நானும் சன் டிவியும்

நானும் சன் டிவியும் !!

90களில் பிறந்த எல்லாருக்குமே மறக்க முடியாத பல அனுபவங்கள் இருக்கும், அதுல ஒண்ணுதான் சன் டிவி. எல்லாருமே சன் டிவிய பார்த்து வளர்ந்தவங்க, அதுல நானும் ஒருத்தன். விவரம் தெரிஞ்சு டிவி பார்க்க ஆரம்பிச்சு இப்போ வர நான் சன் டிவியோட ரசிகன். 

img_20200620_012658779711996319464358.jpg

அந்த காலகட்டத்துல பொதிகை சேனல் தான் முதலில் இருந்துச்சு. ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சு ஆன்டெனால தூர்தர்ஷன் டிவில சண்டேஸ்ல சக்திமான் பாத்திட்டு இருந்தேன், இதுதான் என்னோட முதல் தொலைக்காட்சி அனுபவம்.

images - 2020-06-20t00235185953114308353319..jpg

அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள்ல கேபிள் வந்ததும் அதுல சன் டிவிய முதல் முதலா பாக்குறேன். சூரியன் உதிச்சு அதோட கதிர்கள் பூமி பந்துல பட்டு அதுல இருந்து சன் டிவி னு தமிழ்ல எழுத்துக்கள் சுழண்டுட்டே வந்து, பின்னால ஒரு வித பின்னணி இசையோட சன் டிவியின் தமிழ் மாலைனு வருவதை பாத்து அம்மா சன் டிவின்னு சொன்னது இப்போகூட நியாபகம் இருக்கு.

picsart_06-20-121554097593423774615.jpg

சன் டிவியில கவர்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். ராதிகாவோட சித்தி, அண்ணாமலை, மெட்டி ஒலி, தடயம், நிம்மதி உங்கள் சாய்ஸ்,சின்ன பாப்பா பெரிய பாப்பா, கோலங்கள்,நம்மை பயமுறுத்திய மர்மதேசம் விடாது கருப்பு,மந்திரவாசல், பஞ்சமி, சிதம்பர ரகசியம், ஏவிஎம் ஓட வாழ்க்கை, சொந்தம், மாயாவி மாரீசன், சூலம், வேலன், சிவமயம், ராஜராஜேஸ்வரி, மை டியர் பூதம்.. இந்த நாடகங்களோட டைட்டில் சாங் கூட கேட்க அவளோ இனிமையா இருக்கும்.

picsart_06-20-018885623665188804044.jpg

சண்டே காலைல வெண்ணிறாடை மூர்த்தி மீண்டும் மீண்டும் சிரிப்பு, டாப் 10 மூவிஸ், சப்தஸ்வரங்கள், லலிதாவின் பாட்டுக்கு பாட்டு, ஸ்பின்ஸ் இளமை புதுமை, சாயங்காலம் கொண்டாட்டம் நிகழ்ச்சி, விளையாட்டு நிகழ்ச்சிகளான ரம்யா கிருஷ்ணனின் தங்க வேட்டை, சரத்குமார் நடத்திய கோடீஸ்வரன்..

picsart_06-20-014647517792486539982.jpg

சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி படம், சூப்பர் 10, ஞாயிற்றுக்கிழமை 4.30 படம், இதுமட்டும் இல்லாம வார நாட்கள்ல மதியம் ஒவ்வொரு நாளும் ஒரு படம் போடுவாங்க நகைச்சுவை திங்கள், காதல் செவ்வாய்,காவிய புதன், அதிரடி வியாழன், சூப்பர் ஹிட் வெள்ளி.இதோட ப்ரோமோஸ் விஸ்வல்ஸ் கூட இன்னும் ஞாபகம் இருக்கு.

picsart_06-20-01894107345673374813.jpg

நீங்கள் கேட்ட பாடல் , ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஊருக்கு போய்ட்டு பின்னாலேயே நடந்துகிட்டு அங்குள்ள சிறப்பை சொல்லி, மக்கள் கிட்ட பேட்டி எடுத்து அவங்க விரும்புற பாடலை போடுற விஜயசாரதி,

“ச்சொல்லுங்க உங்களுக்கு என்ன பாடல் வேணும்”னு பெப்சி உமா, தொகுத்து வழங்கிய பெப்சி உங்கள் சாய்ஸ்,

திரை விமர்சனம் நிகழ்ச்சி மூலமா ஒவ்வொரு வாரமும் புதுசா வெளி வந்த படங்கள நேர்த்தியான தமிழ் உச்சரிப்பால விமர்சனம் பண்ணுற ரத்னா அவர்கள்,

வணக்கம் வணக்கம் வணக்கம்னு சொல்லிகிட்டே நகைப்பூட்டும் விதமா சிட்டி பாபு மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்கிய காமெடி டைம்,

