கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமா இருக்குற தற்போதைய சூழல்ல போன மாசம் வர 45 வயசுக்கு மேல உள்ளவங்க எல்லாரும் போய் தடுப்பூசி போடுங்கனு சொல்லிட்டு இருந்த அரசாங்கம் , மே 1ல இருந்து 18 வயசுக்கு மேல உள்ளவங்களும் https://selfregistration.cowin.gov.in இந்த தளத்துல பதிவு பண்ணிட்டு தடுப்பூசி போட்டுக்கலாம்னு அறிவிச்சது. எல்லாரும் முட்டி மோதி பதிவு பண்ணி வச்சா சில இடங்கள்ல தடுப்பூசி இல்லைனு சொல்லி அனுப்பிட்டு இருக்காங்க. ஆனா நான் ஒரு வங்கி அதிகாரி... Continue Reading →
மூக்குத்தி அம்மன்
#MookuthiAmman நயன்தாரா, RJ பாலாஜி ,ஊர்வசி நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியான பொழுதுபோக்கு திரைப்படம். ராமசாமியாக RJ பாலாஜியின் அறிமுக காட்சியும் அதனை தொடர்ந்து அம்மா பால்தங்கமாக ஊர்வசியின் வெகுளித்தனமா நடிப்புடன் கூடிய பெண் பார்க்கும் காட்சி, குலதெய்வம் மூக்குத்தி அம்மனாக வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் அவருடன் தொடர்ந்து பயணிக்கும் பாலாஜியின் காட்சிகள் என விறுவிறுப்பான முதல் பகுதி அசத்தல். 👌👌 ஆனால் இரண்டாம் பாதி திரைக்கதையில் சற்று தொய்வு ஏற்பட்டு சுமாராகி போனது.☹️☹️ கடவுள் வழிபாடு,... Continue Reading →
மானஸா டீ கடை
மானஸாவின் டீ கடை !மானஸா சம்யுக்தா, ஒரு சிறிய கிராமத்தில் வாழும் நடுத்தர குடும்பத்து சிறுமி. சிறுவயது முதல்லே வருங்காலத்தில் படித்து முடித்தவுடன் தொழில் தொடங்குவதை கனவாக கொண்டு வாழ்ந்து வருகிறாள். அவளுக்கு ஆதரவாக தாத்தாவும், பொம்பளை பிள்ளைக்கு எதுக்கு கனவுலாம் என எதிராக குடும்பமும் உள்ளது இருந்தாலும் தன் கனவை விட்டுக்குடுக்காமல் இருக்கிறாள்.வருடங்கள் ஓடுகிறது... MBA இறுதியாண்டு படிக்கும் தருவாயில், அவள் அப்பாவிற்கு நியாபக மறதி நோய் ஏற்பட்டு வேலைக்கு போகமுடியாத சூழல் உருவாக, அக்கா... Continue Reading →
மர்மதேசமும் ரகசியமும் !
மர்மதேசம் சின்ன வயசுல பயந்து பயந்து கண்ணை கையால பொத்திக்கிட்டு விரல் இடுக்கு வழியா பார்த்து ரசித்த எத்தனையோ 90ஸ் கிட்ஸில் நானும் ஒருத்தன். விடாது கருப்புல வர அந்த குதிரை, கருப்பசாமி இதெல்லாம் பார்த்து பயந்த நியாபகம் இருக்கு, ஆனா முழுக்கதையும் சரியா நினைவில இல்லை. சரின்னு சன் டிவியில இப்போ போடுறான்னு பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். முதல் எபிசோடே பயமாதான் இருந்துச்சு. ஒவ்வொரு எபிசோடும் விளம்பரத்தோட பார்க்க கடுப்பா இருக்கேன்னு யூட்டுப்ல பார்க்கலாம்னு போனப்போ தான்... Continue Reading →
கொரோனாவுடன் சில நாள் !!
