மாயநதியில் கபாலி, குமுதவள்ளியுடன் நான் !!!

kabali j225125057045730535089..jpg

படத்தின் முதல் பார்வையில் தொடங்கி டீசர், ட்ரைலர், பாடல்கள் , தயாரிப்பாளரின் பிரம்மாண்ட விளம்பர யுக்திகள் என மிகப்பெரிய எதிர்பார்ப்பை கூட்டி படம் எப்போது வெளியாகும், எப்படா தலைவரை திரையில் பார்ப்போம் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களில் நானும் ஒருவன் !!

படம் வெளியாகும் தேதி அறிவிப்பு வந்தது, அந்த சமயத்தில் தான் நான் புதியதாக அந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தேன், என்னுடைய முதல் பணி அது. அப்போது நான் பள்ளிக்கரணையில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். என்னுடன் தங்கியிருந்த மூன்று நண்பர்களில் இருவர் தலைவர் ரசிகர்கள். நாங்கள் மூவரும் ஒன்றாக முதல் நாள் முதல் காட்சி அருகில் உள்ள மேடவாக்கம் குமரன் தியேட்டரில் பார்க்க திட்டமிட்டோம். நான் எவ்வளவோ முயன்றும் எனக்கு அரை நாள் விடுப்பு கூட கிடைக்கவில்லை. அதனால் என் நண்பர்கள் என்னை விட்டுட்டு அவர்கள் இருவரும் தலைவரை தரிசிக்க சென்றுவிட்டார்கள். நான் கிளம்பி அலுவலகம் வந்துவிட்டேன்.ஆனால் அங்கு எனக்கு வேலை ஓடவில்லை..நினைப்பு முழுவதும் கபாலியை பற்றியே இருந்தது.

படம் பார்த்துவிட்டு வந்த நண்பர்களிடம் நான் படத்தை பற்றி ஏதும் கேட்கவில்லை. ஏனென்றால் முகநூல், ட்விட்டரில் பல்வேறு விதமாக விமர்சனம் வந்துக்கொண்டிருந்தன. அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அலுவல் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினேன்.எனக்கு இரவுநேர காட்சிக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தார்கள், நண்பனிடம் டிக்கெட் வாங்கிவிட்டு படம் எப்படிடா இருக்கு என கேட்டேன், நீ முதல்ல போய் பார்த்துட்டுவா, லேட் ஆகுது என சொல்லி தியேட்டருக்கு அனுப்பிவச்சான்.

நானும் ஒருவழியா கிளம்பி தியேட்டருக்கு வந்தேன்.நைட் ஷோக்கு சரியான கூட்டம், உள்ள போறதுக்கே கால்மணி நேரம் ஆயிருச்சு. ஏற்கனவே வாங்கி வச்ச டிக்கெட்டுக்கே இந்த கதி, அடுச்சு பிடுச்சு உள்ளபோய் சீட்ல உட்கார்ந்த அப்புறம் தான் ஒரு நிம்மதி. தலைவரை பார்க்கபோறோம்னு சந்தோஷபட்டுட்டு இருந்த நேரத்துல தான் என் பிரென்ட் சொன்னது நியாபகத்துக்கு வந்துச்சு.. அவன் ஏன் அப்படி சொன்னான், படம் நல்லா இருக்கா இல்லையா, ஒருவேளை நல்லா இல்லாம போனதால நம்மகிட்ட அவன் அப்படி சொன்னான்னா இல்லை அவனுக்கு பிடிக்கலையானு மாத்தி மாத்தி யோசிச்சுட்டு இருந்த நேரத்துல படத்தை போட்டாங்க..நானும் அதை மறந்துட்டு திரைக்குள்ள போய்ட்டேன்.

screenshot_2019-07-22-22-29-11-177_com7555088935024948796.png

dc-Cover-m0dp4648if347a9hpr60kuld71-20160723060010.Medi

கபாலி பின்னணி இசையோட பழைய ஸ்டைல் சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட திரையில பார்த்ததும் ஆராவாரத்துல ஒட்டுமொத்த தியேட்டரும் அதிர்ந்துச்சு.
இந்த ஆரவாரம் தலைவரோட இன்ட்ரோ, மாஸ் சீன்ஸ் வசனம்னு தொடர்ந்து எண்ட் கார்ட் போடும்போது தான் அடங்குச்சு. தலைவரை திரையில கபாலியா பார்த்து கைதட்டி ரசிச்சு என்ஜாய் பண்ணேன்.ஆனா படத்துல இயக்குனர் என்ன சொல்ல வந்தான், என்ன சொன்னான்னு அப்போ ஏதும் புரியலை, தலைவரை பார்த்த நியாபகம் மட்டும் தான் அப்போதைக்கு நினைவுல இருந்துச்சு, ஒரு குழப்ப நிலையில வீட்டுக்கு வந்தேன்.

