சித்திரை திருவிழாவில் சின்னாபின்னமான தருணம்

கடந்த மாதம் மதுரைக்கு சித்திரை திருவிழா காண சென்றபோது கூட்டத்தில் சிக்கி சின்னாப்பின்னாமான திக் திக் நிமிடங்கள் 😭😭😭 கள்ளழகர் ஆற்றில் இறங்கும் மதுரை சித்திரை திருவிழா வைபோகத்தை பார்க்க முடிவுசெய்து விழாவின் முந்தைய நாள் இரவு மதுரை வந்து தம்பி கமலுடன் மதுரையை சுற்றிவிட்டு, சாமி உலா பார்த்துவிட்டு, இரவு 2 மணிக்கு யாஷின் #KGF2 படத்தை கோபுரம் சினிமாஸ்ல பார்த்துவிட்டு அது முடிச்ச கையோட ஆத்துல இறங்குற விழாவை பார்க்க அதிகாலை கிளம்பி போனோம்.... Continue Reading →

செந்திலாண்டவன் தரிசனம் !

சிலருக்கு சிவாலய திருத்தலம், சிலருக்கு திருப்பதி, சிலருக்கு மதுரை என ஒவ்வொருவருக்கும் இறைவனின் சில திருத்தலங்கள் சென்று வந்தால் மனதுக்கு நிம்மதியும், புத்துணர்ச்சியையும், நேர்மறை எண்ணங்களையும் , ஏற்படுத்தும். அதுபோல எனக்கு மிகவும் பிடித்த ஸ்தலம், என் செந்திலாண்டவன் வீற்றிருக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி திருக்கோவில். கொரோனா ஊரடங்குக்கு பிறகு செந்திலாண்டவனை கடந்த முறை தரிசித்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன், அவற்றை இங்கே ஒரு முழு பதிவாக மீண்டும் பதிவிட்டிருக்கிறேன். சிறுவயதில் படையப்பா படம் பார்த்ததில் இருந்து... Continue Reading →

வெள்ளியங்கிரி பயணம்

வெள்ளியங்கிரி பயணம், ஒரு புது அனுபவம் ❤️ வணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பதிவின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த வாரம் வெள்ளியங்கிரி சென்று வந்தது பற்றிய ஒரு பயண அனுபவமே இந்த பதிவு. வாருங்கள் வெள்ளியங்கிரிக்கு செல்லலாம். தலைவர் ரஜினிகாந்த் மூலம் ட்விட்டரில் கிடைத்த நண்பர்கள் ஏராளம். அதில் சில நண்பர்களுடன் வெள்ளியங்கிரி செல்ல ஒரு மாத காலம் முன்னவே திட்டமிட்டு, அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை 22.04.22 இரவு அன்று சென்னையில் இருந்து... Continue Reading →

வானரங்களுடன் வாரணம் ஆயிரம்

13 Years of Vaaranam Aayiram ❤️ என்னோட வானர கூட்ட நண்பர்களோடு சேர்ந்து வாரணம் ஆயிரம் படம் பார்த்த அனுபவம். பதினொன்னாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம், பள்ளி ஆண்டு விழா. பொதுவாக பதினொன்னாம் வகுப்பு மாணவர்கள் தான் இந்த விழாவை ஆசிரியர்களுடன் இணைந்து நடத்துவார்கள். அவ்வகையில் எங்களிடம் அந்த ஆண்டின் பள்ளிகூட ஆண்டுவிழா நடத்தும் பொறுப்பு குடுக்கப்பட்டிருந்தது. காலையில் விளையாட்டு போட்டிகளும், மாலையில் பல்வேறு வகுப்பு மாணவர்களின் நாடகங்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும்,போட்டியில் வெற்றி... Continue Reading →

மதுரையில் ஒரு நாள் !

