சவுரிமுடிக்காரர்...சிறுவயதில் என்னை மிகவும் பயமுறுத்திய ஒரு நபர் !!! காரணம் என் அம்மா...சிறு வயதில் வீட்டிற்கு வெளியே வைத்து போக்கு காட்டி சாப்பாடு ஊட்டிவிடுவார்கள்.. அப்போது சாப்பிட முரண்டு பிடிக்கும்போது பூச்சாண்டியிடம் பிடிச்சு கொடுத்திருவேன் என பயமுறுத்தி சாப்பிடவைப்பார்கள்.அப்படி ஒரு பூச்சாண்டியில் ஒருவர்தான் இந்த சவுரிமுடிக்கரார். கருப்பு நிறம், திடகாத்திரமான உடல், பெரிய மீசை, தலைப்பாகை, வலது தோல் பட்டையில் ஒரு ஜோல்னாப்பை, நீலம், சிவப்பு, ரோஸ் இவற்றுள் ஏதாவது ஒரு வண்ணத்தில் சட்டை, வண்ண லுங்கி,... Continue Reading →
சன் பிக்சர்ஸின் எந்திரனும் பேட்டயும் !!!
கடந்த சனிக்கிழமை வெளியான "தினகரன்" நாளிதழுடன் ரஜினிகாந்தின் "பேட்ட" படத்தின் போஸ்டரை இலவச இணைப்பாக்கி ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு நிறுவனமான "சன் பிக்சர்ஸ்" !! இது முதல்முறையல்ல..இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மற்றொரு படமான ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணியில் உருவாகும் "சர்கார்" படத்தின் போஸ்டரை விஜய் பிறந்தநாளை ஒட்டி தினகரன் நாளிதழோடு இலவச இணைப்பாக வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷியாக்கியது. ஆனால் "ரஜினிகாந்த்" படத்திற்கு இது இரண்டாவது முறை. இதற்கு முன் சன் பிக்சர்ஸ்... Continue Reading →
புதிய தோற்றத்தில் ரஜினிகாந்த்…பேட்ட ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்!!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த் நடித்துவரும் பேட்ட படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லூக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது லக்னோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய தோற்றத்தில் ரஜினிகாந்த் இருக்கும் சில புகைப்படங்கள் கசிந்துள்ளன. இந்த படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.