கொரோனாவுடன் சில நாள் !! வீட்டுக்குள்ளேயே இருக்கோம், நமக்குலாம் கொரோனா வராதுன்னு நினைச்சிட்டு இருந்தா "எனை நோக்கி பாயும் தோட்டா"ன்னு கொரோனா வந்து என்னை தாக்கிட்டு போயிருச்சு. அந்த அனுபவம் பற்றிய ஒரு பதிவு... கடந்த ஜூலை 17ஆம் தேதி, காலையில எந்திரிக்கும்போதே உடம்புல ஒருவித அசதியும், கூடவே உடல் சூடும் இருந்துச்சு. காய்ச்சல் வந்தா உடம்பு எப்படி இருக்குமோ அதே மாதிரியான உடல்நிலை இருந்துச்சு. வீட்ல அம்மா கிட்ட காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்குன்னு சொல்ல,... Continue Reading →
ராஜ்ஜியம் இழந்த ராஜ் டிவி
ராஜ் டிவி ~ 1994 ,அக்டோபர் 24ல் ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்களால் தொடங்கபட்டது . தமிழின் இரண்டாவது தனியார் தொலைக்காட்சியாக தொடங்கப்பட்ட ராஜ் டிவி , சன் டிவிக்கு போட்டியாக செயல்பட்டது. ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர்கள் ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் உருதுணையுடன், 1983 ஆம் ஆண்டு ராஜ் வீடியோ விஷன் எனும் வீடியோ கேசட் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார். பல தயாரிப்பாளர்களிடமிருந்து தமிழ் படங்களின் உரிமைகளை கைப்பற்றினர். பின்னர் படங்களுக்கான தொலைக்காட்சி, கேபிள்... Continue Reading →
சின்னத்திரையில் முத்து !!
முத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் 1995ல் வெளியாகி பல சாதனைகள் கண்ட வெற்றி திரைப்படம். முத்து படத்தின் வெள்ளித்திரை சாதனைகள் பற்றி அனைவரும் அறிந்ததே. சின்னத்திரையில் முத்து திரைப்படம் படைத்த சாதனைகளை பற்றி பார்க்கலாம். 1995ல் தீபாவளி வெளியீடாக வந்த முத்து திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிடமிருந்து வாங்கிய சன் டிவி, 1998/99 ஆம் ஆண்டு தீபாவளி தினம் இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒளிபரப்பினார்கள். அதன் பின்பு 2-3 வருடங்களுக்கு ஒரு முறை... Continue Reading →
தூத்துக்குடி மக்ரூன் !!!
கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு !! தூத்துக்குடி மக்ரூன் ❤️❤️ பொதுவாக தூத்துக்குடி என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது உப்புதான். ஆனால் அதையும் தாண்டி இனிப்புக்கும் பெயர் போனதுதான் தூத்துக்குடி. ஆம் தூத்துக்குடியில் தயாராகும் இனிப்பு பண்டமான மக்ரூன் மிகப்பிரபலம். இதன் சுவையே தனி. இந்த பதிவை படிப்போர் எத்தனை பேர், மக்ரூன் சாப்பிட்டு இருப்பீர்கள் என தெரியவில்லை. ஆனால் ஒருமுறை சாப்பிட்டு விட்டால் இந்த மக்ரூன் சுவைக்கு அடிமையாகி விடுவீர்கள். தூத்துக்குடியில் பிரபலமான மக்ரூன், உண்மையில்... Continue Reading →
தமிழ் செய்தி தொலைக்காட்சிகள்
தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் பற்றிய ஒரு பார்வை !! செய்தித்தாள், வானொலியில் தினமும் செய்திகளை படித்தும், கேட்டும் வந்த தமிழக மக்கள், தொலைக்காட்சி வருகைக்கு பின்பு தூர்தர்ஷனில் செய்திகளை பார்த்து வந்தனர். 90'களில் தமிழகத்தில் தொலைக்காட்சியின் வளர்ச்சி பரவலாக இருந்தது. அப்போது தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த சமயம். அரசுக்கு எதிரான செய்திகள் ஏதும் அரசு தொலைக்காட்சியில் வராதபடி பார்த்துக்கொண்டார் அம்மையார். இந்த நேரத்தில் தான் தமிழின் முதல் தனியார் தொலைக்காட்சி சன் டிவி... Continue Reading →
விக்ரமனின் நான் பேச நினைப்பதெல்லாம் !!
நேத்து கேடிவியில நான் பேச நினைப்பதெல்லாம் ன்னு ஒரு படம் பார்த்தேன். ஆனந்த் பாபு, விவேக், மோகினி நடிச்ச படம். வாழ்க்கையில் வெவ்வேறு காரணங்களால் தனித்தனியே காதல் தோல்வியை சந்தித்த இருவரும் ஒருகட்டத்தில் சந்திக்க, அவர்களுக்கு துணையாக விவேக் இருப்பார். ஆனந்த்பாபு மியூசிக் சான்ஸ் தேடி அலைய, மோகினி வேலை தேடி அலைவார். பின்னர், மோகினி படித்து தேர்ச்சிபெற்று IAS ஆகி இவர்களை விட்டு டெல்லிக்கு சென்று விட, ஆனந்த்பாபு மீண்டும் முன்னேற முடியாமல் தவிப்பார். பணி... Continue Reading →