புக்-மார்க் 📚🔖

வணக்கம் மக்களே..

ரொம்ப நாளுக்கு அப்புறம் திரும்பவும் ஒரு எழுத்து பயணம் ஆரம்பிச்சாச்சு. இதுவரை சினிமா, டிவி சேனல்கள், சிறுகதைகள், தொடர்கதைன்னு எழுதிட்டு இருந்தேன். இப்போ எழுதப்போறது நான் படித்த புத்தகங்கள் பற்றிய விஷயம். இதை விமர்சனம் அப்படின்னு சொல்லிட முடியாது.. அந்த புத்தகங்களை பற்றிய என்னுடைய பார்வைன்னு சொல்லுறது தான் சரியா இருக்கும்.

இவ்வளவு நாள் இல்லாம இப்போ ஏன் இதை எழுதுறேன் அப்படின்னா இப்போதான் புத்தகம் படிக்கவும், அதை பற்றி ஆலோசிக்கவும் நேரம் கிடைச்சிருக்கு. புத்தகம் படிக்கிறேனோ இல்லையோ.. ஒவ்வொரு வருஷமும் தவறாம சென்னை புத்தக கண்காட்சி போய் புத்தகம் மட்டும் வாங்கிட்டு வந்திருவேன். ஆனா படிக்காம அந்த புத்தகம் அப்படியே டேபிள் அல்லது அலமாரியில ஒன்னுபோல அடுக்கப்பட்டு இருக்கும்.

“பல வருஷம் முன்னால வாங்குன நம்மளையே இவன் இன்னும் படிக்கல.. இப்போ புதுசா வேற புத்தகம் வாங்கிட்டு வந்து நம்ம பக்கம் சொருகி வச்சிருக்கான்” ன்னு அலமாரியில இருக்க புத்தகங்கள் என்னை காரிதுப்புறது எனக்கு கேக்கும். இருந்தாலும் கண்டிப்பா அதுக்கான ஒரு நேரம் வரும்னு புத்தகங்கள் மட்டும் வாங்கி வச்சிடுவேன். படிக்காம இருந்ததுக்கு ஒரு காரணமும் இருக்கு.. நெடுஞ்சாலை இரவு கதையை எழுதிட்டு இருந்த சமயத்தில வேற எந்த புத்தகமும் படிக்க நேரம் இல்லை. முதல்ல கதையை முடிச்சு வெளியிட்ட அப்புறம் புத்தகம் படிக்கலாம்னு இருந்தேன். அப்படியே நாட்கள் ஓடிருச்சு.

இப்போ வேலை பணியிட மாற்றத்துக்கு பிறகு, தினமும் பக்கத்து ஊருக்கு பஸ்ல போயிட்டு வந்திட்டு இருக்கேன். அந்த ஒரு மணி நேர பயண நேரத்தில ஒன்னு தூங்கிருவேன் இல்லை அப்படின்னா மொபைல்ல ரீல்ஸ் பார்த்துட்டே வருவேன். ஒரு நாள் எதேச்சையா தோணுச்சு.. பஸ்ல போறப்போ புத்தகம் படிக்கலாம்.. இதைவிட சரியான நேரம் கிடைக்காது அப்படின்னு ஒரு புத்தகத்தை எடுத்து ஆபீஸ் பேக்ல போட்டு வச்சேன்.

ரெண்டு நாளுக்கு பிறகு அந்த புத்தகத்தை எடுத்து படிக்க நேரம் வந்துச்சு. முதல்ல ஒரு தயக்கம் இருந்துச்சு.. பஸ்ல எல்லார் முன்னாடியும் நாம மட்டும் புத்தகம் படிச்சா அவனுங்க நம்மளை பத்தி என்னை நினைப்பாங்க அப்படின்னு யோசிச்சேன். அப்புறம் கொஞ்ச நேரம் பிறகு எவன் என்னை நினைச்சா என்னன்னு புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன்.

இந்த மாதிரி ஒவ்வொரு புத்தகம் படிக்கிறப்போ ஒரு அனுபவம் இருக்கும். சிலருக்கு பஸ் வளைந்து நெளிந்து குலுங்கி போறதுல படிக்க முடியாது, அமைதியான சூழ்நிலை வேணும், எந்த தொந்தரவும் இருக்க கூடாது. ஆனா எனக்கு அப்படி இல்லை.. சின்ன வயசுல இருந்து என்னவோ தெரியல.. பஸ், ட்ரெயின்ல போறப்போ எல்லாம் எதாச்சும் புத்தகம் படிப்பேன், அது அப்படியே பழகிருச்சு.

இந்த மாதம் தொடக்கத்தில தான் பஸ்ல போயிட்டே புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன். கடந்த இருவது நாட்கள்ல மூனு புத்தகம் படிச்சு முடிச்சிட்டேன், இப்போ நாலாவது புத்தகம் போயிட்டு இருக்கு.

நான் பார்த்த சினிமா பத்தி letterboxd Appல அப்போ ரேட்டிங் மார்க் பண்ணுவேன். அதே மாதிரி படிக்கிற புத்தகத்தை பத்தியும் எழுதனும்னு தோணுச்சு. இது மூலமா என்னுடைய எழுதுற பழக்கமும் அதிகமாகும், இந்த வலைத்தளமும் கொஞ்சம் ஆக்டிவா இருக்கும். இதற்கு ஒரு நல்ல தலைப்பு யோசிச்சப்போ தான் “புக்-மார்க்” எனும் இந்த தலைப்பு கிளிக் ஆச்சு.

இனிமே இந்த “புக்-மார்க்” பகுதியில நான் படித்த  புத்தகம் என்ன.. அது என்ன மாதிரியான புத்தகம்.. எனக்குள்ள அந்த புத்தகம் ஏற்படுத்திய தாக்கம் என்ன அப்படின்னு வரக்கூடிய நாட்கள்ல பார்க்கலாம்.

நன்றி வணக்கம்.

உங்கள் ராக்ஸ் 😎

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