நேற்று காலை கோவில்பட்டியில் இருந்து பாண்டியநாட்டு தலைநகர் மதுரைக்கு தலைவர் மூலம் ட்விட்டரில் கிடைத்த சொந்தமான தம்பி கமலை சந்திக்க வந்தேன். மதுரை மாட்டுத்தாவனியில் அவனை சந்தித்த பின்பு அங்கிருந்து அவனுடைய வாகனத்தில் திருப்பரங்குன்றம் நோக்கி சென்றோம். அரைமணிநேர சுற்றலான பயணமாக இருந்தாலும் இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலையில் ப்ராயணித்தது குளிர்ச்சியாக இருந்தது. ஒருவழியாக திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். குடவரைக் கோவிலான இதில் குகையை குடைந்து அமைக்கப்பட்ட சந்நிதியில் வீற்றிருக்கும் எம்பெருமான் முருகனையும்,... Continue Reading →

திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு !

முதல்ல தேங்காயை துருவி எடுத்து அதை மிக்சியில் அரைத்து இரண்டு தடவையாக தேங்காய் பால் எடுத்துக்கனும். சின்ன வெங்காயம், முருங்கைக்காய், கேரட்/பீன்ஸ்/உருளை (விருப்பத்திற்கேற்ப) காய்கறிகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதை வேகவைக்கனும். ரெண்டு மூனு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு துண்டு தேங்காய் எடுத்து சின்ன மிக்ஸில போட்டு அரைச்சிக்கனும். அதேபோல 100 கிராம் அளவில் பாசிப் பருப்பை எடுத்து தனியாக தண்ணீர் ஊற்றி வேக வச்சிக்கனும். இப்போ காய்கறி நல்ல வெந்ததும் அதுல... Continue Reading →

திருச்செந்தூர் முருகனும், டச்சுக்காரர்களும் !

ஒவ்வொரு முறை திருச்செந்தூர் கோவில் செல்லும்போதும் பிரகாரத்தில் உள்ள ஓவியங்களை பார்த்து ரசிப்பேன். அதிலொன்று டச் படையெடுப்பின் போது திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முகர் நடராஜர் சிலைகளை டச்சுக்காரர்கள் கொள்ளை அடித்துச் சென்ற வரலாறு. அறுபடை வீடுகளில் ஒரு கோயிலான திருச்செந்தூர் முருகன் கோயிலின் மூலவர் சிலையை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் படையினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். டச்சுப் படையினரால் கொள்ளையடிக்கப்பட்ட அந்த சிலை மீண்டும் கோயிலை எப்படி வந்தது கொள்ளையடித்த டச்சு படையினர் என்ன... Continue Reading →

திராவிட கட்சிகளால் பந்தாடப்பட்ட விஜய் அண்ணாவும் அவரது படங்களும் !

திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த சமயம். சன் பிக்சர்ஸ் விஜய் நடித்த வேட்டைக்காரனை தொடர்ந்து , சுறா படத்தையும் வாங்கி விநியோகித்தது. எதிர்பார்த்தபடி படம் ஓடாததால் திரையரங்க உரிமையாளர்கள் நஷ்ட ஈடு கேட்டு விஜய்யை அணுக, அவர் தரப்பிலிருந்து பதில் ஏதும் வரவில்லை. இதன் விளைவு காவலன் பட வெளியீட்டு நேரத்தில் எதிரொலித்தது. சுறா பட நஷ்டத்தை ஈடுகட்டினால் தான் காவலன் படத்தை வெளியிடுவோம் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இன்னொரு பக்கம் சன் பிக்சர்ஸ்... Continue Reading →

விஜய்யின் 47வது பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் !!

தளபதி விஜய்யின் 47 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நான் எடிட் செய்த சிறப்பு போஸ்டர். இதுவரை இல்லாத வகையில் புது முயற்சியாக காமிக்ஸ் புத்தகம் முகப்பு பாணியில் ஒரு பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர். #HBDTHALAPATHYVijay Thalapathy Vijay Birthday Special Poster

Website Powered by WordPress.com.

Up ↑