
ஆன்டன் செக்காவ் ஆகச் சிறந்த கதைகள்”
கடந்த மாதம் படித்த நான்காவது புத்தகம்.
ரஷ்யா நாட்டை சார்ந்த சிறுகதை ஆசிரியரான ஆன்டன் செக்காவ் அவர்களுடைய சிறந்த சிறுகதைகளின் தமிழ் தொகுப்பு. எழுத்தாளர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் இக்கதைகளை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்.
மொத்தம் 12 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு தான் இந்த புத்தகம். பேருந்து பயணத்தில் வாசிக்க எதுவாக 100 பக்கங்கள் கொண்ட புத்தகம். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதம், இந்த கதைக்களம் எனக்கு புதிது. இதுவரை நான் படித்த புத்தகங்கள், கதைகள் எல்லாம் எனக்கு தெரிந்த வரையில் உள்நாட்டை கதைக்களமாய் கொண்டவை. அதுனால் என்னவோ தெரியவில்லை இந்த கதையை படிக்கும்போது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருந்தது.
ரஷியாவின் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கை, ரஷிய மனிதர்களின் பெயர்கள் (அந்த பெயரை உச்சரிக்கவே சற்று கடினமாக இருந்தது), கதை சொல்லும் விதம், கதாபாத்திரங்களின் நிலை, உணர்வுகள் என எல்லாமே அந்நியமாக இருந்தது. இருந்தபோதிலும் ஒரு சில கதைகள் மனதுக்கு பிடித்து போனது.

இனி அவ்வபோது உலக எழுத்தாளர்களின் புத்தகங்களை படிக்க வேண்டும். அப்போதுதான் அந்த கலாச்சாரம், கதை சொல்லும் விதம், மனிதர்கள், அவர்களில் மனநிலை , உணர்வுகளை அறிந்து கொள்ள முடியும்.
மீண்டும் அடுத்த புக்மார்க் பகுதியில் சந்திப்போம்.
நன்றி வணக்கம் 🤘🏼
~ ராக்ஸ்
Leave a Reply