“எந்தெந்த படங்கள் எந்தெந்த இடத்தை பிடிச்சதுன்னு பார்த்தோம், இது இந்த வாரத்தோட நிலைமைதான், மீண்டும் அடுத்த வாரம் பார்க்கலாம்”ன்னு டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சியில படங்களை ஒரு வார்தையில விமர்சனம் பண்ண சுரேஷ்”

picsart_06-20-018586427036339752506.jpg

இன்னும் இப்படி சொல்லிட்டே போகலாம். இதெல்லாம் எதையும் மறக்க முடியாத நினைவுகள், மிஸ்ஸிங் தோஸ் டேஸ். சனி, ஞாயிறு ல புது படம் போடுறது, அந்த படத்தோட விளம்பரம் ஆரம்பிக்கும் போது வர “இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக”னு ஒலிக்கிற தூரன் கந்தசாமி அவரோட வாய்ஸ் ஓவர், படம் பிரீமியர் க்கு சன் டிவி ல வர ப்ரோமோவே தனியா இருக்கும், ஏ நாஸ்டால்ஜிக் ஃபீல்.

img_20200620_0135307656542279979445884.jpg
“இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக” தூரன் கந்தசாமி

தலைவர் படங்களான அருணாச்சலம், முத்து, படையப்பா, பாட்ஷா, எஜமான், குரு சிஷ்யன், பணக்காரன், மாப்பிள்ளை, கமல் படங்கள், விஜய் படங்கள், பல கிளாசிக் படங்கள் நாட்டாமை, சூரியவம்சம், தில்லானா மோகனாம்பாள், ஏகப்பட்ட படங்களை போட்டு விடுமுறை நாட்கள்ல கட்டி போட்டு வச்சிருந்துச்சு. தியேட்டர்ர விட சன் டிவியில தான் அதிகமா தலைவர் படங்கள் பார்த்து இருக்கேன். முத்து,பாட்ஷா ,அருணாச்சலம் படையப்பா, சந்திரமுகி படம்லாம் எத்தனை தடவ சன் டிவியில போட்டாலும் பாத்துட்டே இருக்கலாம். ஏன்னா சன் டிவியில தலைவர் படம் பார்க்கிறதே தனி சுகம்தான், தியேட்டர்ல எப்படி படம் தரமா இருக்குமோ அவளோ தரமான குவாலிட்டியில சன் டிவி இருக்கும்.

இன்னமும் நியாபகம் இருக்கு, 2002ஆம் ஆண்டு தீபாவளிக்கு சன் டிவியில தலைவர் நடிச்ச படையப்பா படம் போட்டாங்க. அப்போ அஞ்சாம் கிளாஸ் படிச்சுடுது இருந்தேன், வீடும் ஸ்கூலும் பக்கத்துல இருந்ததால மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்டுவேன். அப்படி போயிருந்தப்போ சன் டிவியில நாடகம் பார்த்துட்டே சாப்பிட்டுட்டு இருக்கேன். அப்போ ” இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாகனு ” படையப்பா பட ப்ரோமோ வருது. அதை பார்த்ததும் செம குஷி ஆயிடுச்சு. இதை போய் ஸ்கூல்ல பிரண்ட்ஸ்கிட்ட முதல்ல சொல்லணும்ன்னு சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பிட்டேன். கிளாஸ்க்கு போனதும் பிரண்ட்ஸ் கிட்ட இதை சொல்லி சந்தோசப்பட்டது, பின்ன தீபாவளி அன்னைக்கு படம் பாத்துட்டு திரும்ப ஸ்கூலுக்கு போனது அப்புறம் பிரண்ட்ஸ்கிட்ட படம் பார்த்தது பேசினது எல்லாம் மறக்க முடியாது. அப்போ இருந்த அதே எக்ஸைட்மென்ட் இப்போவும் தலைவர் படம் டிவியில போடுறப்போ இருக்கு.

img_20200620_0140456589423039279269592.jpg

தமிழ் படங்கள் போக இதெல்லாம் பத்தாதுன்னு அப்போ சன் டிவியில ஹாலிவுட் டப்பிங் படங்கள் ஜாக்கி சான் ஓட ஷாங்காய் நூன், ஷாங்காய் நைட்ஸ், ரஷ் ஹவர், நார்னியா, ஹாரி பாட்டர்,etc…வேற போடுவாங்க. ஏதும் பண்டிகை காலம் பொங்கல் , தீபாவளின்னு வந்துட்டா அதோட சிறப்பு நிகழ்ச்சிகள் முக்கியமா சாலமன் பாப்பையா பட்டிமன்றம் பாக்கிறதே தனி சுகம் தான். இப்படி சின்ன வயசுல ஒவ்வொரு நாட்களிலும் என் கூட பயணிச்சிருக்கு சன் டிவி.

படங்களை சன் டிவி யில மட்டுமே பாத்திட்டு இருந்த காலம் மாறி 2000 ஆம் ஆண்டு கே டிவி ஆரம்பிச்சதும் வரிசையா அதுல படம் பாக்க ஆரம்பிச்சேன். கே டிவி ஆரம்பிச்ச அன்னைக்கு தலைவரோட பாட்ஷா ஒளிபரப்பாச்சு, மறக்க முடியுமா என்ன ? பரிட்சை விடுமுறை நாட்கள்ல காலைல எந்திரிச்சதும் கே டிவி பாத்துட்டே அன்னைக்கு பொழுதை போக்குனதுலாம் மறக்கமுடியாது.(இப்போ பல வருஷம் கழிச்சு கொரோனாவால வீட்டுல உக்காந்து காலையில திரும்பவும் கே டிவி படங்களை பாத்துட்டு இருக்கோம்).

