இருட்டு கடை அல்வா

இருட்டுகடை அல்வா ❤️❤️❤️ திருநெல்வேலி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அல்வாதான். அதிலும் இருட்டுகடை அல்வா என்றால் நாவில் எச்சில் ஊறும். "நினைத்தாலே இனிக்கும்" என்பதற்கு ஏற்றார் போல் அல்வாவை பற்றி நினைத்தாலே அந்த தித்திப்பான சுவை நாவில் ஒட்டிக்கொள்ளும். சிறுவயதில் தேர்வு விடுமுறை நாட்களில் திருநெல்வேலியில் உள்ள சித்தி வீட்டிற்கு செல்வது வழக்கம். எப்போது சென்றாலும் நெல்லையப்பரை தரிசிக்கிறேனோ இல்லையோ தவறாமல் இருட்டு கடை அல்வா அல்லது சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா சாப்பிட்டுவிடுவேன். அதன் சுவை... Continue Reading →

எனக்கு பிடித்த விஜய் !

எனக்கு பிடித்த விஜய் !! குஷி படத்தின் மூலம் முதல் முறையாக எனக்கு அறிமுகம் ஆகிறார் விஜய். படம் வெளியாகி இருந்த சமயம், டிவியில் அவ்வப்போது குஷி பட பாடலான"ஒரு பொண்ணு ஒன்னு தான் பார்த்தேன்" ஒளிபரப்பாகிறது. அதில் வரும் பாப்பு.. பாப்பு.. எனும் வார்த்தைகள் பிடித்து போக பாடல் கேட்கும்போதெல்லாம் பாப்பு பாப்பு என கூட சேர்ந்து முணுமுணுக்க ஆரம்பித்தேன். இப்பாடலின் வழியாக விஜயும் பிடித்து போனது. குஷி படத்துக்கு கூட்டுப்போவதாக சொல்லி என்னை விட்டுட்டு... Continue Reading →

நானும் சன் டிவியும்

நானும் சன் டிவியும் !! 90களில் பிறந்த எல்லாருக்குமே மறக்க முடியாத பல அனுபவங்கள் இருக்கும், அதுல ஒண்ணுதான் சன் டிவி. எல்லாருமே சன் டிவிய பார்த்து வளர்ந்தவங்க, அதுல நானும் ஒருத்தன். விவரம் தெரிஞ்சு டிவி பார்க்க ஆரம்பிச்சு இப்போ வர நான் சன் டிவியோட ரசிகன். அந்த காலகட்டத்துல பொதிகை சேனல் தான் முதலில் இருந்துச்சு. ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சு ஆன்டெனால தூர்தர்ஷன் டிவில சண்டேஸ்ல சக்திமான் பாத்திட்டு இருந்தேன், இதுதான் என்னோட முதல் தொலைக்காட்சி... Continue Reading →

90’களில் சன் டிவி !!!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியை பார்த்து போரடித்து போன தமிழக மக்களுக்கு சன் டிவியின் வருகை ஒரு வரப்பிரசாதமாக அமைந்தன. சன் டிவி நிகழ்ச்சிகள் புதுவித பொழுதுபோக்கை அமைத்து குடுத்தது. ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி தொடர்கள் , விளையாட்டு நிகழ்ச்சிகள் , செய்திகள் போன்றவை ஒளிபரப்பாகின. திரையரங்கில் மக்கள் கண்டுகளித்து ரசித்த திரைப்படங்களும் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கின. பண்டிகை திருவிழா கால நாட்களில் புதுப்படங்கள் , சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்ற நாட்களில் நாடகங்கள் என... Continue Reading →

சன் டிவி கலாநிதி மாறன் !

கலாநிதி மாறன் சன் டிவியை  தோற்றுவித்த வரலாறு !!! தமிழகத்தின் அடையாளங்களில் சன் டிவியும் ஒன்று, அதை உருவாக்கியவர் கலாநிதி மாறன். சன் டிவியை ஆரம்பித்தபோது அவருக்கு வயது 30 கூட தாண்டவில்லை. தன் முழுத்திறமையாலும் , தன் தந்தை மற்றும் தாத்தாவின் ஆதரவோடும் சன் தொலைக்காட்சியை அந்த இளம்வயதில் ஆரம்பித்தார். அதைப்பற்றி சற்று விரிவாக இந்த பதிவில்... கலைஞரின் அக்கா மகனும், முன்னால் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் மகன் தான் கலாநிதி மாறன், இவர்தான்... Continue Reading →

சன் டிவி vs கலைஞர் டிவி !!