kabali-story_647_063016110045

ஆனா படத்துல கபாலியா என்னை ரசிக்க வச்சு, சிரிக்க சிந்திக்க வச்சு, மாஸ் சீன்ல வெறியேத்த வச்சு, இரண்டாம் பகுதியில குமுதவள்ளிய தேடுற காட்சிகள்ல தானும் கலங்கி தன்னோட ஆபார நடிப்பால என்னையும் கண்கலங்க வச்சார். அதை மட்டும் அப்போ என்னால அப்போ உணர முடிஞ்சது. நான் வீட்டுக்கு வரப்போ பிரெண்ட் தூங்கிட்டான், நானும் படுத்தேன் ஆனா தூக்கம்வரல. குமுதவள்ளிய பார்க்க போறோம், அவ எப்படி இருப்பானு தலைவர் படத்துல இரவுமுழுதும் தூங்காம அதை பத்தியே யோசிச்சுட்டு இருப்பாரு. அதே மாதிரி நானும் படுத்துட்டே படத்தை மைண்ட்ல ஓடவிட்டேன்..ஒவ்வொரு காட்சியா வர தொடங்குச்சு… அதுல இருந்து படத்தை புரிஞ்சிக்க முடிஞ்சது..ஆனா டீசர்ல இருந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யல, ரஞ்சித் மேல தான் கோவம் வந்துச்சு அதே நேரத்துல தலைவரோட மாஸ் படங்களுக்கு முந்தைய கிளாசிக் படங்கள்ல இருந்த பழைய நடிப்பை வெளிக்கொண்டு வந்திருந்தார்.

இதற்கு மாய நதி பாடலுக்கு முந்தைய காட்சியே உதாரணம். எனக்கு படத்துல ரொம்ப பிடிச்சதே இரண்டாம் பகுதிதான். அதுவும் கபாலி குமுதவள்ளியின் சந்திப்பு காட்சிகள், அவ்வளவு அழகா இருக்கும். தன் மனைவி உயிரோடு இருக்கிறத தெரிஞ்சு அவளை தேடி அலையும் பயணம், பின் மறுநாள் குமுதவள்ளியை பார்க்கப்போகிறோம் என்ற நினைப்பில் இரவு முழுதும் தூங்காமல் அதை பற்றியே நினைத்து கொண்டிருப்பதும், அடுத்தநாள் காலை எல்லோரும் தனக்காக காத்திருக்க, தன் மனைவியை மீண்டும் சந்திக்க போகும் மகிழ்ச்சியில் தன் அழகை மெருகேற்றி கொண்டு வருவது என தலைவர் நடிப்பில் அசத்தி இருப்பார்.

jhj

ksdfk

ஒருவழியாக குமுதவள்ளி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று அவள் வருகைக்காக காத்திருக்கும் கபாலி, தன் கணவன் மீண்டும் வருவான் என அதையே சர்வகாலமும் நினைத்து இருபத்தைந்து வருடமாக காத்திருந்த குமுதவள்ளியை கொண்டு வந்து கபாலி முன் நிறுத்துவார் அந்த வீட்டின் பெண்மணி. இதை சற்றும் எதிர்பாராத குமுதவள்ளி தன் கபாலி மீண்டும் வந்து கண் முன்னே நிற்பதைக்கண்டு சில வினாடிகள் அதிர்ந்துபோய் பின் வெடித்து அழுவால்.. அதே அதிர்ச்சியில் நின்றுகொண்டிருக்கும் கபாலியும் தன் குமுதவள்ளியை காதலின் வெளிப்பாடாய் கட்டி அணைத்துக்கொள்வார்.

Mayanathi.jpg

பின்பும் ஆனந்த மிகுதியில் அழுத்துக்கொண்டிருக்கும் குமுதவள்ளியின் கண்ணீரை துடைத்துவிட்டு, அவளை பார்த்த மகிழ்ச்சியில் கட்டுப்படுத்த முடியாமல் வெளியே வரும் கண்ணீரை அவள் பார்த்திடும் முன் துடைத்துவிட்டு குமுதவள்ளியை பார்த்து சந்தோஷத்தை வெளிப்படுத்துவார். இவை எல்லாம் அடுத்தடுத்து நொடிப்பொழுதில் கடந்து செல்லும் கவிதை காட்சிகள். இருவருக்குள் இருக்கும் காதல், அன்பு , பாசம் ,சிறு குறும்புகள் என அனைத்தும் மாய நதியில் நம்மை அழைத்து செல்லும்.

“நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே

ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்

மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே “

af79b753-79a6-4836-9026-dbb3f4d99ec5

என்ன ஒரு அற்புதமான பாடல் வரிகள், என இவ்வாறு இரவு நான் தூங்காமல் எனக்குள் நானே பேசிக்கொண்டு மாய நதியில் கபாலி மற்றும் குமுதவள்ளியுடன் நானும் நீந்த தொடங்கினேன்…

#ராக்ஸ்

#Kabali #Thalaivar #Superstar #Rajinikanth

#RadhikaApte #PaRanjith #SanthoshNarayanan

#3YearsOfKabali

#3YrsOfBlockBusterKabali

6 thoughts on “மாயநதியில் கபாலி, குமுதவள்ளியுடன் நான் !!!

Add yours

Leave a reply to Rakks Cancel reply

Website Powered by WordPress.com.

Up ↑