இதை எல்லாத்தையும் அனுபவிச்சு இப்போ ரசிச்சுட்டு இருக்கோம்னா அதுக்கு காரணம் கலாநிதி மாறன்தான். சன் பிக்ச்சர்ஸ் மிக ப்ரம்மாண்டமா தயாரிச்ச தலைவர் நடிச்ச எந்திரன் படத்தோட ஆடியோ லான்ச் மலேஷியால பெருசா நடந்துச்சு. அந்த விழாவுல தான் கலாநிதி மாறன் எப்படி இருப்பார்னே தெரியும். கலாநிதி மாறன், இவரை பத்தி நினைச்சாலே பிரமிப்பா இருக்கும். சன் டிவி ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வந்த சன் நெக்ஸ்ட் வர அவரோட வளர்ச்சி, இன்னும் வளர்ந்துட்டே இருக்கு.

இதையெல்லாம் தாண்டி கலாநிதி மாறன் மேல மதிப்பு வர இன்னொரு காரணமும் இருக்கு. முரசொலி மாறன், சிவாஜி கணேசன் போன்றவங்க இறந்தப்போ தொடர் நேரலை பண்ண மாதிரி, ஜெயலலிதா இறந்தப்போ ஜெயா டிவியா இல்ல சன் டிவியானு தோணுற அளவுக்கு அன்னைக்கு முழுதும் ஹாஸ்பிடல்ல ஆரம்பிச்சு மெரினால அடக்கம் பண்ணுற வரை நேரலை செய்தி வழங்கிட்டு இருந்தாங்க. இதை சன் நியூஸ் சேனல்ல மட்டும் ஒளிபரப்பிருக்கலாம், ஜெயா அரசு சன் டிவியை இருட்டடிப்பு செய்ய எத்தனையோ முயற்ச்சி பண்ணாங்க, ஆனா அதையெல்லாம் மறந்துட்டு அன்னைக்கு உள்ள மற்ற நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் நிறுத்திட்டு ஜெயா மரணத்தை ஒளிபரப்புனதுல சன் டிவி மேல ஒரு தனி மரியாதையே வந்துச்சு.

SUN_TV_1646295f

பல வருஷமா தமிழ்நாட்டுல நம்பர் 1 சேனல்லா இருந்த சன் டிவி கடந்த சில வருடமா இந்தியாவுலயே நம்பர் 1 சேனல்லா இருக்கு. எம்.ஆர்.சி நகர்ல இருக்கிற சன் நெட்ஒர்க் ஆஃபீஸ் ரெண்டு மூணு தடவை வெளில இருந்து பார்த்து பிரமிச்சிருக்கேன். ஒரு தடவையாச்சும் உள்ள போய் பார்க்கணும், பல நாள் ஆசை. ஒரு நாள் அந்த ஆசையும் நிறைவேறுச்சு , அவங்க தயாரிச்ச தலைவரோட பேட்ட படத்துக்கு ட்விட்டர்ல பேட்ட கான்டஸ்ட் வச்சாங்க. அதுல நான் ஜெய்ச்சப்போ , பேட்ட பட போஸ்டர் வாங்கிக்குறதுக்காக சன் டிவி ஆபிஸ் போயிருந்தேன் . அவளோ பெரிய கட்டிடத்தை நேர்ல போயிருந்தப்போ பார்த்து வியந்துட்டேன். சன் டிவிக்கே போய் அதுவும் தலைவர் பட போஸ்டர் வாங்கின நாள் , செம்ம ஹாப்பி அன்னைக்கு.

சின்ன வயசுல சன் டிவியை சித்தி தொடர்ல பார்க்க ஆரம்பிச்சுது இப்போ சித்தி 2 வர தொடர்ந்துட்டு இருக்கு. இந்த கொரோனா லாக்டவுன்ல இப்போ திரும்பவும் உக்காந்து சித்தி, மெட்டிஒலி பாத்துட்டு இருக்கோம். இன்னும் சன் டிவி பத்தி நிறைய இப்படி சொல்லிகிட்டே போலாம் , அவ்வளோ இருக்கு. சன் டிவி , தலைவர்ன்னு டாபிக் வந்துட்டா நாள் முழுக்க பேசிக்கிட்டே இருக்கலாம். இதோ இன்னைக்கு சாயங்காலம் தலைவர் நடிச்ச பேட்ட படமும், நாளைக்கு மதியம் பாட்ஷா படமும் சன் டிவியில போடுறாங்க.

சிறப்பான தரமான Weekend !!!

~ ஒரு சன் டிவி ரசிகனின் பதிவு !!!

#SunTv #KalanithiMaran #Superstar #Rajinikanth #Baasha #Petta

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