சன் டிவிக்கு முன்பாக கலைஞர் டிவியில் விஜய்யின் கில்லி படத்தை ஒளிபரப்பிய வரலாறு தெரியுமா ??அதை பற்றிய சிறு கட்டுரை.சன் டிவி தமிழகத்தின் நம்பர் 1 சேனல். மக்கள் ஆதரவும் திமுக ஆதரவும் நிறைந்த சேனல். அதேபோல் திமுகவுக்கும் ஆதரவளிக்கும் சேனலாக இருந்தது.சன் குழுமத்தை சேர்ந்த தினகரன் நாளிதழில் தினமும் ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகும். அவ்வாறு திமுகவில் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு மக்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் என வெளியிட்ட கருத்து கணிப்பால் நடந்த மோதலில் மதுரை... Continue Reading →

My Life With Thalaivar Movies 4

#13YearsOfSivajiTheBoss சிவாஜி படம் வெளியாகி 13 வருடம் கடந்த நிலையில் , படம் பார்த்தது பற்றிய என் அனுபவம் !! தலைவர், இயக்குனர் ஷங்கரின் முதல் கூட்டணி. இதைப்பற்றிய அறிவிப்பு நாளிதழ்களில் வந்ததும், படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியது.படம் தொடங்கிய நாள் முதல் படத்தை பற்றிய செய்திகள் வராதா என பேப்பரை புரட்டிய நாட்கள் அவை. நாட்கள் செல்ல செல்ல படத்துக்கான எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே சென்றது. எப்போது படம் வெளியாகும் என ஆர்வமாக காத்திருந்த நாட்கள். அப்போது ஒன்பதாம்... Continue Reading →

எனக்கு பிடித்த படங்கள் !!!

திரைப்படங்கள் நம் வாழ்க்கையில் இரண்டுற கலந்தவை. அந்த படங்கள் நம் எண்ணங்களில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அவை நம்மளை ஏதாவது ஒரு வகையில் மகிழ, கொண்டாட, சிரிக்க, சிந்திக்க, அழுக, ஏன் எரிச்சல் கோபம் கூட அடையவைத்திருக்கும். இதுவரை நாம் எத்தனையோ படங்கள் திரையரங்கில், டிவியில், கம்ப்யூட்டரில் பார்த்திருப்போம். அதில் நமது அபிமான நடிகர்களின் படங்கள் தவிர்த்து, குறிப்பிட்ட சில படங்கள் நம் மனதில் நீங்கா இடம்பிடித்துருக்கும், எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சலிப்பு தட்டாது. அதன்... Continue Reading →

பள்ளிநாட்களும் கிறிஸ்துமஸ் கேக்கும் !!!

கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பள்ளிக்கூட நாட்கள்தான். நான் படித்தது ஒரு கிறிஸ்துவ மெட்ரிக் பள்ளியில், அதனால் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றி சிறுவயதிலே அறிந்திருந்தேன். ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளியில் நடக்கும் பிரார்த்தனையில் கிறிஸ்துவ பாடல்கள் பாடி பாடி அதுவும் பரிச்சயமான ஒன்றாகிப்போனது. எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டில் அனைத்து பண்டிகைகளும் அப்போது பள்ளியில் கொண்டாடுவார்கள். தைப்பொங்கல் நாட்களில் எல்லா மாணவர்களிடமும் சிறுத்தொகையை வகுப்பு ஆசிரியர்கள் வசூலித்து , அதில் பொருட்கள் வாங்கி பள்ளியிலேயே... Continue Reading →

My Life With Thalaivar Movies 3

#MyLifeWithThalaivarMovies #Baba படையப்பா படம் வெளிவந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்பு வெளியான படம், பாபா. அதனால் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.அதுவும் பட அறிவிப்பின் போது வெளியான போஸ்டரில் தலைவர் பாபா முத்திரா, தலைப்பாகை, சிகரட் என செம்ம கெத்தாக இருப்பார், அதில் தொடங்கியது படத்திற்கான எதிர்பார்ப்பு. படம் வெளியாகும் முன்னர் அவ்வப்போது அன்றைய செய்தி நாளிதழ்களில் படம் தொடர்பான செய்திகள், தலைவரின் புகைப்படங்கள், விளம்பரம் என வந்து கொண்டிருந்தன. அப்போது நான்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