எக்ஸ்பிரஸ் 🚂
"விசில் போடு எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் சென்னையில் நடந்த பஞ்சாப் அணியுடனான போட்டியை ரசிகர்கள் கண்டு ரசிப்பதற்காக பிரத்யேகமாக சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே உதவியுடன் ஏற்பாடு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம். சென்னை போட்டியை நேரடியாகக் காண தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சியைச் சேர்ந்த 750க்கும் அதிகமான ரசிகர்கள், சென்னையில் கடந்த ஏப்ரல்... Continue Reading →
பொன்னியின் செல்வன் பாகம் 2
பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பட்டையை கிளப்பியது. புதினத்தை திரையில் காண மக்கள் ஆர்வமாக திரையரங்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடினார்கள். கலவையான விமர்சனம் வந்தாலும் மக்களால் படம் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டின் பெரும் வெற்றி படமாக அமைந்தது. எனக்கு முதல் பாகத்தை பார்த்த போது அடுத்து இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று இருந்த ஆர்வம் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விட்டது. நேற்று படம் பார்க்கும்போது கூட எந்த ஒரு... Continue Reading →
ஜன்னல் வந்த காற்றே 🎼❤️
கிறிஸ்துமஸ்க்கு முந்தைய இரவு பொழுது.. தொலைதூரத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் ஹார்ன் சத்தம் மிக அருகில் செல்வது போல் கேட்டு கொண்டிருந்தது. மொட்டை மாடியில் விட்டத்தை பார்த்து படுத்து கொண்டு நட்சத்திரங்களோடு லயித்து போய் இருந்தான் ரோஷன். ரயிலின் ஹார்ன் சத்தம் அவன் செவியில் விழ சுயநினைவுக்கு வந்தவனாய் சுற்றும் முற்றும் பார்த்தான். அவனை தவிர அங்கு யாரும் இல்லை. அந்த ரம்மியமான இரவு பொழுதில் தென்னை மரமும், மாமரமும் காற்றுடன் சேர்ந்து தங்களுக்குள் ரகசியம் பேசிக்... Continue Reading →
நண்பகல் நேரத்து மயக்கம் ❤️
கேரளாவை சேர்ந்த ஜேம்ஸ் , அவனது மனைவி, மகன் மற்றும் இன்னும் சில குடும்பங்களுடன் ஒரு குழுவாக தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊர் நோக்கி புறப்படுகிறார்கள். செல்லும் வழியில் ஒரு ஹோட்டலில் வேனை நிறுத்தி மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்புகிறார்கள். வேனில் சென்று கொண்டிருக்கும் போது பழைய படங்களையும், பாடல்களையும் டிவியில் பார்த்து கேட்டு கொண்டே செல்கின்றார்கள். மதிய சாப்பாடு, சாலை பயணம் , ரம்மியமான பாடல்... Continue Reading →
சஞ்சனா ❤️
"Neruppudaa... Nerungudaa.." மொபைலில் ரிங்க்டோன் சத்தம் நீண்ட நேரமாய் கணீரென ஒலித்து கொண்டிருந்தது. ஐந்தாவது முறையாக ஒலித்து அணைய, திடுக்கிட்டு தூக்கம் கலைந்து எழுந்து மொபைலை பார்த்தபோது திரையில் தோன்றிய பெயரை கண்டு புன்னகைத்த அடுத்த நொடியே பயம் வந்து ஒட்டிக்கொண்டது. சஞ்சனாவிடம் இருந்து ஐந்து மிஸ்ட் கால்கள்... நேரத்தை பார்த்தான்.. 6.48 PM என மொபைல் திரையில் காட்டிக்கொண்டு இருந்தது. மொபைலில் 6 மணிக்கு அடித்த அலாரம் சத்தத்தையும் மீறி தூங்கி போயிருந்தான். சஞ்சனாவுக்கு திரும்ப... Continue Reading →
ராசுக்குட்டியின் சிவராத்திரி
சூரியன் மெல்ல உதித்து தன் கதிர்களால் வெளிச்சத்தை பரப்பி கொண்டிருந்தது. பறவை கூட்டங்கள் வானத்தில் சுற்றி கொண்டு இருந்தன. சேவல் கூவும் சத்தமும், வீட்டின் கதவை திறக்கும் சத்தமும் ஒரு சேர அமைய வெளிக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் விசாலம். வீட்டினுள் இருந்து சுப்ரபாதம் ஒலித்து கொண்டு இருந்தது. வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிட்டு சாணி பிள்ளையார் பிடித்து கோலத்தின் நடுவே வைத்து அதன் மேல் செம்பருத்தி பூவை சொருகி வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.... Continue Reading →
பொன்னியின் செல்வன் பாகம் 1 !
பொன்னியின் செல்வன் 🌟🌟🌟🌟 முதலில் பொன்னியின் செல்வன் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து இன்று திரையில் அதைக்காண வழி செய்த மணிரத்னத்தி்ற்கு வாழ்த்துக்கள். பொதுவாக ஒரு கதையை நான் படிக்கும்போது என் எண்ணத்திற்க்கேற்ப கதாபாத்திரங்களை, காட்சிகளை கற்பனை செய்து கொள்வேன். அதுபோல் பொன்னியின் செல்வன் படிக்கும்போதும் கற்பனை செய்து வைத்திருந்தேன். என்னதான் படித்து இருந்தாலும் இந்த புதினத்தை எவ்வாறு படமாக எடுத்து இருப்பார் மணிரத்னம்.. வந்தியத்தேவன், கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை, நந்தினி கதாபாத்திரங்களின் காட்சி அமைப்புகள்... Continue Reading →