ஆன்டன் செக்காவ் ஆகச் சிறந்த கதைகள்" கடந்த மாதம் படித்த நான்காவது புத்தகம்.ரஷ்யா நாட்டை சார்ந்த சிறுகதை ஆசிரியரான ஆன்டன் செக்காவ் அவர்களுடைய சிறந்த சிறுகதைகளின் தமிழ் தொகுப்பு. எழுத்தாளர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் இக்கதைகளை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். மொத்தம் 12 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு தான் இந்த புத்தகம். பேருந்து பயணத்தில் வாசிக்க எதுவாக 100 பக்கங்கள் கொண்ட புத்தகம். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதம், இந்த கதைக்களம் எனக்கு புதிது. இதுவரை... Continue Reading →
புக்-மார்க் #3 யானை டாக்டர் 🐘📚🔖
புக்-மார்க் #3 யானை டாக்டர் 🐘📚🔖 கடந்த மாதத்தில் பேருந்து பயணத்தில் படித்து முடித்த மூன்றாவது புத்தகம் எழுத்தாளர் ஜெயமோகனின் "யானை டாக்டர்". யானை டாக்டர், இந்த தலைப்பை பார்த்தபோது... அது என்ன யானை டாக்டர் ? சரி படிச்சு தெரிஞ்சிக்குவோம் என்ற பேருந்தில் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க கொஞ்சம் கொஞ்சமாக அந்த கதை களத்துக்குள் சென்று விட்டேன். பொதுவாகவே யானை என்றால் பிடிக்கும், சிறு வயதில் தொடங்கி தற்போது வரை யானையை பார்த்துவிட்டால்... Continue Reading →
புக்-மார்க் #2 மதில்கள் 📚🔖
கடந்த மாதத்தில் படித்த இரண்டாவது புத்தகம் "மதில்கள்". இந்த புத்தகம் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய புகழ்பெற்ற ஒரு குறுநாவல். இதை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் கவிஞர் சுகுமாரன். 80 பக்கங்களுக்கும் குறைவான பக்கங்களை உடைய ஒரு குறுநாவல் தான் இந்த மதில்கள். 1965 ஆம் ஆண்டு மலையாளத்தில் "மதிலுகள்" என்ற தலைப்பில் வெளியான இந்த புத்தகத்தை தமிழில் "மதில்கள்" என்ற தலைப்பில் வெளியிட்டார் சுகுமாரன். கடந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய பொழுதில்... Continue Reading →
புக்-மார்க் #1 தோட்டியின் மகன் 📚🔖
ஒவ்வொரு வருஷமும் நடக்கிற சென்னை புத்தக கண்காட்சி போகிறப்போ எல்லாம் என்ன புத்தகம் வாங்கனும்னு ஒரு ஐடியா இல்லாம தான் போவேன். அங்க ஒவ்வொரு ஸ்டாலா போய் பார்க்கிறப்போ சில புத்தகங்களோட அட்டைப்படம், தலைப்பு அல்லது முன்னுரைன்னு எது ஒன்னு என்னை கவர்ந்திழுக்குதோ அந்த புத்தகத்தை வாங்கிருவேன். அப்படி வாங்கின ஒரு புத்தகம் தான் இந்த "தோட்டியின் மகன்" புத்தகம். இந்த தலைப்புல புத்தகத்தை சென்னை புத்தக கண்காட்சியில பார்த்தப்போ உடனே வாங்கிட்டேன். இந்த வார்த்தை "தோட்டி"... Continue Reading →
புக்-மார்க் 📚🔖
வணக்கம் மக்களே.. ரொம்ப நாளுக்கு அப்புறம் திரும்பவும் ஒரு எழுத்து பயணம் ஆரம்பிச்சாச்சு. இதுவரை சினிமா, டிவி சேனல்கள், சிறுகதைகள், தொடர்கதைன்னு எழுதிட்டு இருந்தேன். இப்போ எழுதப்போறது நான் படித்த புத்தகங்கள் பற்றிய விஷயம். இதை விமர்சனம் அப்படின்னு சொல்லிட முடியாது.. அந்த புத்தகங்களை பற்றிய என்னுடைய பார்வைன்னு சொல்லுறது தான் சரியா இருக்கும். இவ்வளவு நாள் இல்லாம இப்போ ஏன் இதை எழுதுறேன் அப்படின்னா இப்போதான் புத்தகம் படிக்கவும், அதை பற்றி ஆலோசிக்கவும் நேரம் கிடைச்சிருக்கு.... Continue Reading →